Tuesday, September 1, 2009

செப்டம்பர் மாதம்

எனக்கு செப்டம்பர் மாதம் என்றாலே குதுகுலம் தான். சாப்பாடு விசயத்தில், கொஞ்சம் பயத்தோடு இருக்கும் சமயம். சளி , காய்ச்சல் வராமல் இருக்க நல்ல விதமாக, அப்பளம், வடாம் இல்லாமல், மசாலாவோடு, இல்லாவிட்டால், குருமா வகைகள் கிடைக்கும், கார சாரமாக... அது தான் உலகம்!

முதன் முதலில் அமேரிக்கா சென்ற போது, ஆறேழு மாதங்கள் கழித்து, கட்டாயமாக, நியூ யார்க்கில் ப்ளு ஷாட் போட்டுக்கொண்டேன். இடுப்பில் சுருக்கென்று ஒரு குத்தல். பங்களாதேஷி டாக்டர் ஒருவர் என நினைக்கிறேன். என்னோடு பெங்காலியில் கஷ்டப்பட்டு பேசினார். ரொம்ப வருடம் முன்பு புலம் பெயர்ந்த குடும்பம்...

இந்த வருடம் நாங்கள் நியூ யார்க் - வாஷிங்க்டன் டி.சி... யு.எஸ்.ஏ. ட்ரிப் போக வேண்டியது, சுவையின் பளுவால் தடைப்பட்டது... குழந்தைகளுக்கு சென்னையே கத்தி என்று ஆனது.

அடுத்த வருடம் அல்லது, வரும் டிசம்பர் லீவில் ( ஸ்நொவொடு விளையாட... ) செல்ல ஏற்பாடு. நண்பி திவ்யா மற்றும் தங்கை குடும்பம் அங்கு இருப்பதால், இந்த முறை நியூ யார்க்கில் கொஞ்சம் தெரிந்தவர்களோடு சுற்றலாம்.

அப்புறம், இந்த செப்டம்பர் மாதம், ரியல் எஸ்டேட் பிசினஸ் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். சென்ற ஒரு வருடம் முழுதும் சம்பாத்தியம் பூஜ்யம். எதோ ஓடியது... ஆனால் பெங்களூர் காண்டேக்ட்ஸ் அதிகம் பெற்றேன். ஆனால் விலை தான் குறைக்கமாட்டேன் என்கிறார்கள்.

ஒரு பெரிய ஐ.டி. நிறுவனர் குடும்ப கல்யாண விஷேசத்திற்கு நண்பர்களோடு ஹோட்டல் அசோக் சென்றேன். சாப்பாடு படு மட்டம்! எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்? எல்லோரும் திட்டி சென்றார்கள்... பெருமைக்கு எதோ தின்ற மாதிரி... வந்தவர்களுக்கெல்லாம் அவர் எழுதிய புத்தகம் கொடுத்திருக்கலாம்... தாம்பூலம் என்று நிறைய யூஸ் பண்ணாத பொருட்கள்!

அர்த்த ராத்திரியில் குடை பிடித்தவர்களின் நிலை தான் ஞாபகம் வந்தது.