லஞ்சம் இருக்கும் வரை, குறுக்கு வழியில் வேளை நடக்க வேண்டும் என்றிருக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி - டைம் பாம்ப்களாக இருக்கும் கட்டிடங்கள் ( கல்கத்தா இன்னொரு எச்சரிக்கை ) வாழ்க்கை கஷ்டம் தான். சென்னையில் ரங்கநாதன் தெருவிற்கு ஒரு மிக பெரிய ஆபத்து காத்திருக்கிறது. மக்கள் கூட்டம் மிகுந்த இடங்கள் அனைத்தும் டேஞ்சர் ஜோன் தான்.
அமெரிக்காவில் நான் முதலில் ட்ரைவிங் பழகிய போது - அடுத்த எக்சிட் ரூட் - எப்போது பார்த்து வைத்துக்கொள், பெயருடன் என்பார்கள்... கார் பழுதாகி மாட்டிக்கொண்டால், யாராவது அழைத்தால் சொல்லி, அவர்கள் உதவி செய்ய முடியும்.
பெரிய கட்டடங்களில் வாழ்வோர் அதில் வேலை செய்வோர் கவனமாக இருக்க வேண்டும். வெளியேற வழி, தன்னை காப்பற்றிகொள்ள என்ன வழி என்று பார்க்க வேண்டும். வழியை அடைத்து வைத்திருந்தால், அதனை உடைத்து வையுங்கள். சட்டம் உங்களை ஒன்றும் செய்யாது.
மற்றொரு முக்கிய விஷயம் பயர் ட்ரில் செய்ய வேண்டும். இது பஞ்சு தொழில் இருக்கும் இடம் மட்டுமில்லாமல், மக்கள் வேலை செய்யும் இடத்திலும் செய்ய வேண்டும்.
இதை அனைவருக்கும் பகிருங்கள்.
***
இதையும் படியுங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்
கோழிக்கோடு கே.லிட் ஃபெஸ்ட்டில்…
6 hours ago