Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, April 7, 2010

சானியாவும் சோஹபும்

முகம் தெரியாமல் கல்யாணம் செய்வது எவ்வளவு பாவம்?

சோஹாப் மாலிக் ( பாகிஸ்தான் கிரிக்கெட் வீரன் ) அவர்களை கேளுங்கள்.

ஆயிஷா சித்திக்கிஎன்ற பெண்ணை இன்டர்நெட் செட்டில் பார்த்து ( ? டுபாக்கூர் டிஸ்கோ படமாம் - தங்கை ஆயிஷா ?) பேசி, டெலிபோனில் கல்யாணம் ( நிக்க ) ... என்ன கொடுமை சரவணன் இது.. பெயர் வேறு பெயராம் ( இன்றும் கூட அவர்கள், தங்கையின் பெயரை சொல்லவில்லை - வீட்டில் கூப்பிடுவத ஆயிஷா, வெளியே என்ன?)

ஆக மொத்தம் தங்கையின் படங்களை உபயோகித்து, இன்டர்நெட் மூலம், ஒரு புகழ் பெற்ற வீரனை (? ) ஏமாற்றி கரம் பிடித்து - பணம் பண்ணும் நோக்கு இல்லை என தெரிகிறது... எவ்வளவு பெரிய தப்பு. கஷ்ட காலம்.

நல்லா வேளை டிவோர்ஸ் கொடுத்துவிட்டார். பதினைந்தாயிரம் ரூபாயில், வேலை முடிந்தது. மக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உள்ளது எனில், அது யார் அந்த நிஜ ஆயிஷா ( படத்தில் இருந்தவர் )... படமும் இனி இன்டர்நெட்டில் வெளி வராதாம்.

சானியா மிர்சாவும், சோஹரிப் என்ற லண்டன் வாழ் இந்தியரை ( பாட்டியின் உடல் நிலை கருதி ) நிச்சயம் செய்தார். என்ன காரணம் தெரியல. இப்போ விட்டு விட்டு, சோஹப்பை கல்யாணம் செய்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை. வாழ்க.




மேலும் மசாலா படிக்க இங்கே கிளிக்குங்கள்.

Thursday, March 4, 2010

ஒழுக்கம்

கம்யுனிஸ்டு ப்ளாகர் ஒருவர் பதிவை படித்து ஒரு கமன்ட் போட்டேன்.

அவர் அனுபவித்து எழுதியதை பார்த்தால் - ஒழுக்கசீலர்கள் அவர் கட்சிக்காரர்கள் என தெரிகிறது! :-)

கல்கத்தாவில் பிறந்த வளர்ந்த நான், கம்யுனிச்டுக்களை பற்றி நன்கு அறிவேன்.

சங்கம், செயலாளர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டு, அப்படியே தலைவர், முடிந்தால் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி என காசுக்கு ஆசைப்படும் ஆட்களையும் தெரியும். மறைந்த அஜீத் பாஞ்சா மாதிரி ( குடும்ப நண்பர் ) பதிவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்களையும் தெரியும்.

சங்கம் என்று உழைத்து விட்டு, தனி மனித ஒழுக்கம் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட ஆட்களையும் தெரியும்.

சங்கம் அமைத்துக்கொண்டு வேலை செய்பவர்களையும் ( கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் ) வேலை செய்ய வைக்காமல் ) அவர்கள் நலனுக்காக மற்றவர்கள் துன்புறுத்தும் ஆட்களையும் தெரியும்.

மதுரையில் எம்.பி ஆக இருந்த மறைந்த ஒரு கம்யுனிஸ்டு என்னை தேடி ஒரு முறை வந்திருந்தார். சிபாரிசு செய்ய. கான்றேக்டுக்காக. என்ன கொடுமை அய்யா? என் கொள்கைக்காக நான் முடியாது என்றவுடன், தூக்கியடிக்கபட்டேன். ஆளுங்கட்சி உபயம்!

அவர்களை பற்றி நீங்கள் எழுத விழைகிறேன்.

