Showing posts with label லெமன் சாதம். Show all posts
Showing posts with label லெமன் சாதம். Show all posts

Friday, October 17, 2008

காப்பி குடிச்சாச்சு!

காலை எழுந்து இப்போ தான் வாக்கிங் போயிட்டு வரேன்.

குளிச்சுட்டு கம்புடர் முன்னாலே உட்கார்ந்து மெயில் செக்.

அப்புறம் ப்லோக் செக்.

எட்டு மணி ஆக போறது. குழந்தைகள் ஸ்கூலுக்கு ரெடி.

டிபன் சாப்பிட போகணும்.

லெமன் சாதம். தயிர் பச்சிடி.

அதை செய்வது பற்றி ஒரு சமையல் குறிப்பு...

சாதம் வைத்து விடுங்கள். இரண்டு லெமன் வேண்டும் , நான்கு பேருக்கு. அதை ஸ்குவீஸ் செய்து ஜூஸ் எடுத்து வையுங்கள். சத்தத்தில் குழப்பி வையுங்கள்.

கொஞ்சம் வெங்காயம், கடலை பருப்பு மற்றும் நில கடலை போட்டு தளிப்பு செய்து, கொஞ்சம் மஞ்சள் போட்டு, மிக்ஸ் செய்து விடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள்.

லெமன் சாதம் ரெடி.

தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர் பச்சிடி அல்லது தேங்காய் சட்னி தான் சரி.

*****

சில சமயம் வாழ்க்கை இப்படி தான் போகிறது.

வேண்டியது கிடைப்பதில்லை!

இருப்பதை வைத்து ஓட்ட வேண்டியது தான்!

அப்புறம் ஒஜே சிம்ப்சன் என்ற அமேரிக்கா கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கை பற்றி படித்தேன்.

அவர் எழுதியே நான் செய்திருந்தால்... என்ற பத்தகம் விற்பனைக்கு வந்ததா தெரியவில்லை.

இப்போது வெளியே வர முடியாத அளவில், ஒரு கேஸ். திருட்டு கேஸ். அவருடைய விளையாடடு பரிசுகள் யாருக்கோ விற்றுள்ளார். அதை துப்பாக்கிவைத்து ஆட்களுடன் திருட முயற்சி வழக்கு. திருந்தவில்லை. எப்படியோ குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்து, ஒரு வழி செய்துவிட்டார்.

தெய்வம் நின்று கொல்லும்!