ஊனம் எல்லாம் தூசு
மனதளவில் தான்
கைத்தடியோ சக்கர நாற்காலியோ உள்ளது
உதவிக்கு நண்பர்கள்
வீட்டிலே மனைவி
குழந்தைகள்
கீழ் ஜாதி என்ற ஊனம்
மிக கொடியது!
மகள் கேட்கிறாள்
அப்பா அம்மா மேல் ஜாதி என்று சொல்கிறாள்
அப்படியானால்
நீங்கள் என்ன தொடக்கூடாதவர்களா ?
புரியவில்லை
சமுகம் என்ன செய்துள்ளது மனிதர்களின் மனசை?
செருப்பாய் உழைத்து
செருப்புகள் தைத்து கொடுத்த குடும்பத்தில்
புத்திரர்களாக பிறந்தது
குற்றமா?
தலித் என்ற வார்த்தையால்
ஒளிந்து கிடக்கும்
பரிதாபம்
எங்கு போய் சொல்வது?
என் மனதில் ஊனம்.
நூலகம்- அறிவும் அதிகாரமும்
15 hours ago
No comments:
Post a Comment