Friday, January 2, 2009

2008 முதல் பத்து தமிழ் சினிமா - தொடர்

2008 முதல் பத்து தமிழ் சினிமா என்ற தொடருக்கு எழுத அழைத்த சகோதிரி வினிதாவிற்கு நன்றி.

என்னுடைய வரிசை இதோ.

10. குசேலன்
9.
ஜெயம் கொண்டான்
8. வாரணம் ஆயிரம்
7. சாது மிரண்டால்
6. வெள்ளி திரை
5.
பொய் சொல்ல போறோம்
4. அஞ்சாதே
3.
தசாவதாரம்
2. பூ
1. சுப்ரமணியபுரம்

மேல் வரிசை போக என்னுடைய சூப்பர் டாப் படங்கள்... ஜிரோ லெவல்!

திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் மற்றும் ஜே.கே.ரித்தீஷின் நாயகன்.

***

நான் இந்த "2008 முதல் பத்து தமிழ் சினிமா " தொடர் எழுத அழைப்பது...

ஜ்யோவ்ராம் சுந்தர்
நர்சிம்
யுவ கிருஷ்ணா (சும்மா டைம் பாஸ் மச்சி)

தமிழரும் கிளிநொச்சியும்

கிளிநொச்சி வீழ்ந்ததா? இல்லை இது ஒரு டுபாக்கூர் செய்தியா? மஹேந்திர ராஜபக்சே தான் சொல்ல வேண்டும். டிவியில் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள்.

ஜோதிடப்படி இது நம்பத்தகுந்த செய்தி என தெரிகிறது... சனியின் நல் பலம் குறையும் காலம், ஜனவரி 15 வரை.

கிரக நிலைகள் பார்க்கும் போது 2014 வரை புலிகள் தலைவர் இருப்பார். ராஜா யோகம் எல்லாம் கிடையாது.

சரி இதனால் தமிழருக்கு என்ன நன்மை?

டைம்ஸ் நவ் டிவி சேனல் சொல்லுகிறார்கள், இனி தமிழருக்கு போய் சேர வேண்டிய உதவி (டன் கணக்கில் தேங்கி உள்ளது...) சென்று சேரும் என்றார்கள். அங்கு பெட்ரோல் 2500 ருபாய் லிட்டர், தேங்காய் எண்ணெய் 1000 ருபாய். என்ன கொடுமை சரவணன் இது?

வைக்கோவின் பேட்டி மாற்றி மாற்றி காட்டப்படுகிறது. இந்திய ஸ்ரீலங்காவிற்கு உதவி செய்ய கூடாது என்கிறார்.

Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

எனது பதிவுபோதையின் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

= ரமேஷ் =

Sunday, December 28, 2008

பெருவெளி

பெருவெளி என்றால் அண்டம், கேலக்சி.

இந்த பெருவெளியில் (மில்கி வே) இருபது உலகம் - பூமி.

அருமையான தோசை போன்றது இந்த பெருவெளி.

புரியாத தமிழ் என்று நிறைய இருக்கிறது....

நிறைய பேர் எழுதுகிறார்கள்...

சினிமாவில், எல்லாம் இது நடைபெறாது.... நான் பார்த்த இரண்டு படங்கள், சென்ற வாரத்தில்...

The curious case of Benjamin Button என்ற படம், முதுமையில் தொடங்கி இளமையில் (குழந்தையாக) வந்த முடியும் ஒருவனின் வாழ்க்கை... பெஞ்சமின் பட்டன்... அருமை. ஒரு சிறுகதை காவியம் ஆனது...

திண்டுக்கல் சாரதி என்ற படம் பார்த்தேன். கருணாகரன் என்ற கருணாஸ் அருமையாக நடித்துள்ளார். ஒரு தமிழ்நாட்டு (அல்லது உலகத்தின்) மனதை படம் பிடித்துள்ளார்.

மனம் தான் முக்கியம், கலர் என்ன?

பெருவெளியில் இதெல்லாம், சகஜம்.