Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Tuesday, June 8, 2010

அனாமிகா

சுஜாதா எழுதிய கதை ஒன்று அனாமிகா. அருமையான சிறுகதை, சுனாமியை மையமாக வைத்து எழுதப்பட்டது.

***

இப்போது நியூஸ் அனாமிகா வீரமணி என்ற பெண், அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ( வார்த்தை எழுத்து தேனீ ? ) 2010 ஆண்டுக்கான பரிசு பெற்றுள்ளார்....



அவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு! ( அமெரிக்கர் )

இந்த வருடம் என் அக்காவின் மகளும் ( கடைசி ) போட்டியிட்டார். முன்னூற்றில் ஒன்று.

Monday, September 22, 2008

கவிதை

நான் ரசித்த கவிதை இங்கே... நரசிம் என்பவர் எழுதியது... (கேரளா பாதிரி பெண் கேஸ் நினைவுண்டா?)

விந்து சிந்தும் பேருந்து..

சுஜாதா சொன்னது புது கவிதை பற்றி "வார்த்தை அலங்காரங்கள் இல்லை கவிதை, பட் நினைவு அல்லது துடிப்பின் கோர்வை. பாடலாக இருக்க வேண்டாம். உரை நடை போதும்." (அச்சு அசலாக நான் சொல்லவில்லை இங்கே). நா.காமராசன் மற்றும் ஷாஹுல் ஹமீது போன்றவர்கள்ஒத்துகொண்டது இது. நிர்மல் வர்மாவும், பச்சனும் (அப்பா) புகுந்து விளையாடி உள்ளனர்.

எனக்கு நிஜமாக நா.முத்துக்குமார் பிடிப்பதில்லை. இன்னும் நிறைய சினிமா பார்த்துவிட்டு சொல்கிறேன். மு.மேத்தா புரிந்தும் புரியாமல் படித்தேன். அவர் பழைய காலத்திற்கு தகுந்த மாதிரி எழுதினார். (என் மனைவி கவிதைகளில் பல பரிசுகள் வென்றவர்!)

என்னிடம் இரண்டு வாலும்கள் கற்றதும் பெற்றதும், அதில் நேர் அசை, வெண்பா, தளை - பற்றி மட்டுமே எழுதியுள்ளார் சுஜாதா. மற்றது அவருடைய பெருமையான ஹைக்கூ. (எப்பொழுதும்)

நான் அவரிடம் சொன்னதில், அவர் ஹைக்கூ என்று ஒத்துகொண்டது..

போதையில் படுத்தேன் கவிதைகள் சொன்னேன்
கனவு


(இப்போ பதிவு ஆகி போச்சு )

ஜ்யோவ்ராம் சுந்தர் சொல்கிறார், இபோதெல்லாம் ஹைக்கூ வருவதில்லை, நிறைய பொய்கூ தான் (நன்றி: சுஜாதா) :-( என்று.

Sunday, September 7, 2008

திருட்டு குறும்படம்

கேபிள் சங்கரின் திருட்டு குறும்படம் ஆக்சிடென்ட்

பார்த்தேன் முகவும் மோசமான திரைக்கதை அமைப்பு. 1992 - 93 நியூ யோர்க்கில் திரைப்பட கலை கற்றுள்ளேன். பல குறும்படங்கள் இயக்கி உள்ளேன். எனது பெங்கால் நண்பரின் திரைப்படத்திற்கு திரைகதை அமைத்துள்ளேன் (என் பெயர் வராது). 'நரேடிவ் ஸ்டைல்' என்று ஒன்று உள்ளது, அதில் மட்டமான வகை இது . இதற்க்குள் விளம்பரம் வேறு!

பரிச்சல்காரனின் கொதிப்பு..

சுஜாதாவின் 'சசி காத்திருக்கிறாள்' என்ற கதையின் உல்டா (அட்டக்காப்பி) என்று கேள்வி! சங்கர் நாராயணன் திருமதி சுஜாதா அவர்களிடம் ஓசி பெர்மிசன் வாங்கி இருக்கலாம், வருமானம் வராத படம் என்பதால்.

சுஜாதாவோடு நான் ஒரு முறை பேசிய போது, 1% இன்ச்பிரேசொன் மாற்றுமொழிகளில் இருந்து எடுத்து கொள்வது தப்பில்லை என்றே கூறினார்.

உங்களுக்கு தெரியுமா 'ரோமியோ and ஜுளிஎட்' பெர்சிய (ஈரான்) நாட்டு 'லைலா மஜ்னூ' கதையை தழுவியது என்பது?
(சுமார் 400 வருடம் இடைவெளி)