Saturday, November 8, 2008

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது, சில காலம் எழுதவில்லை... வேலை, சுழற்சி...

சரியாக இரண்டு வாரம் கழித்து இப்போது!

என் புது தமிழ் வாத்தியார் எழுதியது.. இங்கே பாருங்கள் ...

அது எங்கிருந்து எதிர்வினை, லிங்க் ஒன்று என் பழைய படித்ததில் பிடித்தது அக்டோபர் 7, 2008 அன்று எழுதியது!

இதையும் பாருங்கள்... ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி

இன்னொன்று, நண்பர் எழுதியது, சுட்டிக்காட்ட விழைகிறேன்... மும்பை கஸ்டம்ஸ்

ஆங்கிலத்தில், சாராத் பாலினின் கோபம்... Palin calls attacks 'cruel' and 'cowardly'

கடைசியில், தெளிவான எழுத்துக்கள்...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-2)

***
அப்புறம் 18,000 வாசகர் பார்வைகள். நன்றி. இப்போதெல்லாம், வருகை எல்லாம் கூகிள் ரீடர் மூலம் தன் அதிகம் என்று நினைக்கிறேன். அதை எப்படி கணக்கில் வைப்பது? தெரிந்தவர்கள் சொல்லவும்!

நிறைய பேர் படித்தால், நிறைய எழுத தோன்றும், அவ்வளவு தான்!

டென்சன் ஆகாதிங்க... எல்லாம் லுல்லுல்லாயிக்காக தான்...

Friday, November 7, 2008

புஷின் நாய் கடித்த நபர் இவர் தான்வீடியோ தான்... வெள்ளை மாளிகை.. இன்டர்நெட் உலகம் எப்படி பார்த்தீர்களா?

அமெரிக்காவும் போரும்

நான் போர் அடிக்க வில்லை இங்கே.... போர், போரானால், அது போர் ஆகும்!

என்ன செய்வது....

கொடுமை சரவணன் இது. நண்பர் சரவணன் வீட்டிற்க்கு இப்போது டின்னெர் சாப்பிட பயணம்...

ஆனால், அவர் சமைக்கவில்லை... அவர் எதோ ஒரு நம்ம ஊரு ஹோட்டல் என்றார்.

சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்.

இதற்க்கு ஒரு பதிவா? இல்லை... போட வேண்டயது கிழே...

*****
அமெரிக்காவும் போரும் ஒரு இணை பிரியா "இது".

இது நாய்களும் எழும்பும் போல. ஒரு எலும்பு போட்டு பாருங்கள், நாய் விடாது, தொண்டையில் சிக்கும் வரை, கடித்து குதறும். வெற்றி யாருக்கு?

சரி அமெரிக்காவின் வருமானம் சுமார் பத்து% போர் சம்பந்தம் பட்ட விஷயங்கள். அப்புறம் இந்த கார், சொகுசு சமாச்சாரங்கள்...

தயார் செய்யும் தளவாடங்கள்... எங்காவது போய் போட வேண்டும் தானே...

இப்போது, இராக்கில் 60,000 பேர் பழி. போதும். ஆப்கானில், ௪0,000 பேர் பழி. போதும். பாகிஸ்தான் எல்லையில் கொஞ்சம் கொன்றுவிட்டு...

இப்படி போகிறது வாழ்க்கை... போரோடு போர் அடிக்கும் நிலைமை. நெல்லில் அரிசி எடுப்பது போரடிப்பது என்று சான்றோர் சொல்கிறார்கள்.

அவர்கள் அடுத்த கண் காஷ்மீர், பெலேச்டைன் மற்றும் ஸ்ரீலங்கா.

கொஞ்சம் விட்டால், அமேரிக்கா அல்லது வெளிநாட்டுக்காரன் சம்பளத்தில் ப்லோக் செய்து டைம் வீணடிக்கும் சிறு குழந்தை மனது படைத்தவர்களை, போட்டு தள்ளுவார்கள்.

கண்ணா மூச்சி

கண்ணா மூச்சி விளையாடடு ஆடியுள்ளார்கள், குழந்தைகள். ஒரு மணி நேரம்.

எட்டரை மணிக்கு பள்ளி சென்றவர்கள், வாடி வதங்கி, சற்று முன் தான் வந்து சேர்ந்தார்கள்.

பதினோரு மணிக்கு, டாமினோஸ் பீட்சா மற்றும் சிறு பாட்டில் கோக். வருடம் பிடுங்கும் ரூ.20,000/- பீஸ் எப்படி செலவாகிறது பார்த்தீர்களா?

சில நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு.... விளையாடடு!

படிப்பு என்ற விஷயம் எப்படி மாறி விட்டது பாருங்கள்.

கம்ப்யுட்டர் பீஸ், ஆன்லைன் ஆக்டிவிடி பீஸ் , கம்ப்யுட்டர் எய்டட் டீச்சிங் பீஸ்... எல்லாம் சில டப்பா கம்ப்யுட்டர் வைத்து... வாரம் இரண்டு நாள் மட்டும்...

அடுத்த வருடம் நான் ஒரு ஸ்கூல் ஆரம்பித்தால் என்ன?

வினைகளும் ஊக்கங்களும்

நாய்கள் நன்றியுள்ளது என்று சொல்வார்கள். சில நாய்கள் ஒரு படி மேலே போய், ஒரு குழந்தையாக வளரும். உங்கள் வாழ்க்கையில் வினைகள் செய்யாது!

ஒபாமாவும் பப்பியும் பற்றி படித்திருப்பீர்கள். மூன்று கால் நாயை, அவர் எடுத்து வளர்த்தார். மகள்களுக்கு புது பாபி ஒன்று பரிசு கொடுக்க போகிறார்!

என்ன இது ஒரே நாய் பேச்சு, ஒ... ஒபாமா பேசியதாலா?

ஒபாமாவின் அக்செப்டன்ஸ் ஸ்பீச் என்னுடைய ஆங்கில பதிவில் உள்ளது...

Acceptance Speech (c) Barak Hussein Obama

சிலர் ஒபாமா பற்றி எழுதினால், ரொம்ப சொரிகிறது என்கிறார்கள்.

சரி, ஒபாமா எந்த நாட்டுக்காரர்? நீங்கள் செய்யும் தொழில் எந்த நாட்டிற்க்கு பயன் படுகிறது? அதை வைத்து, ஒரு நாட்டின் சாட்

ஆனானப்பட்ட பி.பி.சி யே முழு பக்கம் விளம்பரங்கள், இந்தியா டுடேவில், பிசினஸ் டுடேவில், எழுதுகிறார்கள்...

எப்படி அமெரிக்காவின் பாலிசிகள், ஒவ்வொரு நாட்டிற்க்கு சுமையாக உள்ளது என்று சொல்கிறார்கள், விரிவாக.

நிலைமை இப்படியிருக்க, ஸ்ரீலங்காவின் தமிழ் பிரச்சனை பற்றி, வைக்கோ ஒபாமாவுடன் பேசுவார் என்று நம்புகிறேன். அவர் தான் தமிழில் ஒபாமாவின் "எஸ் வி கேன்!" என்ற புத்தகம் எழுதியவர் ஆயிற்றே!

கமல் சினிமா தசாவதாரம் பட்டர்ப்ளை எபாக்ட் பற்றி ப்லோகுகள் எழுதி தள்ளுவார்கள்... ஆனால் ஒபாமா என்ற ஒரு புது கருப்பு சக்தி, அடிமையாக இருந்த ஜென்மங்கள் உயர்ந்திருக்கும் போது பட்டர்ப்ளை எபாக்ட் வரும்.

அதனால் அதை ஒபாமாவின் வெற்றியை ஒரு ஊக்கமாக எடுத்து கொண்டு, உங்கள் குடும்பத்தோடு நன்றாக இருங்கள்!

ஆனால் ஒபாமா செய்த மாதிரி, கஞ்சா, போதை வஸ்துக்கள் அடிக்க வேண்டாம்! :-))

****

இன்று குழந்தைகள் ஸ்கூலில் உத்சவம் அதனால், பாதி நாள்... ஸ்கூலில் லன்ச் கொடுக்கிறார்கள்! ஸ்கூலில் ஷில்ப் என்று வேறு பெயர் வைத்துவிட்டார், முஸ்லீம் ஓனர், ஹிந்து ஓனர் ஸ்கூல் மாதிரி காட்ட.

கெஸ்? பீட்சா. கோக். எப்படி தான் குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ!

எனக்கு நான் காலையில் கிண்டிய வறண்ட உப்புமா!

Thursday, November 6, 2008

சட்டி சுட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா

ஆட்டி வைத்த மிருகம் இன்று
அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்
கோயில் கொண்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா

தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா

எறும்புத்தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா - நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க
ஞானம் வந்ததடா

பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்
இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி
வந்து விட்டதடா!

*******

இந்தியா ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தவர்களும், ஜான் மெக்கைனை ஆதரித்தவர்களும், பாடுவது இது!

‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் க்ரைட்டன் மறைவு

‘ஜுராசிக் பார்க்’ நாவலாசிரியர் மைகேல் க்ரைட்டன் மறைவு... அவருக்கு 66 வயது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருடைய, நாவல்கள் அருமையாக இருக்கும்.

சினிமா போன்ற அமைப்பு கொடுத்து எழுதுவார்.

நல்ல வர்னணை.

ஜான் க்ரிஸெம் போல புத்தகங்கள் அதிகமாக விற்பனை செய்தவர்.

Wednesday, November 5, 2008

இந்திரா நூயி அமைச்சர் ஆவாரா?

இப்போது உள்ள மில்லியன் டாலர் கேள்வி... இந்திரா நூயி காபினட் அமைச்சர் ஆவாரா?

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் பெரிய போஸ்ட் ஒன்றும் கொடுப்பதில்லை...

இப்போது ஒருவர் ௭00 மில்லியன் டிச்பர்ஸ் செய்ய, தலைவர். கோட்மேன் சக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர். திவ்யாவின் நண்பர்.

அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்திரா நூயி பெற வழி உண்டா?

மின்னசோட்டாவில் இந்தியர் தோல்வி

அஷ்வின் மாடியா என்ற இந்தியர் மின்னசோட்டாவில் தோல்வி அடைந்தார்... மாநில தேர்தல்...

என்ன கொடுமைங்க இது?

லூசியான கவர்னர் பாபி ஜிண்டால் மாத்திரம் இந்தியன் வம்சாவளி!

வேறு பேச்சு தான், வேலைக்கு உதவாது!

தேர்தல்: இந்தியாவும், அமெரிக்காவும்

இந்தியாவும், அமெரிக்காவும் தேர்தலில் சளைத்தவர்கள் இல்லை போல.

சில இடங்களில் தனித்து போட்டி இடுகிறார்கள். ஐம்பத்து சதவிகிதம், வாக்குகள் வேண்டும். எதிராளி இல்லாமல், இந்தியாவில் முடியுமா? அன் அப்போசிட்.

இப்போது நடந்து முடிந்த தேர்தலில், பிலேதேல்பியாவில், சில கவுன்டிகளில் ஒபாமாவிற்கு 100% வோட்டுக்கள் விழுந்துள்ளன! அதை அனுமதிக்கிறார்கள்!

கள்ள வோட்டு இந்தியா போல இல்லை எனலாம்...

ஆனால், எனக்கு தெரிந்து அதற்கு வாய்ப்பு உள்ளது.

நான் 1992 எலெக்சன் டைம் நியூ யார்க்கில் இருந்தேன். அப்போது தான் லைசன்ஸ் வாங்கினேன். ஆடோமாடிக்காக என்னை, வோட் லிஸ்டில் இணைத்து விட்டார்கள். எனக்கு வோட்டளிகுமாறு, பில் கிளிண்டன் மற்றும், பலர் எனக்கு லெட்டர் போட்டார்கள்.

நல்ல வேலை பார்டி ஒன்றிக்கு ரெஜிஸ்டர் செய்யவில்லை.

இப்போது, வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன! இப்போது பேசிய நண்பர் கூறினார், அவரது கணவர், ஆயிரம் டாலர்கள் செலவழித்து, அதிகாலை அவர்கள் இருக்கும் அபார்த்மன்டில் டோனட்ஸ் பாக்கட் கொடுத்தாராம்!

எல்லாமே தமாஸ் தான்!

அமேரிக்கா தேர்தல், இந்திய கண்ணோட்டம்

ஒபமாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்! முதல் கறுப்பர் (வெள்ளை + கென்யா கருப்பு)... ஆண்டவன் அமெரிக்கவைகாபற்றுவான், ஜார்ஜ் புஷ்ஷின் தந்திரம் இல்லாமல்... இதுவரை ஒரு நியூஸ் வரவில்லை, அவர் பற்றி. நாளை சாவகாசமாக, ஒப்புக்கு சப்பாணி வாழ்த்து தெரிவிப்பார்! அவருக்கு டெக்சாஸ் ஆயில் கம்பனி உள்ளது, என்ன கவலை!

எனக்கு மெக்கைனின் பழைய பிரசார வீடியோக்கள், யூடுபே மூலம் கிடைத்தன.

மனதிற்கு கஷ்டம், இந்த ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கை கால்கள் இழந்த வீரர்களை பார்க்கும் போது!

சரி இந்தியாவிற்கு என்ன லாபம்?

முதலில் அரசியல் சரியாகும். சினிமா மூலம் வோட்டுக்கள் வராது என்பது அறிவுக்கு தெரிய வேண்டும்! அங்கேயும் அடி தான்!

ஐடி கம்பனிகளுக்கு, ப்ராப்ளம் தான்!

இராக்கிற்கு விடுதலை! ஆப்கநிஸ்தான்க்கு விடுதலை.

பாகிஸ்தான் மற்றும் காஸ்மீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுப்பார் என்று சொல்கிறார். பார்க்கலாம்.

அப்புறம் இந்த பெட்ரோல் நாடுகளுக்கு வேண்டுகோள் வைத்து, விலை குறைக்க உதவ வேண்டும்.

ஒபாமா ஜெயிப்பாரா?

எங்கள் அபார்ட்மன்ட்டில் இருக்கும் ஒரு அமேரிக்கா இந்தியர், போஸ்டல் வோட்டு போட்டவர், பட்டாசு வெடித்தார், சற்று முன்! அருமை...

பாரக் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்கிறார்கள், அமேரிக்கா போல் பண்டிதர்கள்.

அவர் சொல்வது, ப்ளோரிடா மற்றும் பென்சில்வேனியா ஜெயிப்பவர்கள் தான், அமேரிக்கா பிரேசிடண்ட் ஆவார்கள் என்று.

அப்புறம், இன்னொரு அமேரிக்கா நண்பர் எழுதுறார்... ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்

எப்படியோ ... இந்தியாவிற்கு நல்லா காலம் பொறந்தா சரி!

ஸ்டாக் மார்கெட்டும், மேலே போகும் என்கிறார் நண்பர் ஒருவர்!

Tuesday, November 4, 2008

பாரக் ஒபாமாவிற்கு இரண்டாவது வெற்றி

பாரக் ஒபாமாவிற்கு இரண்டாவது வெற்றி, மீண்டும், கிடைத்த இடம் நியூ ஹம்ப்சைர் மாநிலம், அமேரிக்கா.

ஹார்ட் என்ற ஊரில், நடு நிசி (நன்றி வாத்தியார்!) வோட்டுக்கள் குத்தபட்டத்தில்... ஒபாமா 17, மெக்கைன் 10, ரான் பால் 2 என மொத்தம் நூற்றி சில்லறை இருந்த ஊரில், 29 வாக்குகள் ரெஜிஸ்டர் ஆனதில்...

59%.... இரண்டாவது வெற்றி...

வாழ்த்துக்கள் ஒபாமா...

நாளை காலை பத்து மணி அளவில் உலகிற்கு ஒரு புதிய காவலர்!

சுஷியா - ஜப்பானிய உணவகம்

சுஷியா என்றால், சுஷிக்கு ஒரு உணவகம் என்ற பொருள்.

சுஷியா ஒரு ஜப்பானிய உணவகம் ... மண்ஹட்டன்ல் வெஸ்ட் ஐம்பத்தி ஆறாவது ஸ்ட்ரீட்டில் உள்ளது. நான் அமெரிக்காவில் தங்கியிருந்த காலத்தில், மாதம் ஒரு முறையாவது செல்வோம்.

ஒரு சிறு ப்ரோப்ளம்.... வெஜிடேரியன் உணவு இல்லை! எல்லாம் (கருவாடு) ட்ரைட் பிஷ். சுஷி எனப்படும், அரிசி புட்டு. எட்டு டாலருக்கு, ஆறு கொடுப்பார்கள்... அருமை. இப்போது எவ்வளவு தெரியவில்லை.

எதற்கு திடீரென்று அதை பற்றி? அங்கு சாப்பிட இரு நண்பர்கள் பெங்களூரில் சாப்பிட கதை இது !

நேற்று இரவு, ஒபராயில் உள்ள, ஒரு உணவகத்தில், சிராச்சி சுஷி சாப்பிடோம், நண்பர் குடும்பத்துடன்... கோல்டன் கேட் ப்ராபர்டீஸ் என்று ஒரு நிறுவன தலைவர் அவர்.


****

மற்றொரு நினைவு!

லா ஹூபா என்று ஒரு இடம் உள்ளது... அங்கும் வித விதமான் உணவு கிடைக்கும். மண்ஹட்டன் , அறுபத்தி நான்காவது ஸ்ட்ரீட். அதன் அருகில், தான் அக்கா ஒரு சிறிய வீடு வாங்கியுள்ளார், 2002 இல், கிழே வாடகைக்கு, மேலே கெஸ்ட் ஹவுஸ், வருடம் மூன்று நான்கு முறை செல்வார்கள்... நாங்கள் செல்லும் போது அங்கு தான் தங்குவோம்.

சென்ற முறை அமேரிக்கா சென்ற போது திவ்யா, ஜோவுடன் என் குடும்பத்தோடு சாப்பிட்ட ஞாபகம். லா ஹூபா. அருமையான இடம். வெஜிடேரியனும் உண்டு!

ஒபாமா பெண் மற்றும் மெக்கைன் பெண்

அமேரிக்கா எலெக்சன் பற்றி சில தமாஸ்கள்.

என் அக்கா குடும்பம், விரும்பிய வீடியோ இது... ஒபாமாவின் வெற்றியை எப்படி தடுக்கிறார்கள், என்பதை பற்றி ஒரு ஸ்போப்.


பாரக் ஒபாமாவின் முதல் வெற்றி

இது ஒரு முதல் படி கல்!

பாரக் ஒபாமாவின் முதல் வெற்றி ...

டிக்ச்வில் நாடச் என்ற சிறு கிராமத்தில், நியூ ஹம்ப்சயர் மாநிலத்தில், முடிவு சொல்லப்பட்டது!

Barack Obama the Big Winner in Presidential Race in Dixville Notch, N.H

அதிசயம் என்னவென்றால், அந்த கிராமத்தில் எலெக்சன் நாளில் அதிகாலை பன்னிரண்டு மணிக்கு வோட்டு போடுவார்கள். அது மொத்தமாக, நியூ ஹம்ப்சயர்மாநில வோட்டுகளில் சேரும்.

21 வாக்குகளில், 15 ஒபாமாவிற்கு, 6 மெக்கைனுக்கு.

71.4% வாக்குகள், இது ஒரு ட்ரெண்ட்ஆ?

இந்த பெண்ணும் ஒரு ஹீரோயின்


நம்பமுடிகிறதா? இந்த பெண்ணும் ஒரு ஹீரோயின்!

பெயர்
பியா!

நடித்த
படம் "பொய் சொல்ல போறோம்".

பெண்ணும் புரட்சியும்

புரட்சி தலைவி பற்றி எழுதவில்லை! அரசியல் தவிர, இந்தியாவில் நிறைய பெண்கள் புரட்சி செய்திருக்கிறார்கள்.

ஜான்சி ராணி எனக்கு மிகவும் பிடித்த பெண்!

ஒரு பெரும் படையை திரட்டிய வல்லமை படைத்தவர்.

அப்புறம், அவ்வையார்! அருமை... ஆத்திசூடி... போன்ற காவியங்கள் கொடுத்தவர்.

முருக பக்தர்!

கவிதைகளால் மனம் கவர்ந்தவர் சரோஜினி நாயுடு!

Monday, November 3, 2008

யோகாவும் நடனமும்

அருமையான வீடியோ

திண்ணை பேச்சு

திண்ணை பேச்சு என்று ஒரு வழக்கம் பற்றி நண்பர் பார்த்திபன் குறிப்பிட்டார்.

அதாவது, வெட்டி ஆபிசர்கள் (என்னை மாதிரி இல்லை), டைம் கிடைக்கும் போது மொக்கை அடிப்பவர்கள், கும்மி போடுபவர்கள் (ப்லோக் தமிழ் உலகம் மொழி இது) உட்கார்ந்து பேசும் இடமாம்.

கிராமங்களின் தலைமை, தீர்ப்பு சொல்லவும் பயன்படுமாம்.

தமிழ் கிராம படங்களை ஞாபக படுத்தி கொள்ளுங்கள்.

அப்புறம், ஒரு நிலை கண்ணாடி வைத்து, அதில் திண்ணையில் தெரியாதவாறு சைட் அடித்து வாழ்ந்த வாழ்கை பிரமாதம் என்று கூறினார்.

வாழ்க.

*****

இது எதற்கும் எதிர்வினை அல்ல. என் மாமனார் ப்லோக் உலகம் பத்தி உவமை சொல்லியது!

ஞானி

ஜோதிடம் ஒரு கலை...

மன நிம்மதி கொடுப்பதும் ஒரு கலை.

ஒரு புகழ் பெற்ற சாமியார்? தன்னை ஞானி என்று பறை சாற்றிக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தை பெங்களூரில் நடத்துகிறார்.

அவருடைய கோட்டை(!) கனகபுரா ரோட்டில் உள்ளது...

கொடுமை, பணம் வசூல் செய்யும் விதம் அருமை!

ஞானிகள், பணம் செய்யும் வித விதமான ஸ்டைல் வாழ்க்கையில் ஒரு பண்டிதம்!

***

இன்று பதினேழாயிரம் வாசகர்கள்... அருமை. நன்றிகள்!

அலெக்சா ரான்கிங்கும் முன்னேறி உள்ளது...

தீபாவளியும் சங்கு சக்கரமும்

தீபாவளி முடிந்து நாள் ஆகிவிட்டது!

இருந்தாலும், குழந்தைகள் பட்டாசு வேண்டும் என்றார்கள்.

சிலர் வாரங்களாக வெடித்து கொண்டே இருக்கிறார்கள்!

பக்கத்தில் ஒரு கடையில் நேற்று அநியாய விலை கொடுத்து சங்கு சக்கரம் மட்டும், பெங்களூரில் சென்னைக்கு டபுள் விலை!

மொட்டை மாடியில், சங்கு சக்கரம் விட்டோம்!

அட்டகாசமான குழந்தைகள் குதுகுலம்!

ஆனால்..

ஒன்று மட்டும் டேக் ஆப் ஆகி, ரோட்டில் விழுந்தது, நான்கு மாடி ஐம்பதடி தூரம்!

நல்ல வேலை, ஞாயிறு மாலை யாரும் வாகிங் போகவில்லை!

*****

மிச்சம் இருப்பது, கார்த்திகை தீபம் அன்று தான் , என்று ஹோம் மினிஸ்டர் ஆர்டர்.

:-))

Sunday, November 2, 2008

இல்லாமல்

இல்லாமல் என்ற சொல் இல்லாவிட்டால், எவ்வளவு கொடுமை!

இருப்பதை இல்லாமல் சொல்வது மரபு.

இல்லாததை சொல்வது அரசியல்.... அது தானுங்க பொய்!

புத்தர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தான் துறவறம் மேற்க்கொண்டு, எல்லோரும் கும்பிடும் ஞானி ஆனார்...