எனக்கு பதிவுகள் மிகவும் போதை ஏற்றுகிறது. (இப்போது புரிகிறது)
இதுவரை 40 பதிவுகள் இட்டுளேன். 1500+ வாசகர்கள் அல்லது முறை பார்த்துள்ளர்கள். நன்றி.
நேற்று சில கவிதைகள் எழுதினேன். (எழுதி பார்த்தேன் என்றும் சொல்லலாம்).
மீண்டும் முயற்சிக்கிறேன்.
நிறைய அன்பர்கள் வந்து பார்க்கிறார்கள். கமெண்ட் இடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை!
தினமும் சில பதிவுகள் டைரி மாதிரி இடுகிறேன்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ( குறள் எண் : 616 )
மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
கருணாநிதி :முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா :முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
ஐந்து முகங்கள் – கடிதம்
1 day ago
No comments:
Post a Comment