Wednesday, November 19, 2008

தேவதை

இன்று என் தேவதையும் , குட்டி தேவதையும் காய்ச்சல் வந்து வீட்டில் படுத்திருக்கிறார்கள். சளி ஜூரம்... வெள்ளி இரவிற்குள் சரி ஆக வேண்டும், சனி ஞாயிறு கோவைக்கு செல்கிறோம்.

மகன் கொஞ்சம் தெம்பாக ஸ்கூல் போயிருக்கிறான், அனேகமாக க்ளாசில் தூங்கி எழுந்து வருவான்... பர்ஸ்ட் யைட் ரூம்...

அரிசி பருப்பு காய்கறி உணவு மட்டுமே உன்ன வேண்டும் ....

ஆனால் பிரெட் மட்டும் தான் உள்ளே செல்கிறது இந்த காலத்தில்.

மதியம், பாயாசம் செய்ய வேண்டும். வாய்க்கு ருசியாக சாபிட்டால் நன்றாக இருக்கும்... உடம்பு வலி பறந்து விடும். என் டாக்டர் அக்கா சொல்லிய வைத்தியம் இது... எல்லோரும் காய்ச்சல் வந்தால், பிரெட் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் ஜீரணம் ஆகாமல், வயிற்றை பிடித்துக்கொண்டு இருப்பார்கள்.

பிறந்த சிறு குழந்தையை காலையில் வெயிலில் காய வைக்கும் பழக்கம், பெரியவர்களுக்கும் வேண்டும். இன்று காலை எல்லோரும், பேல்கனியில் உட்கார்ந்துக்கொண்டோம்.

என் பக்கத்து வீட்டு நண்பருக்கு குழந்தை பிறந்துள்ளது... அவர் குழந்தையை வெயில் காய வைத்துக்கொண்டு இருந்தார்.



No comments: