Sunday, August 31, 2008

பெருமாள் வழிபாடு

பெருமாள் வழிபாடு பற்றி எம்.எஸ். புர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய புஸ்தகம் கூகிள் மூலமாக படித்தேன். அற்புதமான வரலாற்று சித்திரம். பல நூற்றாண்டு விளக்கம். கிறித்துவம் வராமல் இருக்க என்னவெல்லாம் தடை என்பதை கூட பெரியவர்ஸ் ஆராய்ச்சி செய்துள்ளனர். எல்லாம் ஜாதி வெறி தான். ஜெயமோகன் படித்துள்ளாரா என்பது தெரியவில்லை. கேட்க வேண்டும்.

நிமிர்ந்து நிற்கும நெஞ்சத்தை சொல்வது நாமம்.

அதிலும் இப்போது பல பிரிவுகள். வடகலை மற்றும் தென்கலை. ஜாதி மதம் எப்படி தான் செல்கிறது பார்த்தீர்களா ? கடவுளுக்கும் காதி? சீ ஜாதி... (காந்தி பற்றி எழுதி பாதிப்பு)

என் மனைவி ஐயர் ஆனதால் எல்லாம் செல்லுபடி ஆகிறது , கடவுள் பெயர் சொல்லும் போது.
சங்கரா சங்கரா காப்பாற்று! ஓம் நமோ நாராயணா!

திருக்குறள் கடவுள் வாழ்த்து கூட பெருமாளை வணங்கி தான் எழுதினார் என்கிறார்கள். பெருமாளை ஆதி பகவன் என்றும் சொல்வார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

No comments: