Friday, September 5, 2008

திருக்குறள் சொல்லும் பிச்சைக்காரர்கள்

“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று

இதற்கு பரிமேலழகர், “வறுமையுற்றிரப்பவர் இல்லையாயின், குளிர்ந்த இடத்தை உடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள், உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போலும்” என்றும், மு.வ அவர்கள், “இரப்பவர்கள் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்” என்றும் கூறுகின்றனர்.

அதாவது உலகின் இயக்கம், இரப்பவர்கள் இல்லையானால், செயற்கையானதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கும் என்பதாகப் பொருள் வருகின்றது. அப்படியானால் உலகம் தொடர்ந்து இயங்க பிச்சைக்காரர்கள் அவசியம் என்று வள்ளுவர் கருதுவதாக ஆகிவிடுகிறது.

அது தவறு. காக்கை இல்லாவிட்டால் எச்சம் என்று சொல்லப்படும் மீதமான உணவு யார் எடுப்பார்கள்? சுற்று சூழ்நிலை ஆதரித்து அவரவர் வாழ்கையில் ஆயிரம் மாற்றங்கள் வரும் என்று மக்கள் வாழ்கிறார்கள், என்பதாக கொள்ளலாம்.

No comments: