Showing posts with label கடவுளை கொன்றவர்கள். Show all posts
Showing posts with label கடவுளை கொன்றவர்கள். Show all posts

Tuesday, September 23, 2008

கடவுளை கொன்றவர்கள்

என்ன எழுதலாம் என்று பார்த்தேன்
கமலஹாசன் நினைவினிலே
நேரம் என்று வந்தால் நம்பிக்கையும் வரும்
கடவுள் இருந்திந்தால் நன்றாயிருக்கும்

முகம் நிறைய தாடி வைத்து தோன்றினால்
அவர் எசுநாதராம்
அதனால் தான் இப்போது எல்லா மகான்களும்
சடை முடியோடு இருக்கின்றனரோ?

நீள அங்கி அணிந்து சாம்பல் பூசி
மத சின்னம் அணிந்து
உலக நன்மை அமைதி என்று பேசி வாழ்ந்தால்
அவரை போலே தான் இருக்கின்றனரோ?

புத்தர் எதுவும் வேண்டாம் என்று
மழித்துவீட்டார்
அதுவும் ஒரு அணிகலன் ஆயிற்று
அதையும் செய்கிறார்கள் சிலர்

உணவில்லா மனிதர்கள்
உபவாசம் என்றால்
கடவுள் எற்றுகொள்வாரா?
இல்லை கடவுளை தான் ஏற்றுகொள்வார்களா?

மத துரோகிகள் தான்
துவேசத்தோடு
உலகிலே இப்போது
கடவுளை கொன்றவர்கள்!