Saturday, November 22, 2008
மழையில் கோவை
பெங்களூரிலும் மழை கோவையும் மழையோடு வரவேற்றது.
காலை ஆறு மணிக்கு எழுந்து, குளித்து ரெடி ஆகி...குழந்தைகள் குதுகுலத்துடன் கோவை ட்ரிப். திவ்யாவின் வீடு நகரின் மைய்யப்பகுதி. பத்து மணிக்கு தான் ப்ளைட். ஏழரைக்கு டாக்சி. பத்து நிமிடம் முன்னாள் வந்து விட்டான். போகும் வழியில் பேகரியில் தில் பசந்து ரோல்கள் பேக் செய்து கொண்டோம். கோவையில் இல்லை. நல்ல ஸ்நாக்.
ஒன்பது மணிக்கு செக்கின் செய்துவிட்டு, அறை மணி நேரத்தில் சில நூறு சாகலேட் செலவு.. இது வேண்டும் அது வேண்டும் என்று... ப்ளைட்டில் தணீர் மட்டும், சமோசா மற்றும் சண்ட்விச் இருந்தது. குழந்தைகள் சாப்பிட்டார்கள். முப்பது நிமிஷம் ப்ளைட்.
ப்ளைட் கரக்ட் டைம் கிளம்பியது. பதினோரு மணிக்கு நாங்கள் ஏர்போர்ட் வெளியே. குடையோடு திவ்யா, மற்றும் அவர் பெற்றோர். ஏர்போர்டில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கியிருந்தார்கள். கம கம மனம். ரோட்டில் கூட்டம் இல்லை, டிரைவர், ஸ்கார்பியோவை சர்ரென்று ஒட்டி, பதினொன்றரைக்கு வீடு...
சூடான இட்லி சாம்பார். அருமை. குழந்தைகள் விளையாட சென்று விட, பேசிக்கொண்டு இருந்தோம்.
இப்போ லேப்டாப் பவரில் போட்டு விட்டு மெயில் செக், பேசிக்கொண்டே ப்லோக் டைபிங்.
மதியம் ஷாப்பிங் செல்கிறோம், எட்டிமடை தோட்டம், ஈஷா மையம் என்று பிளான். சாயந்திரம் சினிமா செல்லெலாம். நாளை கோவில் செல்லவேண்டும்.
திவ்யாவின் தங்கை குழந்தைகளுடன் மஞ்சுவும், ராஜாவும் ஒன்றிவிட்டார்கள். வீடியோ கேம், பாட்டில் ஆப் டூம் என்று விளையாடுகிறார்கள்.
கோவை பெங்களூரை விட அருமையாக இருக்கிறது. பச்சை பசேலென்று...
ஒக்கே. நாளை இரவு தான் பதிவு.
தொடர்புடைய பதிவு... மைகேல் ஜேக்சன் மதம் மாறினார்
Friday, November 21, 2008
மக்காசோளம்
அது இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் கம்பனி. வருடம் முழுவதும் வேலை. வெளிநாட்டில் ஒரு ஆள் மூன்று மாதம் செய்யும் வேலையை, மூன்றில் ஒரு பங்கு காசில் மூன்று ஆள் வைத்து அதே ஒரு மாதத்தில்... எப்படியோ, பாரின் காசு வந்தால் சரி...
கண்ணாடி கூண்டுக்குள் வைத்த கூலிகள் என்கிறார். ஆங்கிலத்தில் சாப்ட்வேர் கூலிஸ்.
நிதர்ஷன ரெட்டி என்பது அவள் பெயர். சென்ற வருடம் கல்கத்தா மேனேஜ்மன்ட் காலேஜ் ஒன்றிலிருந்து ஆள் பிடித்து வந்தார்கள்... அது தாங்க கேம்பஸ் ப்லேச்மன்ட்.
அவளுக்கு பிடித்த உணவு மக்காசோளம்.
வேலை வேலை என்பதால் அவளை வாட்டி எடுத்தார்கள்...
ஒரு நாள் ரிசைன் செய்து விட்டாள், நான் ஊருக்கே போய் விடுகிறேன்.... இங்கே பிடிக்கவில்லை...
ஜூனியர் எச்.ஆர். எல்லாம் பேசியும் மசியாதவள், என் மனைவியிடம் அழைத்து வந்தார்கள். கொஞ்ச நேரம் பேசியவள், சொல்ல ஆரம்பித்தாள்... சிடி விட்டு இவ்வளவு தூரம் தள்ளி ஆபிஸ், பக்கத்திலேயே ஜெயில் மாதிரி வீடு...டிவி மட்டும் இருந்தா போதுமா, அடிக்கடி ஊருக்கு போகணும், சொந்தங்களை பார்க்கணும்... அப்புறம் எங்க தோட்டத்தில் விளையும் மக்காசோளம் ரொம்ப பிடிக்கும்..
அன்று பார்த்து, என் மனைவி டிபனில் வேக வைத்த மக்காசோளம் எடுத்து சென்றுள்ளார். ஒன்று எடுத்து கொடுத்துள்ளார்...
மிகவும் சந்தோசம் ஆகிவிட்டது. அந்த வேளையில், வேலையில் தொடர்கிறேன் என்று சொல்லிவிட்டாள் நிதர்சன ரெட்டி.
இப்போது அந்த கம்பனி வாசலில் மக்காசோளம் விற்பவர் நின்று நல்லா வியாபாரம் செய்கிறாராம். எச்.ஆர். தந்திரம்!
********
மனைவி சொன்னார், ஒரு பர்சன்ட் அட்ரிசன் (வேலை விட்டு ஆட்கள் நிற்பது) ஒரு மாதத்தில் அதிகம் இருந்தால்... கோ சேர்மன் (குடிகாரன், இந்தியாவை வளமாக்குவது என்று அருமையாக இப்போ புது புஸ்தகம் வேறு எழுதி இருக்கிறான்...) திட்டி தீர்த்து விடுவானாம்... அவனுடைய அல்லக்கை, கணக்கு வழுக்கு பார்த்தவன், இப்போது டைரக்டர் ஆக இருக்கிறான்.. கூட சேர்ந்து திட்டுவானாம்.. அவர்கள் வேலை விட்டு போவது யாரினால், யாருக்காக? யோடனைகெட்ட ஜென்மங்கள்..
தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை லஞ்சம்
நான் என் அரசாங்க பணியை விட்டு விலகியதற்கு லஞ்சமும் ஒரு காரணம்.
லஞ்சம் பல முகங்களை கொண்டது..
என் மூலம் எதாவது காரியம் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில், கிட்டதட்ட எல்லா கடைக்காரர்களும், விலை குறைப்பு, அசலுக்கு கொடுப்பது போன்றவை நடந்திருக்கலாம்.
எனக்கு தெரிந்த வரை, லஞ்சத்தால் வாழாமல் கெட்டுப்போனவர்கள் தான் அதிகம். வருமானம் வரும் என்று, தேவைக்கு அதிகமாக செலவு செய்து... கச்டப்பட்டுளார்கள். ஒரு சிலர், குடிக்கு அடிமையாகி, வேலைக்கு குடித்து வரும், நிலைமை வந்து, வேலை விட்டு சஸ்பென்ட் ஆகியுள்ளார்கள்.
தொடர்புடைய பதிவு.... பரிசல்காரனின் லஞ்சபேய் .
Wednesday, November 19, 2008
இந்தியாவில் ரியல் எஸ்டேட்
எப்படி?
அமேரிக்கா ஒரு சேமிப்பு இல்லாத நாடு... அதை தயவு செய்து கம்பேர் செய்ய வேண்டாம். சப் ப்ரைம் கரைசிஸ் எல்லாம் தண்டம்... இந்தியா வேற.
இந்தியாவில் 25% கட்டாயம் மிடில் க்ளாஸ் வர்க்கம் சேமிக்கும். வீடு ஒன்று எப்போதும் கனவு தான்... சென்னையில் நான் சந்தித்த, பிளாட்பாரம் வாசி, சோளிங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தார்...
அதுவும் சென்னை சுற்றி வளர்ச்சி அதிகம். நான் ஒரு 14 ஏக்கர் 1996 சமயத்தில் வாங்கினேன், மடிப்பாக்கம் அருகே. பல்லாவரம், வண்டலூர், தாம்பரம் செல்லும் வழி. புழுதிவாக்கம் தாண்டி... ரோடு சரி இல்லை, இன்னும்... ஒரு ஏக்கர், ஒரு லட்சம். நான் 2006 விற்கும் போது, மொத்தம் பல கோடிகள்.... இன்றும் அதை வாங்கியவர் வருடம் பல லட்சங்கள் வரும் தென்னை, மற்றும் செட் / குடோன் வைத்துள்ளார்... அனேகமாக ஒரு இண்டஸ்ட்ரி வரும். என்ன தண்ணீர் தன் கொஞ்சம் குறைகிறது!
புது தொழில்கள் தொடங்க இது நல்ல சமயம். பைசா குறைவாக செலவு செய்தால் போதும். நானும் என் நண்பரும் பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளோம்... அதற்கு சில மாதங்கள் இலவசமாக வாடகை இல்லாமல் இடம் ஒன்று கிடைத்தது, இன்னொரு நண்பர் மூலம். நண்பா முடியுமா? மாற்றம் வரும் போது தன்னால் வருமானம் வரும்.
பெங்களூரில் இது தான் வீடு வாங்க நல்ல சமயம். என்னிடம் 45 லட்சம் சொல்லிய ஒரு வீடு, மங்களம் என்ற ஒரு ப்ராபர்டி, இன்று 36 கொடுங்கள், போதும், இரண்டு கார் பார்க் தருகிறேன் என்கிறார். அசல் பணம், முதலீடு வந்தால் போதும் என்று முடிந்த நிலையில் இருக்கும் ப்ரபர்டிகள் விற்கிறார்கள். நஷ்டத்திற்கு யாரும் விற்கமாட்டார்கள். எனக்கு தெரிந்த ஒரு பாங் மேனேஜர் சொல்கிறார், இப்போதெல்லாம் என்ன 20% டவுன் பேமண்ட் கேட்கிறோம். அதையும் பெர்சனல் லோனாக கொடுத்துவிடுவோம்....
ஆனால் வீடு கட்டி விற்கும் நிறுவங்களில் முதலீடு (சேர், டெபாசிட் போன்றவை) தவறு. ஆரஞ், சூர்யா ஷைன், வைட் பீல்ட் போன்ற நிறுவனங்கள் ஓடி விடும் சாத்தியம் அதிகம்.
நிச்சயம் பணம் இருந்தால், வாங்க வேண்டிய முதலீடு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் !
நம்பியார் காலமானார்
ஐயப்பா பக்தர்களை பார்த்தால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது அவர் தான்.
ப்ளோகில் கூட சிலர் அவரை பற்றி தாறு மாறாக எழுதினார்கள்.
A good person is one who attempts to live and preaches what he talks about!
குமுதம் கூட சில வாரங்களுக்கு முன், அவர் நோய் பற்றி படு கேவலமாக கிசு கிசு எழுதியது. அதை வன்மையாக கண்டிக்கிறேன்! :-(
ஓர்மிச்சால் மதுரிக்கும்!
பரிசு
என்ன சொல்ல.... சூப்பர்!
//வெள்ளி வட்டலுக்கு மாத்திபோட்டேன்//
எனக்கு The Bridges of Madisson County படம் தான் ஞாபகம் வந்தது...
அருமை.
ஆமாங்க, ஓர்மிச்சால் மதுரிக்கும்! அப்பிடீனா என்னங்க?
தேவதை
மகன் கொஞ்சம் தெம்பாக ஸ்கூல் போயிருக்கிறான், அனேகமாக க்ளாசில் தூங்கி எழுந்து வருவான்... பர்ஸ்ட் யைட் ரூம்...
அரிசி பருப்பு காய்கறி உணவு மட்டுமே உன்ன வேண்டும் ....
ஆனால் பிரெட் மட்டும் தான் உள்ளே செல்கிறது இந்த காலத்தில்.
மதியம், பாயாசம் செய்ய வேண்டும். வாய்க்கு ருசியாக சாபிட்டால் நன்றாக இருக்கும்... உடம்பு வலி பறந்து விடும். என் டாக்டர் அக்கா சொல்லிய வைத்தியம் இது... எல்லோரும் காய்ச்சல் வந்தால், பிரெட் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் ஜீரணம் ஆகாமல், வயிற்றை பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.
பிறந்த சிறு குழந்தையை காலையில் வெயிலில் காய வைக்கும் பழக்கம், பெரியவர்களுக்கும் வேண்டும். இன்று காலை எல்லோரும், பேல்கனியில் உட்கார்ந்துக்கொண்டோம்.
என் பக்கத்து வீட்டு நண்பருக்கு குழந்தை பிறந்துள்ளது... அவர் குழந்தையை வெயில் காய வைத்துக்கொண்டு இருந்தார்.
Tuesday, November 18, 2008
நூறாவது நாள் பதிவு: சாதீயம்
என்னுடைய கமன்ட்...
நடு நிலையான பதிவு!
நான் அடிதடி ஏற்பட்டதன் காரணத்தை, அடுத்த நாளே விரிவாக என் போலிஸ் நண்பர்கள் மூலம் கண்டறிந்து, பதிவுபோதையில் எழுதிய போது, கொக்கரித்து போடா தலித் நாய் (நேற்று தான் தெரிந்தது தமிழ்நாட்டில் எங்கள் சமூகம் எம்.பி.சி தான்!) என்று கூகிள் அக்கவுண்டோடு எழுதினார்கள். இன்னும் அந்த பதிவில் கிண்டல் செய்த இருவர் கமண்ட்ஸ் விட்டு வைத்துள்ளேன்.
இந்த அடிதடி சம்பவங்கள், நான் கல்கத்தாவில் காலேஜில் கண்ட சி.பி.எம் / டி.ஓய.எப்.ஐ. v/s காங்கிரஸ் அடிதடி போல இல்லை! அங்கு வெட்டியே சாக்கடையில் போட்டு போவார்கள் தோழர்கள்... போலிஸ் ஒன்றும் செய்யாது. நந்திக்ராம் இன்னும் ஒரு படி மேல்.
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!
இதில் சம்பந்தப்பட்ட நான் எழுதிய பதிவு... சென்னையில் இருந்து
அவர் இரண்டு கேள்வி முன் வைக்கிறார்...
1. என்ன இது காட்டுமிராண்டித்தனமான வன்முறை?
தூண்டினார்கள்... கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்!
2. வன்முறையைக் கண்டு போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பது அவலமில்லையா?
அடித்து முடிக்கட்டும் என்று இருப்பார்கள் எப்போதும் ...எங்கேயும்... இல்லாவிட்டால் அரசியல் பலம், தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுவார்கள். காதை அறுத்த சம்பவத்தை காதும் காது வைத்த மாதிரி முதுகெலும்பில்லாத பத்திரிக்கை ஆட்கள் எழுதாதது போல, அவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. ஏற்கனவே நான் எழுதிய மாதிரி நொந்து போன கமிஷனர், சந்தோசமாய், வேலை மாற்றல் ஆர்டர் வாங்கி போய்விட்டார்.
மேலும் என் நண்பர்கள் மூலம் ஒரு தகவல், ஆளும்கட்சி அரசாங்க உளவுபிரிவு மூலம், இந்த சாதி சண்டை பற்றி எங்கு, யார், எப்படி எழுதினாலும் அவர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்களாம்.
அப்படியே விஜயகாந்த் சொல்கிற மாதிரி கொஞ்ச அரசாங்க ரேசன் அரிசியில் சமைத்து சாப்பிடுங்கள், அனைத்து மந்திரிமார்களும். ப்ளீஸ்.
அப்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய, எதற்கு கப்பம் கட்டாயம் வாங்குகிறீர்கள்? எவனோ நிலம் விக்குறான், எவனோ வாங்குறான்! உங்களுக்கு கொடுக்கும் ஆயிரம் ருபாய் நோட்டுக்கட்டுகள் நாசிக்கில் அடிக்கவில்லை தெரியுமா?
*****
இது எனது நூறாவது நாள் பதிவு: சாதீயம் என்று அப்பட்டமாக என் உணர்வை பிரதிபலித்தது...
Monday, November 17, 2008
Sunday, November 16, 2008
ரயிலடி
வெய்டிங் லிஸ்ட் டிக்கட் எப்படியாவது கன்பார்ம் செய்து கொடுத்துவிடுவார். ( இட வசதி இல்லாமையால், நிறுத்திவைக்கபட்டிருக்கும் இடம்...)
மாப்ளே, ஈ.க்யு. இருக்கில்லே!
ரொம்ப அருமையா பென்ஸ் மெயின்டைன் பண்ணுறார். சிட்டி யூஸ் மட்டும்.
****
சென்னை பதிவர் சந்திப்பு இந்த சட்ட கல்லூரி குறித்து தானா இருந்திருக்கிறது?
சரி அடுத்து தடவை கலந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் பார்வையாளனாக இருக்க வேண்டும்!
****
அடுத்த சனி காலை, கோவை செல்கிறோம். குழந்தைகள் இரண்டு நாள் ட்ரிப் கேட்டார்கள். அங்கும் மழை போல....
இன்று இரவு பெங்களூர் மழையோடு வரவேற்கும்..
ஒபாமாவின் விதிகள்
1.வீண் விவாதங்கள், புலம்பல்கள்,கோள் சொல்லுதல்களுக்கு நோ. இரண்டே குழந்தைகள் தானே, அதுவும் பெண்கள், பேசியே கொள்வார்கள்.
2.வீடு சுத்தமாக இருப்பதைவிட மனசு சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தாலும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அது மனசை சுத்தம் செய்ய வைக்கும்.
3.அவரவர் வேலையை அவரவரே செய்யவேண்டும். ஒபாமா இரண்டு வேலை செய்தவர். லேயர் மற்றும் சமூக சேவகர். பணம் இல்லாமல் போனதால் சிகாகோ யுனிவர்சிடியில் பாடம் நடத்தினார்.
4.இரவு எட்டரை மணி குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரம். வெள்ளி, சனி பரவாயில்லை. ஞாயிறு முதல் வியாழன் வரை அப்படி இருக்க வேண்டும். ஒபமாவும் குழந்தைகள் தூங்கப்போகும் முன் பார்ப்பதில்லை. வருவதற்கு லேட்.
5.அலாரம் இல்லாமலே சரியான நேரத்தில் எழுந்திருப்பது போல் மனதை தயார் செய்யவேண்டும். இருந்தாலும் சில சமயம் அலாரம் வைத்துக்கொல்லேலாம்.
6.குழந்தைகள் வீட்டு வேலை செய்தால் வாரத்துக்கு ஒரு டாலர் பரிசு. சில சமயம் காசு இல்லாவிட்டால் கொடுக்கமாட்டார். இப்போது நிறைய கிப்த்ஸ் தானாக வரும்.
7.குறைவாக சாப்பிட்டு நிறைவாக இருக்க வேண்டும். சில சமயம் காப்பி மட்டும் தான் உணவு!
8. வீட்டில் செல்ல பிராணி எதுவும் வளர்த்த கூடாது. யாரவது கேட்டால்... அலர்ஜி என்று சொல்ல வேண்டும்.
*********
ஒபாமாவிற்கு பிடித்த வார்த்தைகள்... மாற்றம், நம்மால் முடியும்.
Change and Yes We Can!