ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் - அரசியலால் எதையும் சாதிக்க முடியும் என்று.
இப்போது நாட்டுக்கு தேவை அண்ணா அசாரே போன்றவர்கள். ( சனிக்கிழமை அவரை சந்திக்கிறேன், பெங்களூரில் )
சிதம்பரம் மற்றும் அமைச்சரவை சகாக்கள் எப்படி, டி.ஒ.டி மற்றும் ட்ரை'யின் ஒப்புதலுக்கு பொறுப்பாவார்கள் என்ற கேள்வி இன்னும் நிற்கின்றது. அது தான் நிலைக்கும்.
நம் வீட்டு பணிப்பெண்கள், சாதாரண மக்கள் இப்படி வெனிசுவேலா போன்று குறைவான விலையில் பேசுவது என்பது பெருமைக்குரிய விஷயம். ராசா அந்த விதத்தில் நல்லது பண்ணியிருக்கார். சுவாமி இதற்கு பதில் சொல்லவில்லை.
இப்போது தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் லைசென்சுகள் திரும்ப கிடைத்துவிட்டதே - மீண்டும் இரண்டு லட்சம் கோடிகள் ( என்னை பொறுத்த வரையில் ஒரு எழுபதாயிரம் கோடிகள் கிடைககும் ) 540MHz அலைகீற்றுக் கோவைகளுக்கு கிட்டும். யாருக்கு வரும் கோபம்?
நிரா ராதியா போன்றவர்கள் இருந்தும், அரசியல் ஆட்கள் தப்புவது எப்படி?
மக்கள் மனதில் பி.ஜே.பி வந்து விட்டது. இனி அவர்களை யாராலும் பிரிக்க முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் நினைக்க, அத்வானி இவ்வளவு சைலண்டாக இருப்பதன் ரகசியம் - டோகொமொவிற்குமட்டுமே தெரியும். அருண் ஜெயித்ளியிடம் ஒரு சரியான பதில் இல்லே.
நாளை பாருங்கள், கவர்ந்மேன்ட்டுக்கு சவால்... அணைத்து மந்திரிகள் மீது சைனி அவர்கள் எரிந்து விழுந்து, ராஜாவின் மீது கேஸ் மட்டும் நடக்கும் என்பார். அவரும் கூடிய சீக்கிரம் ( ஏப்ரில் 14 , 2012 அருகில் பெயில் ) வெளியில் வருவார். ராஜாவின் சனி எட்டாம் இடம் ஆட்டத்தில் ( கரக்ட் சார்ட் இன்னும் கிடைக்கலே May 10, 1963, Perambalur, Tamil Nadu சுமார் 9 காலை ), இருதயம் சம்பந்தம் பட்ட நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஸ்ட்ரெஸ் பேலன்ஸ் செய்யணும்.
சரி, இப்போது முப்பது லட்சம் புது வாடிகையாளர்களுக்கு என்ன பதில் கவர்ன்மென்ட் கொடுக்கும் (அதற்கு கேஸ் ரெடியாகுது ) அவர்கள் நம்பி எடுத்தது அதே விலையில் (பேகேஜ்) மாற்றம் தரனும் டெலிகாம் டிபார்ட்மென்ட். நடக்கும் சாத்தியம் உண்டா?
***
இதையும் படியுங்க.