Tuesday, December 2, 2008

புரியாத புதிர்

கண்டோலீசா ரைஸ் எதற்காக இந்தியா வருகிறார்? அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர், பில் கிளின்டன் (ஆமாங்க புஷ் சொல்லலே) சொன்னதற்காக இந்தியா வருகிறார்... போர் நிறுத்தம், இன்னும் ஆரம்பிக்காத ஒன்று.

லண்டனில் இருக்கும் அவர், பாகிஸ்தான் இந்தியாவிற்கு நல்லா ஆதரவு கொடுக்க வேண்டும் என்கிறார்.

ஒபாமாவும் ஹில்லரி கிளிண்டனும், இந்தியா பாகிஸ்தான் மீது குண்டு போடுவது (தீவிரவாதிகள் மேல் - அப்படி என்று சொல்லி) தான் நல்லது என்கிறார்கள். பயந்து?

சர்தாரியும், தீவிரவாதிகள் அக்கிரமம் செய்தால், பாகிஸ்தானியர்கள் என்பதால், எங்களை மிரட்ட வேண்டாம் என்கிறார்.

"சமீபத்தில்" 1971 பங்களாதேஷ் வாருக்கு பிறகு, மீனும் "மிக சமீபத்தில்" கார்கில் போர் 1999 நடந்தது. அதற்கும் அரசியல்வாதிகளுக்கும் பாகிஸ்தானியர்கள் சம்பந்தமில்லை .எஸ்.. தான்.. என்றார்கள்...

இது ஒரு புரியாத புதிர்!

Sunday, November 30, 2008

அரசியல் வாரிசுகள்

வாரிசுகள் யார் என்ற கேள்வி?

குடும்பங்களின் ஆக்கிரமிப்பு...

போன்றவை, தமிழ்நாடு கட்சிகள் சாபம்.

நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?

கட்சி மாறிய பிரபலங்கள் பற்றி எழுதினீர்களா?

தொடர்புடைய ப்லோக் "இதுதான் கட்சிகளின் கதை!"

Saturday, October 11, 2008

பெண்களும் அரசியலும்

சாரா பாலின் பற்றி எல்லோரும் ஒரு மாதிரி பேச... ஒரு கவர்னர் ஆக வாய்ப்பு பெற்றவர் என்ற முறையில் ஆச்சிரியப்பட வைக்கும் பெண். முன்னாள் அலாஸ்கா அழகி. 1984.

IMAGE: Gov. Sarah Palin

அவர்
ஒன்று நன்றாக பேசவில்லை, ஜோ பிடேனோடு பேச்சு போட்டியில் ;-) சொதப்பினார். அவர் ரஷ்யாவை பற்றி சொன்னது நகைப்புக்கு உரியது.

இப்போது அவர் மீது ஒரு குற்றச்சாட்டு. நிருபணம். தேர்தலில் அவருக்கு ஒருதடை ஆகலாம். நிற்பாரா, மாறுவாரா?



இங்கே படியுங்கள்.

அந்த குற்றச்சாட்டு, அவருடைய முன்னால் மச்சானை, கூட பிறந்தவளின்முன்னால் கணவன், போலிஸ் (ஸ்டாட் ற்றோப்பர்) வேலை விட்டு தூக்கியுள்ளார். சாட்சி நிரூபணம். எதாவது ஒரு பதில் குடுத்தாலும், அமெரிக்கர்கள் மனதில் நிற்க மாட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் என்று அமெரிக்காவில் நிலைத்து இல்லை. ஜெயில் தான்.

உதாரணம் ரிச்சர்ட் நிக்சன். வாட்டர் கேட். டெமோக்ரடிக் அலுவலகத்தில், டாலர் நோட்டு கற்றைகள் வைக்க உத்தரவு இட்டவர். குற்றம் நிரூபிக்கபடத்தால், அமேரிக்கா அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

அப்புறம், சொந்த காரணத்துக்காக, பில் கிளிண்டன், மோனிக்கா லுவின்ச்கியுடன் சல்லாபத்தில் மாட்ட, அமேரிக்கா அதிபர் பதவியிலிருந்து தூக்கி அடிக்க ஒரு வாய்ப்பு எதிர் கட்சிகளுக்கு...
வாய் புணர்ச்சி என்று ஒரு வித்தியாசம் காட்டி, அதில் தப்பித்தார்.

என் நண்பர் ஒருவர் அவரை (
பில் கிளிண்டன்)ஒரு மணி நேரம் பேச, வாஷிங்டனில், அறுபதாயிரம் டாலர் கொடுத்து அழைத்தார். ஒரு பெரிய நிறுவனம் என்றால், வெரி டிபாறேன்ட்.



Saturday, October 4, 2008

டாட்டா சொன்னது சிங்கூருக்கு பய் பய்

சிங்கூர் அப்படி தான் சொல்வார்கள்... ஆங்கிலத்தில் சிங்கோர் ஆனது...

மமதா அட்டகாசமாக, டாட்டா'வின் நானோ கார் தொழில்ஸாலை துரத்திவிட்டார். ஒரு லட்சம் ருபாய் கார் இந்தியாவின் அமைதிக்குப்ரோப்லேம் என்று நினைத்தாரோ என்னவோ. அவருடைய அரசியல் குணத்தால், இப்போது எல்லோர் வெறுப்புக்கும் ஆளாகிவிட்டார்.

டாட்டா'விற்கு தொளாயிரம் கோடி ரூபாய்கள் லாஸ். யார் வீட்டு சொத்து அது?

டாட்டா ஏன் அந்த இடத்தை எடுத்தது, என்ன காரணம்? வெஸ்ட் பெங்கால் இண்டச்ற்றியால் கார்போரெசன் இடம் முப்பது ஏக்கர் ஜ்யோதி பாசு காலத்தில் அங்கு வாங்கி போட்டார்கள்... அதனால் தான். அப்போதே அவர் சொல்லிவிட்டார், நகரத்துக்கு பக்கத்தில் தொழில் வளர, விவசாய நிலம் மாற்றம் தேவை என்று... 1977!

அப்புறம் ஒரு நூறு ஏக்கர் நிலம் புறம்போக்கு... தமிழ்நாட்டில் பீக்காடு என்று சொல்வது போல.

மக்கள் என்ன செய்வார்கள்?

எனக்கு தெரிந்த வரை எந்த நானூறு குடும்பங்கள், தொள்ளாயிரம் வேலைகள் வாங்கின, டாடாவிடம்.

இது போக எக்கருக்கு பத்து லட்சம் ருபாய் (மார்க்கெட் விலை பிறகு தான்ஏறியது) கொடுத்தார்கள். வாழ்க்கையில் அவர்கள் குடும்பம் பக்கத்தில் இடம்வாங்கி (அங்கே எங்கள் விவசாய நிலம் உள்ளது, ஒரு லட்சம் கூடகிடைக்காது, சின்கூரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் தான்... நீர் கம்மி)... அவர்களுடைய மாத வருமானம் டாட்டா கொடுத்து இருவருக்கு பத்தாயிரம். விவசாயத்தில் வருமா? பஸ் வசதி அதிகம் செய்தார்கள். வேறு ஊருக்கும் செல்லெலாம் அவர்கள்...

விவசாயத்தில் (மன்னிக்கவும் கம்பேர் செய்வது ஒரு உவமை மட்டும்) தொழில்ஸாலை மாதிரி சம்பாரிக்க முடியாது. அங்கு வரும் அரிசி, காய்கறிகள், கொஞ்சம் தூரம் தள்ளி பயிர் செய்து மக்களுக்கு கொடுக்கலாம். எத்தனை இடம் உள்ளது தெரியுமா? தண்ணீர் கெனால் ஒன்று மட்டும் வேண்டும்...

கார்ல் மார்க்ஸ்'இன் காபிடல் புஸ்தகம் ஒன்று மமதாவிர்க்கு கொடுக்கவேண்டும்!


http://www.graphicwitness.org/contemp/marxtitle.htm

Monday, September 22, 2008

இந்தியா அரசியல்

அரசியல், வாரிசு, கமிசன் போன்றவைகள் இல்லாமல் இருந்தால், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் நாற்காலி பிடித்து கொள்ளும் பயம் இல்லாமல் இருந்தால் நாடு சுபிசமடையும்.

அமெரிக்காவில் கோல்டன் கேட் பிரிஜில் ஒரு நாள் ஒரு குழந்தை விழுந்து விட்டாள் சிறு ஓட்டையில். உடனடியாக, மாநகராட்சி மன்னிப்பு கேட்டது. ஓரிரு நாட்களில் தவறு எல்லாம் சரி செய்யப்பட்டது.

ஹீரோ வொர்ஷிப் என்பது இந்தியாவில் ஒழிக்க வேண்டும்.

அப்போது தான், இப்போது நடக்கும் கூத்துகள் (காமடி நடிகர் ஹீரோ நடிகரை எதிர்த்து பேசுவது) இருக்காது.

சிறு துளி பெரு வெள்ளம். அதனால் தான் இந்த ப்லோக் இடுகை.

*****

என் ப்லோக் நண்பர்களே, திட்டி எழுதினால் ஆட்டோ அனுப்பும் காலம் இது.

நல்ல வேளை, நான் நடு நிலைமையோடு இருக்கிறேன்.

Saturday, August 30, 2008

சீரியசான போட்டி.. எதாவது செய்யணும் பாஸ்!

சீரியசான போட்டி..

எதாவது செய்யணும் பாஸ்!

படித்த போது மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.

உருப்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. (இதற்கும் தீட்சை பெற்றவன்)

இயற்கையே, பிகாரிலும் , வடக்கு பெங்களூரிலும் தண்ணீரால் கொடுமை செய்கிறது. குளத்தை அழித்து மனிதர்கள் வீடு கட்டுகிறார்கள். குகைகளுக்குசென்று விடலாமா? பரிவர்டன் போல கட்சி ஆரம்பித்து ஒரு கை பார்கலாமா? எனக்கு தெரிந்த வரை விஜயகாந்தும், இப்போது சிரஞ்சீவியும் தன் உருப்படியாக பேசுகிறார்கள். அரசியல் மாற்றம் வேண்டும். ஜாதி ஒழியனும். அனைவருக்கும் உணவு கிட்டனும். ப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி (போதை குடிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளுங்கள்), குறைந்த பட்சம் ஒருவருக்கு தினமும் உதவி செய்யணும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யணும். (இந்திய பாஸ்ப்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு - அமெரிக்காவில் அல்லது வேறு வெளி நாடுகளில் கிரீன் கார்டு மற்றும் சிடிசன்கள் ஆக இருப்பவர்கள் மன்னிக்கவும் . என்னிடம் ஜோதிடம் கேட்டு, மில்லியன் டாலர் ஆக இருந்த வீடு இப்போது பாதி விலை ஆகிவிட்ட சோகம் குறைய பரிகார முயற்சி செய்யுங்கள்! வருடம் ஒரு முறை இந்தியா வந்து செல்லுங்கள் குடும்பத்தோடு!).

நிச்சயம் எதாவது செய்யணும். இபோதெல்லாம் நான் ப்லோகர்ஸ் எழுதுவதை பார்த்தால் ஒரு சமுதாய சிந்தனை உள்ள போல தெரிகிறது!
நன்றிகள்.

Thursday, August 28, 2008

ரஜினிக்கு அரசியல் வேண்டாமா?

ரஜினிக்கு அரசியல் வேண்டாமா?

விடை இங்கே.

நன்றாக தான் செய்துள்ளார், போல்லிங்.

இட்லிவடை - அவருடைய பெயர் ஒரு சீக்ரட்.

ஆக மொத்தம் ரசிகர்கள் கையில் தான் உள்ளது. (சிரஞ்சீவி செய்த மாதிரி)