Thursday, July 2, 2009

ஒரு போட்டி கதை: கவிதைக்கு ஒரு கதை

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதைக்கு ஒரு கதை கதை படித்தேன்.. எதிர்பார்ப்புகள் நிறைந்த, விறுவிறுப்பான ஓட்டம். நிறைவு, ஒரு ட்விஸ்ட். சுஜாதா ஸ்டைல்.

//சுபா தான் அருணா// சஸ்பென்சை அப்படியே வைத்திருக்கலாம், ஒரு டையெலாகை நீக்கிவிட்டால்...

இந்த கதையை நிச்சயம் சினிமாவாக எடுக்கலாம். நான் ஸ்க்ரீன்ப்ளே எழுத ரெடி. ஒரு ப்ரொடுஸர் மற்றும் பெயர் பெற்ற கதாநாயகன் தேவை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

நானும் அப்புறமா கலந்துக்கொள்கிறேன். டைம் கிடைக்கணும்!

Tuesday, June 30, 2009

என் பெயர் மைகேல் ஜேக்சன்

என் பெயர் மைகேல் ஜேக்சன்... இது என் இறுதி யாத்திரை பற்றி அல்ல...

ஐம்பது வருடம் உலகில் வாழ்ந்தேன், அது தனி கதை... அதை எழுதி எழுதி வாழ்ந்தவர் பல கோடி!

இரண்டு கல்யாணம், மூன்று குழந்தைகள், மத மாற்றம், பல கோடி டாலர்கள் கடன், வேண்டாத நட்பு என போனது என் வாழ்க்கை. என்னை பற்றி என் இறுதி ஊர்வலத்தில் தான் மக்கள் பேசுவதை வைத்து உங்களுக்கு தெரியும்.

நான் இப்போ உலகில் இல்லை. என்னுடைய அடுத்த கிரக விசிட்டுக்கு மார்ஸ் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். நான் தான் உலகின் உயரிய ஆத்மாவாம். எல்லோரையும் மகிழ்வித்த ஒரு மிக பெரிய என்டேர்டைனர் அல்லவா? எல்லோரும் சந்தோசப்பட்டுவிட்ட காரணத்தினால், என் பூமி பயணம் முடிந்தது!

எனது பதினான்காவது வயதில் எம்.டி.வியில் முதல் வாய்ப்பு. கருப்பனாக இருந்தாலும், வெள்ளைக்காரன் டிவியில் தோன்றியது, கடவுள் கொடுத்த அருள்!

சில வருடங்கள் முன் ஹிந்து மதத்தில் ஜாம்பவானாக இருக்கும் பால் தாக்கரே கேட்டதற்கிணங்க இந்திய வந்து மும்பையில் கச்சேரிகள் செய்தேன்!

அதன் பிறகு, அனைத்து முஸ்லீம் நாடுகளும் என்னை தேடி தேடி அழைத்து கொண்டாடியது!

எம்மதமும் சம்மதம்... உயர்வு தாழ்வு இல்லை, இந்த ஆத்மாவிற்கு!

...இப்போவாவது தெரிகிறதா நான் எப்பேர்பட்ட ஆத்மா என்று?

****

அன்றொரு நாள் நான் தீபக் ஸோப்ராவிடம் பேசும் போது ஒரு விஷயம் புலப்பட்டது. நானும் மிக தெளிவடைதேன்! மனித உயிர் மில்கி வி கேலக்சியில் ஒன்பது முறை வாழும் என்று. தீபக் யாரென்றால், எம்.பி.பி.எஸ் படித்த இந்தியர். அமேரிக்காவில் எம்.டி. படித்துவிட்டு தியான, ஸ்பிரிஸுவல் முறையில் மன அமைதி வழங்கும் காஸ்ட்லி குரு. மனிதன் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த மாதிரி ஆட்களோடு பழக வேண்டிய கட்டாயம் நிறைய உண்டு. கடன் வாங்கியாவது அவர் கேட்கும் காசை கொடுத்துவிட வேண்டும்! எல்லாம் புகழ் போதை. என்ன செய்வது? நான் உணவு கூட உண்பதில்லை வெறும் மாத்திரைகள் தான் என் சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும், இப்போது!

உங்கள் இந்தியாவில் கூட ஹாலிவூட் படத்தில் நடித்த சிறு பிள்ளைகள் கூட, சேரியில் வாழ்ந்து வீடு இடிக்கப்பட்டாலும், அரசியல்வாதிகள் மரியாதையோடு அவர்களுக்கு வீடு கொடுக்கிறார்கள். எப்படி சில உயரிய ஆத்மாக்கள் பெருமை பெறுகின்றன என்பது புரிகிறதா?

