Showing posts with label நாட்குறிப்பை ஒரு கதை செய்தால். Show all posts
Showing posts with label நாட்குறிப்பை ஒரு கதை செய்தால். Show all posts

Thursday, June 18, 2009

நாட்குறிப்பை ஒரு கதை செய்தால்

இன்று காலை எதேச்சையாக, நண்பர் ஒருவர் ட்விட் மூலம் ஒரு கதை படித்தேன்.

பெனாத்தல் சுரேஷ் என்பவர் எழுதிய "நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு"

நான் இட்ட கமன்ட்..

இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)

அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!

ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.

வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!