Friday, May 15, 2009

தேர்தல் நிலவரம்

பிரச்ன ஜோஷியம் படி காங்கிரஸ் 163 இடங்கள் எடுப்பார்கள். சென்ற தடவை விட கூடுதல்.

அப்புறம் ஈஸ்ட் டிரக்ச்சன் பார்திஸ் சப்போர்ட் பண்ணுவாங்க. சவுத் சப்போர்ட் நிச்சயம். _/\_

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்.

இங்கே ஒரு சேலஞ் உள்ளது. நான் விவரம் அனுப்பியுள்ளேன். பார்க்கலாம்! ஜோதிடம் ஒரு மன அமைதிக்கு என்று போய் , இன்று சேலஞ் நிலைமை. :-(

*********

சரி தமிழ்நாட்டில் எப்படி இருக்கும் நிலவரம்? கிட்டத்தட்ட 60 டு 90% சீட்ஸ் டி.எம்.கேவிர்ற்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ஜெயலலிதாவிற்கு மூஞ்சியில் கரி பூசுவார்கள்...

இது சொன்னபடி நடக்க வாய்ப்பு இருக்கிறது!

பொறுத்திருந்து பாருங்கள்.

கோலங்கள், நேரத்திற்கு தகுந்தமாரி மாறும். அப்போ ரிசல்டும் தான்.

***********

நண்பர் ஒருவர் மகன் தமிழ்நாடு ப்ளஸ் 2 எக்சாமில் பாஸ். கிரிக்கெட் என்று அலைந்துக்கொண்டு இருந்தான். அவர்கள் நம்பவே இல்லை. வரும் ஞாயிறு ஒரு பெரிய பார்டி தருகிறார்கள் சென்னையில்... பெற்ற மதிப்பெண்கள், 1100. எங்காவது இஞ்சினீர் சீட் நிச்சயம். கிண்டி காலேஜில், கிடைக்கலாம் 199 கட ஆப். வாழ்த்துக்கள் சுனில் அருண்குமார். ( அவரின் சித்தப்பா மகேஷ் ஒரு ஐ.ஏ.எஸ். )

சுனில் 90% வாங்குவார் என்று பிரசனம் பார்த்து கூறியிருந்தேன்.

Sunday, May 10, 2009

சில சிரிப்புகள் - எனக்கு வந்த மெயில்

திரையரங்க கடைவாசலில்...

"விஜயை மீட் பண்ணணுமா? coke குடிங்குங்க"

என்று சொல்லும் விளம்பரப் படத்தில் நம்ம அண்ணன் "இளைய தலைவலி"விஜய் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்த கோக் மாதிரி கூல்டிரிங்ஸில பூச்சிக் கொல்லி மருந்துங்க அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல கலந்திருக்கானுங்களாம்.அதெல்லம் இவனுக்குத் தெரியாது? இந்த மயிரும் நாளைக்கு அரசியலில குதிக்கப் போகுதாம். எப்படியா இந்த நாடு உருப்படும்?" என்று யாரோ சொல்லி நகர...

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

சொன்னது யார் என்று அறிய முயற்சித்தேன், முடியவில்லை.

எனக்கு கடைசியாக பார்த்த படம் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த படத்தின் பெயர்
"யாவரும் நலம்."

படம் பார்த்து அசந்துட்டேன் போங்க...

செத்துப் போனவங்க எல்லாம், ஒரு குறிப்பிட்ட வீட்டு டிவியில மட்டும்,அதுவும் சரியா ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவங்க வீட்டு டிவியில மட்டும் வர்ற தொடர் நாடகத்தில நடிக்கும் கதாபத்திரங்களா வருவாங்களாம்...

(சிரிக்காதீங்க)

காதுல பூ வைக்கிறத கேள்விப் பட்டிருக்கோம்.இந்த படத்தில தாராளமா டிவி கேபிள் வயரையே சுத்தி வீட்டுக்கு அனுப்புறானுங்க.

இந்த மாதிரி ஹைடெக் பிச்சைக்காரனுங்க இணையத்திலும் புகுந்தாச்சு.

அதுங்க எல்லாம் , வித விதமா இருக்கிற ஏதாவது ஒரு கடவுள் பெயரில , ஏதாவது ஒரு வாய்க்குள்ள நுழைய முடியாத பேர்ல இணைய தளத்த ஆரம்பிக்குதுங்க. அந்த கோயில் கணக்குல கிரிடிட் கார்ட் வழியா , பணம் கட்டினா,நம் வீட்டுக்கே பிரசாதத்தை அனுப்பி வைக்குங்களாம்.

நாம அத வாங்கி வீட்லேயே மொட்டைய போட்டுட்டு,நாமத்த நெத்தியில பூசிக்கிட்டு, அதுங்க கொடுக்கிற பிரசாதத்த வாய்ல வைச்சுக்கிட்டு "பக்தி பழமா" மாறி உக்காந்துகலாமாம்.

"இன்னும் எத்தனை நாளக்கிடா, எங்கள ஏமாத்துவீங்க?..."


"மரியாதை" என்ற படத்திற்குப் போயிருந்தேன்.

"இயக்குநர் விக்ரமன்" என்றால் கண்ணை மூடிக்கொண்டு வரவேற்கிற ஆள் நான்.

அதே மாதிரி அவரின் படப்பாடல்களை யோசிக்காமல் வாங்கிக் கேட்கிற ஆட்களில் நானும் ஒருத்தன்.

அவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை தான் காரணம்.

கதைக்காக அங்க,இங்க, ஏன் இங்கிலீஷ் படத்தப் பார்த்து காப்பியடிக்கிறது. அதெல்லாம் கெடையாதுங்க.

மனுசன் தன்னம்பிக்கையான ஆளு...

தன் படத்தை தானே காப்பியடிச்சுக்குவார்.

"வானத்தைப் போல,உன்னை நினைத்து...,சூர்யவம்சம்"...ன்னு பெரிய பட்டியலே நீளுது மீதிய நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க.

ரெண்டு விஜயகாந்த் இருக்காங்க,ஆனா உண்மையிலே ஹீரோ யாருன்னா நம்ம ரமேஷ் கண்ணா தான்!

படம் முழுக்க சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுக்கிட்டே போகிறார்.ஆங்கில படப்பாணி, ஒரே மாதிரி சிரிப்புத் தான் என்றாலும்,ரசிக்க,சிரிக்க முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் மாதிரி நாட்டுப் பற்றோடு வெளி வருகிற தேசிய வார ஏடுகளில் வந்த பழைய குப்பைகளை, அர்த்தமுள்ள நகைச்சுவைகளை(சிரிக்காதீங்க....!).

எப்படி ஒரு குப்பையும் ஒரு கலைஞனின் கைப் பட்டால் கலைப் பொருளாகுமோ,அந்த அதிசயம் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

சமூகம் பெண்ணை நடமாடும் அழகுநிலையமாகவும், ஆணை பணம் கொட்டும் ATM இயந்திரமாகத் தான் பார்க்கக் கற்றுத் தருகிறது.

காதல் கருகி,வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதில் வாழ்க்கையும், மனசும் கருகிப் போன என் தேசத்து இளைஞனுக்கு தனக்கு தெரிந்த மொழியில் ஆறுதல் சொல்லிப் போகிறது,இந்த படம்.

தனக்குள்ளே சிரிக்க, அழுகிற, பூப்பூக்கிற படைப்புக்கு சொந்தக்காரன், நம்ம விக்ரமன்.

அவன் படப்பாடல்களைக் கேட்கும் போது,காதுகள் இருந்த இடத்தில் காதுகள் மறைந்து,பூக்கள் பூக்கும்.

வீட்டில் எல்லோரையும் துரத்தி எங்காவது அனுப்பி விட்டு கதவு சன்னல்களை மூடிவிட்டு இவன் படப்பாடல்களை மட்டும் ஒலிக்க விட்டு கேளுங்கள்...

ரோசாபபூ... சின்ன ரோசாப்பூ...(படம்-சூர்ய வம்சம்) ஒலிக்க விட்டு ஒரு பிறவிக் குருடனை கேட்கச் சொல்லுங்கள்.அவனையே ஒரு ரோஜாப் பூவாக மாற்றும் சக்தி அந்த பாடலுக்கு உண்டு.

ஏனோ இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றம்.

வழக்கம் போல விக்ரமன் படங்களில் வரும் , மிகைப் படுத்தப்படாத வில்லன்களே இதிலும் .

காதலித்து ஏமாற்றும் மீனா கதாபாத்திரத்தின் மீது கூட கடைசியில் பரிதாபந்தான் வருகிறது.

நல்ல உத்தி!


அம்மாவின் சமையலை கிண்டலடிக்கும் காமெடி சற்று அதிகமாகவே வருவதால்,அம்மாவோடு படம் பார்த்தால்,உங்கள் அம்மாவின் கைகள் உங்கள் முதுகில் படமுடியாத தூரத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பத்தான் தப்பிக்க முடியும்.

பெற்றோர்களே, உங்கள் விருப்பங்களை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்காதீங்க.அவர்களை,அவர்களாகவே சுயமாக சிந்திக்க,முடிவெடுக்க விடுங்கள்.

பெண்கள் வெறும் சமையல் செய்யும் இயந்திரமல்ல,மனுசி!...

என்பது மாதிரியான நல்ல வசனங்களுக்கு பஞ்சமில்லை.

பல நேரங்களில் நாடகத்தனம் தலை தூக்கினாலும், அது ஒன்றும் குறையாகத் தோன்ற வில்லை.

கதாநாயகனே திரையில் தோன்றி கஞ்சா ( நான் கடவுள்) கேட்கிறான்.அப்படி ஒரு கிறுக்கு வேகத்தில் தமிழ் திரையுலகம் பயணிக்கும் போது...

அம்மா( விக்ரமன்) ஊட்டும் பால் நிலாச் சோறு எத்தனை பேருக்குப் பிடிக்கும்? என்று தெரியவில்லை.



சில கல் தொலைவில் நடக்கும் தமிழீழ மனிதப் படுகொலைகளைப் பற்றி,ஒரு சின்ன நேரடி, மறைமுக காட்சியோ,வசனமோ வைக்காமால் படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகிறது...!

போங்கடா நீங்களும் உங்க கலைகளும்...மனுசங்களாடா நீங்க...?



--
5/10/2009 03:26:00 PM அன்று விழி,எழு,செயல்படு! (foryouths) இல் *ஆதிசிவம்@சென்னை* ஆல் இடுகையிடப்பட்டது






இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல..
http://www.beyouths.blogspot.com/2009/05/blog-post_10.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA