Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Sunday, October 5, 2008

தலை சுற்றுகிறது

எதை பற்றி எழுதுவது?

தலை சுற்றுகிறது....

திருக்குறள், ஷேக்ஸ்பியர் கலந்த கலவை ஒன்று ... புள்ளி வைத்திருக்கிறேன். கோலம் போட வேண்டும்...

அதாவதுங்க - கான்புசன்ஸ் இன் உச்சகட்டம்.

வாழ்வாங்கு... பூரியும், கிழங்கும் போல, எனக்கு டின்னெர் தானுங்க இப்போ தேவை... பாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்...

வரட்டுமா?

Friday, October 3, 2008

ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள்

நன்றி! நன்றி!

சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில்... (நேற்று காலை பதினோரு மணி சுமாருக்கு ஐந்தாயிரம் ஹிட்ஸ்.. இப்போ ஆறாயிரத்து சில்லறை...)

அதாவது... ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள் ...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

என்னை நம்பி படிக்க வந்த வாசகர்க்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்..

வணக்கம்.

(ஒரு வாசகர் மெயில் பண்றார். இதுக்கு போய்'னு!)

Thursday, September 25, 2008

பேசாமல் இருந்து விடு

பேசாமல் இருந்து விடு என்பது என் நண்பர் ஒருவருக்கு தாரக மந்திரம்.

எப்போது....

கோபம் தலைக்கு மேல் செல்லும் போது. சிறு வயது முதல் அப்படி தானாம். சில வேலைகளை தூக்கியடித்து விட்டு வந்துள்ளார்.

மவுனம் ஒரு வகையில் பெரிய ஆயுதம் தான்.

எதாவது ஒரு நண்பர் தேவை இல்லாமல் வெட்டி பேசினால், மவுனம் தான்அந்த பேச்சை குறைக்கும்.

என் கவிதை ஒன்று கிழே...

மவுனத்தின் படிகளில்
கோபங்கள் தணியும்
வார்த்தைகளின் பிடியில்
அமைதி நிலவும்

திருக்குறளும் இப்படி சொல்கிறது...

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு


நல்லவை என்று தோன்றுபவை அப்படி ஒருகால் இருக்காது, அதே மாதிரிதீயவை என்று தோன்றுவதும், தீயவை ஆக இருக்காது. அமைதியாகஆராய்ந்து உன் மனதிற்கு பட்டதை, முடிவை எடுத்துகொள்.

Monday, September 22, 2008

சந்தேகம் கொள்ளாதே

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்!

ஒருவரை தேவையில்லாமல் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நம்பிக்கை வைத்தால், அதை சோதித்து பார்க்க கூடாது.

நண்பர்களிடம் காசு பணம் விசயத்தில்... சரியாக இருக்க வேண்டும். ஒரு நண்பன் நாற்பது லட்சம் ருபாய், ஒரு பெரிய பண்டல் டாலர் நோட்டு காட்டி, இதைமாற்றியவுடன் (ப்ரோப்லேம் டா பாங்கிலே, கொஞ்சம் கொஞ்சம் தான் மாற்றனும்) கொடுத்து விடுகிறேன் என்று சொன்னவர்... வருடம் ஆகியுள்ளது. கேட்காத வட்டி இல்லாவிட்டால் பரவாயில்லை, அசல் வந்தால் போதும். இடம் வாங்க வைத்திருந்த பணம் அது! நட்பு கெட்டுவிட்டது, என் போலிசு கோண்டக்டஸ் தெரியும். ஓடி விட முடியாது.

நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். அனுபவம். தேவையான இடத்தில் சந்தேக கொள்ள வேண்டும், குருட்டு நம்பிக்கை கூடாது.

இந்த கதை எழுதிய வடகரைவேலன், அனுபவமாய் சொல்கிறார்?
நல்ல கதை.
சார் நான் வேலைய விட்டு நின்னுக்குறேன்

Thursday, September 18, 2008

திருக்குறள் நட்பு

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்


யாராக இருந்தாலும், நம்பிக்கை வைத்து நட்போடு பழகினால், எந்த கஷ்டம் வந்தாலும் நிம்மதி தரும் தெளிவான நிலை இருக்கும். அப்படி இல்லாமல் சந்தேகம் என்ற நிலை கொண்டால், கூடா நட்பும் நல்ல நட்பாகும். பிறகு என்ன வரும்? இடும்பை = தொந்தரவு.

உடான்ஸ் நபர்களை விட்டு விட்டு, நல்ல நண்பர்களை பெறுவோம் இந்த ஜகத்தில்.

Friday, September 5, 2008

திருக்குறள் சொல்லும் பிச்சைக்காரர்கள்

“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று

இதற்கு பரிமேலழகர், “வறுமையுற்றிரப்பவர் இல்லையாயின், குளிர்ந்த இடத்தை உடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள், உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போலும்” என்றும், மு.வ அவர்கள், “இரப்பவர்கள் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்” என்றும் கூறுகின்றனர்.

அதாவது உலகின் இயக்கம், இரப்பவர்கள் இல்லையானால், செயற்கையானதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கும் என்பதாகப் பொருள் வருகின்றது. அப்படியானால் உலகம் தொடர்ந்து இயங்க பிச்சைக்காரர்கள் அவசியம் என்று வள்ளுவர் கருதுவதாக ஆகிவிடுகிறது.

அது தவறு. காக்கை இல்லாவிட்டால் எச்சம் என்று சொல்லப்படும் மீதமான உணவு யார் எடுப்பார்கள்? சுற்று சூழ்நிலை ஆதரித்து அவரவர் வாழ்கையில் ஆயிரம் மாற்றங்கள் வரும் என்று மக்கள் வாழ்கிறார்கள், என்பதாக கொள்ளலாம்.

பெண் கலவி எப்படி எப்போது

ஆண் பெண் உறவு கலவி உட்பட எப்படி எப்போது என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்கிறார்.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
கருணாநிதி :உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா :உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

ஆகா ஆணும் பெண்ணும் உடலும் உயிராகி வாழ வேண்டும்.

ஆனால் சில பெண்கள் நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்? தகாத உறவு கொண்டு, கட்டிய கணவன் மீதே போலிசு ஏவுகிறார்கள். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்டவர்கள், பெண்களை, கல்யாணம் செய்து கொண்டு, இந்தியாவில் விட்டு சென்று விடுகிறார்கள் (முக்கியமாக கல்ப் நாடுகளுக்கு). காம இச்சைக்கு ஆட்பட்டு பெண்கள் தகாத சகவாசம் கொள்கிறார்கள். கொல்லவும் செய்கிறார்கள்.

இங்கே படியுங்கள் தெரியும்.

வன் கொடுமை சட்டம் இது. தவறு இருவர் உடையது தான். அப்படி சம்பாரித்து என்ன கிடைக்க போகிறது? சினிமா பாடல் ஆசிரியர்கள் 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது' என்று எழுதி உசுப்புகிறார்கள்.

என் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் அக்கா ஒரு ஜோக் சொல்வார்கள், அமெரிக்காவில் புருஷன் குறட்டை விட்டாலோ, காற்று வெளியிட்டாலோ (குசு), தும்மினாலோ டிவோர்சே தான்!

பதிவுகளின் போதை

எனக்கு பதிவுகள் மிகவும் போதை ஏற்றுகிறது. (இப்போது புரிகிறது)

இதுவரை 40 பதிவுகள் இட்டுளேன். 1500+ வாசகர்கள் அல்லது முறை பார்த்துள்ளர்கள். நன்றி.

நேற்று சில கவிதைகள் எழுதினேன். (எழுதி பார்த்தேன் என்றும் சொல்லலாம்).

மீண்டும் முயற்சிக்கிறேன்.

நிறைய அன்பர்கள் வந்து பார்க்கிறார்கள். கமெண்ட் இடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை!

தினமும் சில பதிவுகள் டைரி மாதிரி இடுகிறேன்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ( குறள் எண் : 616 )

மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
கருணாநிதி :முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா :முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Thursday, September 4, 2008

மின்சாரம் ஒரு பதிவு

எப்படியெல்லாம் மின்சாரம் வாழ்கையை பாதிக்கிறது....

நண்பர் பரிசல்காரன் இங்கே எழுதுகிறார்....

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)

அது சரி, அரசாங்கத்திற்கு சொல்லும் யோசனைகள், உருப்படி ஆகுமா? இல்லைஅரசாங்க வேலைகாரர்கள் வேலை தான் செய்வார்கள?

அரசாங்க வேலை பற்றி - நான் கண்ட உண்மைகளை, ஒரு பதிவு போடுறேன். பதிமூன்றுவருடம் அரசாங்க வேலைக்காரன் ஆயிற்றே.


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
( குறள் எண் : 774 )
மு.வ : கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
கருணாநிதி :கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
சாலமன் பாப்பையா :தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

Wednesday, September 3, 2008

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


- ரமேஷ் டெண்டுல்கர் மற்றும் குடும்பத்தினர்





வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
( குறள் எண் : 50 )
மு.வ : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
கருணாநிதி :தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா :மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Sunday, August 31, 2008

மரத்தான் மாணவர் மரணம்

மரத்தான் மாணவர் மரணம்

சென்னையை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பவர்) மரத்தான் முடித்தவுடன் மயக்கம் அடைந்தார். பிற்பாடு, கார்டியாக் அட்டாக் மூலம் இயற்கை எய்தினார். மருத்துவ வசதி எதிர்பார்த்தபடி கிடையாது.

மருத்துவ சான்றிதல் இல்லாமல் ஓடியது தவறு!

மரத்தான் நடத்தியவர்கள் தான் காரணம்! (பெரிய எடத்து பொல்லாப்பு)


இந்த இடத்திற்கு இந்த திருக்குறள் பொருந்தும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

திருவள்ளுவர், காலம் கருதி செல்லும் உதவி உயிரை காப்பற்றும் என்று கூறியுள்ளார். இவர்கள் விளையாடிவிட்டனர்.

பெருமாள் வழிபாடு

பெருமாள் வழிபாடு பற்றி எம்.எஸ். புர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய புஸ்தகம் கூகிள் மூலமாக படித்தேன். அற்புதமான வரலாற்று சித்திரம். பல நூற்றாண்டு விளக்கம். கிறித்துவம் வராமல் இருக்க என்னவெல்லாம் தடை என்பதை கூட பெரியவர்ஸ் ஆராய்ச்சி செய்துள்ளனர். எல்லாம் ஜாதி வெறி தான். ஜெயமோகன் படித்துள்ளாரா என்பது தெரியவில்லை. கேட்க வேண்டும்.

நிமிர்ந்து நிற்கும நெஞ்சத்தை சொல்வது நாமம்.

அதிலும் இப்போது பல பிரிவுகள். வடகலை மற்றும் தென்கலை. ஜாதி மதம் எப்படி தான் செல்கிறது பார்த்தீர்களா ? கடவுளுக்கும் காதி? சீ ஜாதி... (காந்தி பற்றி எழுதி பாதிப்பு)

என் மனைவி ஐயர் ஆனதால் எல்லாம் செல்லுபடி ஆகிறது , கடவுள் பெயர் சொல்லும் போது.
சங்கரா சங்கரா காப்பாற்று! ஓம் நமோ நாராயணா!

திருக்குறள் கடவுள் வாழ்த்து கூட பெருமாளை வணங்கி தான் எழுதினார் என்கிறார்கள். பெருமாளை ஆதி பகவன் என்றும் சொல்வார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

Saturday, August 30, 2008

புணர்ச்சி இன்பம் திருக்குறள்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் முகர்ந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு. (அதாவது வயதிற்கு வந்த பிறகு)

திருக்குறள் மிக அழகாக சொல்கிறது, பெண்ணை முன் வைத்து. ஆனால் பெண்ணால் தான் எல்லா சுகமும் என்று சொல்வதில். சாமியார்களும் பெண் சமைத்து கொடுத்த உணவை தன் உண்பார்கள் என்பது மரபு. என் தாத்தா சொல்லியுள்ளார், என்னிடம் சங்கர மட பீடத்தில் அமர்பவர்கள் மலத்தை வாழை இலையில் தான் கழித்து, பெண்களால் எடுத்து புதைக்கப்பட வேண்டுமாம்! எங்கள் குடும்பம் தலித்தாக இருப்பினும், சங்கர மட விசுவாசிகள் காலம் காலமாய். மது மற்றும் மாமிசம் தொடமாடோம். (நான் கடவுள் விதிவிலக்கு, என்னில் நான் கடவுள் கண்டதால். அம்மா அம்ரிடானண்ட மாயி அவர்களிடம் தீட்சை பெற்றுள்ளேன்.) . ஆதி சங்கரர் சொல்லியுள்ளார் ஒரு நாள் தீட்சை பெற்ற மன வாழ்க்கை மைந்தர் சங்கர மடத்தை வழி நடத்துவார் என்று.

இதை சொன்னதில் எனக்கு பெண்கள் மீது கோபம் என்று சொல்ல வைக்காதீர்கள். பெண்ணிலிருந்து தான் ஆண் வ்ந்திருகிறான்.

Thursday, August 28, 2008

தோனிக்கு கேல் ரத்னா விருது

தோனிக்கு கேல் ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய அப்பா வாங்குகிறார்.

என்ன அன்பு! என் மனம் குளிர்ந்தது.

நிச்சயம் இது திருவள்ளுவருக்கு பிடித்திருக்கும்.

சான்றோன் என்ற குறள், படிப்புக்கு பதில் விளையாட்டு என்று வாசிக்கவும். தாய்க்கு பதில், தந்தை.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
( குறள் எண் : 69 )
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

Tuesday, August 26, 2008

புகழ்

தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிரார் புகழ் பற்றி?

புகழோடு, அதாவது புகழை நோக்கி ( குறைந்த பட்சம் குடும்பத்திற்குள் ) புகழ், பெருமை, பெயர், நாமகராணம், பெற்று வாழ்வது தான் மனிதருக்கு நல்லது.

என் நண்பர்கள் சொல்வது போல பிறந்தால் காந்தி குடும்பத்தில் பிறக்கணும், அவ்வளவு பெருமை உலகில் அவருக்கு. நான் அரசியல் சொல்லவில்லை. அஹிம்சா பற்றி சொல்கிறேன்.

தீமை கூடாது. வாழ்க்கை அடிப்படை.

Friday, August 22, 2008

மெய்ப்பொருள்

திருக்குறள் மிகவும் ஆழமானது. படிப்பது மிக கஷ்டம். சில குறள்கள் புரிந்த மாதிரி இருக்கும், பிறகு இல்லாமல் போகும். மனதில் நிற்காது. (நான் வேறு தாய் மொழி என்பதால் இன்னும் சிரமம்).

இந்த குறள் மிகவும் ரசித்த ஒன்று. என் நிலைமை தினமும் இது தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ன சொல்கிறார் என்றால் - யார் என்ன வேண்டுமானாலும் சொல்லாம் ஆனால், தானே சரியாக புரிந்து கொண்டால் தான் சரி உன் அறிவுக்கு நல்லது .

ஒவொருவரும் புரிந்து நடக்க வேண்டிய குறள் இது.