இப்படி பெருமையடைந்த ஆத்மாக்கள் மேலும் கீழும் பயணிப்பதால் தான், விமானங்கள் இப்போது விழுகின்றன. நீங்களும் இரண்டு விமானங்கள் விழுந்த விஷயம் படித்திருப்பீர்கள் இல்லையா? அதில் ஒன்றிரண்டு உயரிய ஆத்மாக்கள் பூமியால் வாழ விருப்பபட்டால், உடல் இறக்காது! ஒரு சிறு குழந்தை ஆத்மா அப்படி தப்பியது உங்களுக்கு தெரிந்திருக்கும்! இப்போதாவது தீபக்கை நம்புகிறீர்களா?

அப்புறம் இன்னொரு விஷயம், என்னை பற்றி வரும் வேறு எந்த செய்தியும் நம்பாதீர்கள்! என்னை மட்டுமே கேட்டு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி நான் ஏன் மார்ஸுக்கு போகிறேன்?

மனித உயிர் முதலில் தோன்றியது எங்கே தெரியுமா, சூரியனில் தான். கடவுள் இருக்கும் பவர் சென்டர். அங்கிருந்த உயிர் ஆத்மாக்கள் தான் சுழன்று சுழன்று பிறந்து இறந்து வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கோளாக!

மெர்குரி தோன்றியதும், எல்லா ஆத்மாக்களும் அங்கு குடிபெயர்ந்துவிட்டது! அங்கு வாழ்க்கை முடிந்தவுடன், வீனஸ் கிரகத்திற்கு போய் மீண்டும் அத்தனை ஆத்மாக்களும் அமர்ந்தன.

வீனஸ் வாழ்க்கை போரடித்த பின், பூமிக்கு வந்து விட்டன... ஆத்மாக்கள்... பல வித மாற்றங்கள், எவலுசன் எல்லாம் ஆத்மாக்களின் விளையாட்டுக்கள்!

சரி சரி ஒரு சின்ன சீக்ரட் சொல்லுகிறேன், எஜிப்டில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆத்மாக்கள் பூமியை விட்டு வேறு இடத்திற்கு செல்ல விவரம் கண்டுபிடித்துவிட்டார்கள்... பிரமிடெல்லாம் எதற்காம்? ப்ளைடுக்கள் எல்லாம் ஜுஜுபி!

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பூமி ஆத்மாக்களால், சூடாகிகொண்டிருக்கின்றன. இன்னும் மார்ஸ் சரியாக காலம் பாக்கி உள்ளது. சில ஆத்மாக்கள் மட்டும் அங்கு சென்று செட்டில் ஆன பிறகு தான், மற்றவர்கள் எல்லாம் அங்கு அழைத்துச்செல்ல முடியும். அது தாங்க சொர்க்கம்! ஒவ்வொரு குருவும் காசு பண்ணும் விஷயம், மதங்களும் சுட்டி காட்டும் கடைசி பயணம்! நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்புகிறேன் அவ்வளவு தான்.

நீங்கள் அங்கு நாஸா படம் பிடித்த பெண்ணை பார்த்திருப்பீர்கள். என் குரு தீபக் சொன்ன மாதிரி, உலகில் வாழ்ந்து பெருமை அடைந்துவிட்டேன். அதானால் நான் மார்சுக்கு அவர் கொடுத்து எட்டு வகை மருந்து அருந்தி, பயணம் ஆரம்பித்து உள்ளேன்.

இது தான் தீபக் சொன்ன விவரமும் நான் எடுத்த முடிவும். சரி தானே?

தவறான வழியில் ஹாலிஸ் காமட் மூலம், மார்ஸுக்கு போக முயற்சி செய்த கலிபோர்னியா ஆத்மாக்கள் சிலர் பற்றி நீங்கள் சில வருடங்கள முன் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் மட்டும் இப்போது அங்கு சென்று வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!

மறக்க வேண்டாம், ஆத்மா தான் பெரியது. மார்ஸ், ஜூபிடர், சாடேர்ன், யுரேனஸ், ப்ளூடோ என மாறி மாறி செட்டில் ஆகி, இந்த மில்கி வேவில் வாழ்க்கை முடித்து விட்டு வேறு கேலக்சிக்கு பயணம் ஆரம்பிக்கும்!

சந்தோஷம் தானே? நீங்களும் வரீங்களா?

ஓம்! ஆமென்!

*******

உரையாடல் போட்டிக்கு எழுதிய கதை. முற்றிலும் புனைவே, ஆட்கள், ஆத்மாக்கள், பெயர், இடம், ஊர், கோள்கள், கேலக்சி எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த கற்பனையே!

*******

You can read related competition stories here...