Friday, April 10, 2009

ஒரு கவிதை

கொந்தளிக்கும் கடல்
ஆர்பரிக்கும் காற்று
மவுனத்திர்க்கு விடுதலை
அலெக்சாண்டருக்கு வெற்றி
போரசுக்கு தோல்வி
தனிமையில் சங்கமம்
சயனைடு இல்லை
ரத்த ஆறு ஓடுமா?
ஈழமும் தாயகம்!

***********

புரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி

நான் ஆதரிக்கும் (அரசியல் இல்லைங்க இது) என்னுடைய ப்ளோகில் இருக்கும்லிங்கை பாருங்க..... சங்கமம் போட்டியில் பதிவர்கள் வெற்றி ......

இங்கே படியுங்க....

http://tamil.blogkut.com/contest0309.php

அதில் வெற்றி பெற்றவர்கள்.... (நம்ம கார்பரேட் கம்பர்! ஆறுன்னாலும் நச்!)

நர்சிம் கல்லூரி..கள் ஊறும் நினைவுகள்

முதல் கட்டத்தில், மக்கள் வாக்கில் அதிகம் மார்க் வாங்கியவர்களில்....

கல்லூரிப் பயணம்
: வெட்டிப்பயல்

வாழ்த்துக்கள்...

சரி நம்ம பரிசல்காரன் ஏன் நம்மளை போட்டிக்கு அழைக்கலே?

****************

சரி ஈயும் ஏரோப்ளேனும்
ஏன் இரண்டாம் கட்டத்திற்கு போகலே?

Tuesday, April 7, 2009

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

இந்த கேள்வி இன்று ஜர்னைல் சிங் சிதம்பரம் மீது ஷு வீசியவுடன் கேட்டது...

சிதம்பரமும் புஷ்ஷும் ஒன்றா?

யார் என்பதில்லை முக்கியம். ஏன்? பி.ஜே.பி ஆள் தான். (நானில்லை)

சிதம்பரம் அவ்வளவு தரக்குறைவு ஆனவரா?

என் தாத்தா சொல்வார், ஒருவர் மீது யாராவது செருப்பு வீசினாலோ அல்லது அடித்தாலோ, அவர் ஆயுள் கணக்கில் அனைத்து பாவமும் அழிந்து போகும்.

அப்போ புஷ் நல்லவர் ஆகிவிட்டாரா?

என்ன சொல்வது தெரியவில்லை!

அடுத்த பிரதம மந்திரி ஆகிறார் சிதம்பரம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

********

ஜர்னைல் சிங்கை பிடித்து செல்லும் பாதுகாப்பு மப்டி ஆட்களிடம் சிதம்பரம் சொன்னது, ஜெண்டிலா இருங்கப்பா ( அடித்தவரை பார்த்து யாராவது இப்படி சொல்லியிருப்பார்களா? )

நல்லவர், நல்ல பண்புள்ளவர். மன்னித்துவிட்டார்.

கேட்ட கேள்விக்கு தக்க பதில் கிடைத்து விட்டது.

ஐந்து பர்சன்ட் வாக்கு வங்கி, நிரம்பிவிட்டது.

இந்த படம் நெட்டில் பார்த்தது..... இவரிடம் யார் போய் சொல்ல, பேசும் பண்பு பற்றி?

Monday, April 6, 2009

கல்கத்தா நினைவுகள்

நூறு ஆண்டுக்கு முன் போட்டனிக்கல் கார்டன் எப்படி என்று ( ஹூக்லி அருகில், அழகோ அழகு)





மேலே உள்ள படம் - நீங்கள் அமிதவ் கோஸின் சீ ஆப் பாப்பிஸ் ( A Sea of Poppies ) நாவலை படித்தால், இன்னும் ஒரு படி மேலே சென்று... கண் முன் இன்னும் கொண்டு வந்து நிற்க வைக்கும்.

*********

இப்போது எப்படி?

அழகு மாறவில்லை. பராமரிப்பு கொஞ்சம் கம்மி அவ்வளவு தான்...

Botanical Gardens Calcutta

தேர்தல் 2009 முடிவுகள்

தேர்தல் 2009 முடிவுகள் பற்றி ஜோதிட வழியாக என்ன முடிவு இருக்கும் என்று சோதித்து பார்த்தேன், கிருஷ்ணமூர்த்தி படாடி ப்ரஸ்னா வழியில்...

கேள்வி: மீண்டும் யு.பி.ஏ ஆட்சிக்கு வருமா?

இங்கே படியுங்கள்...

Election 2009 result

ஆமாம். அதாகப்பட்டது தோழமை கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். தெற்கு இந்தியர்களின் சப்போர்ட் நிறைய இருக்கும்.

மே 16 வரை பொறுத்திருந்து பாருங்கள்.

எந்த முடிவுக்கு நான் பொறுப்பல்ல. மேலே இருக்கிறவன் சொல்றான் நான் டைப்புகிறேன்.