Tuesday, August 19, 2008

தசாவதாரம் - பொய்

'உலகில் எந்த சினிமாவிலும் யாரும் பத்து வேடமெல்லாம் போட்டு நடித்ததில்லை' என்பது தவறு. தமிழில் 1941ம் ஆண்டு வெளியான 'ஆர்ய மாலா' படத்தில் பி.யு.சின்னப்பா பத்து வேடங்களில் நடித்துள்ளார். 1950ம் ஆண்டு வெளியான 'திகம்பர சாமியார்' படத்தின் கதாநாயகன் எம்.என். நம்பியார் 12 வேடங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் 1913ல் வெளியான 'குயின் விக்டோரியா' படத்தில் 'ரோல்ஃப் லெஸ்லீ' என்பவர் 27 வேடங்களில் நடித்துள்ளார். 1915ல் வெளியான 'பர்த் ஆஃப் எ நேஷன்' படத்தில் 'ஜோஸப் ஹான பெர்ரி' 14 வேடங்களில் நடித்துள்ளார். 1929-ல் 'ஒன்லி மீ' படத்தில் 'லூபினோ லேன்' 24 வேடங்களில் நடித்துள்ளார். 1964ல் 'நோ கொஸ்டியன்ஸ் ஆன்சாட்டர்டே' படத்தில் ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்களில் நடித்துள்ளார்.

தலைப்பு தசாவதாரம் என்பது அந்தே படத்தை மார்க்கெட் செய்த நிறுவனம் பொய் சொன்னதிற்காக!

திருக்குறள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். ( குறள் எண் : 293 )

மு.வ : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

கருணாநிதி :மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

சாலமன் பாப்பையா :பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.

Tuesday, August 12, 2008

கோபம் திருக்குறள் நினைவு

கோபம் திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.


மேலே உள்ள குறள், சிலருக்கு பொருந்தும்.

கோபம் தணிக்க, சிலர் ப்லோக் எழுதுறார்கள். பின்னூட்டம் எழுதுறார்கள்.

அந்தோணி ரோப்பின்ஸ் சொல்வது போல, நீங்கள் கோபம் கொண்டால், யாராவது பற்றி, ஒரு பேப்பரில் எழுது, உடனே கிழித்து போட்டு விடுங்கள். கோபம் தணியும்.

அதே தொழிலாகி விடக்கூடாது. தொழில் தவிர். நானும் இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்த, ப்லோக் போடுகிறேன்.

ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் கணினி முன்னால் செலவிடுகிறேன். அதனால் சில சமயம் டைம் பாஸ் ஆக தமிழ் எழுத்தாளர்கள் வலை பதிவுகளை தேடி படிப்பேன்.

ஒரு நினைவு. ௨005 இல், பொங்கல் சமயம், கல்கி கிருஷ்ணமுர்த்தியின் பொன்னியின் செல்வன் பதினான்கு மணி நேரத்தில் படித்து, சென்னை நண்பர்கள் வீட்டிற்கு செல்லாமல், கோபம் வரவழைத்து கொண்டேன். லீவ் கிடைக்க அவ்வளவு கொடுமையான நேரம் அது. லயித்து படித்தேன். மராட்டி தமிழ் காம்பினேசன் என்பதால், நண்பர்கள் வீடு தேடி செல்வது வழக்கம். மனைவி உறவினர்கள் காணும் பொங்கலுக்கு வருவார்கள்.

நண்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இரவு ஒன்பது மணி சுமாருக்கு, ஒரு நாற்பது பேர் சாப்பிடும் அளவு பொங்கல் கொண்டு வந்தனர். நூறு கரும்பு இருந்திருக்கும். இரவு நடு நிசி வரை, பிச்சைகாரர்களை தேடி தேடி பொங்கல் கொடுக்க ஒரு வழி ஆகிவிட்டது.

எனக்கு தெரிந்த சிலர் இப்போது ப்லோகே போடுகிறார்கள் கோபம் தணிக்க. அல்லது பின்னூட்டம் போட்டால் அழிப்பு செய்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்!