நன்றாக இருக்கிறது மழை. விட்டு விட்டு தூறலும், சோ என்று கொட்டும் மழையும்.... மனதிற்கு இதமாக உள்ளது...
பெங்களூரிலும் மழை கோவையும் மழையோடு வரவேற்றது.
காலை ஆறு மணிக்கு எழுந்து, குளித்து ரெடி ஆகி...குழந்தைகள் குதுகுலத்துடன் கோவை ட்ரிப். திவ்யாவின் வீடு நகரின் மைய்யப்பகுதி. பத்து மணிக்கு தான் ப்ளைட். ஏழரைக்கு டாக்சி. பத்து நிமிடம் முன்னாள் வந்து விட்டான். போகும் வழியில் பேகரியில் தில் பசந்து ரோல்கள் பேக் செய்து கொண்டோம். கோவையில் இல்லை. நல்ல ஸ்நாக்.
ஒன்பது மணிக்கு செக்கின் செய்துவிட்டு, அறை மணி நேரத்தில் சில நூறு சாகலேட் செலவு.. இது வேண்டும் அது வேண்டும் என்று... ப்ளைட்டில் தணீர் மட்டும், சமோசா மற்றும் சண்ட்விச் இருந்தது. குழந்தைகள் சாப்பிட்டார்கள். முப்பது நிமிஷம் ப்ளைட்.
ப்ளைட் கரக்ட் டைம் கிளம்பியது. பதினோரு மணிக்கு நாங்கள் ஏர்போர்ட் வெளியே. குடையோடு திவ்யா, மற்றும் அவர் பெற்றோர். ஏர்போர்டில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கியிருந்தார்கள். கம கம மனம். ரோட்டில் கூட்டம் இல்லை, டிரைவர், ஸ்கார்பியோவை சர்ரென்று ஒட்டி, பதினொன்றரைக்கு வீடு...
சூடான இட்லி சாம்பார். அருமை. குழந்தைகள் விளையாட சென்று விட, பேசிக்கொண்டு இருந்தோம்.
இப்போ லேப்டாப் பவரில் போட்டு விட்டு மெயில் செக், பேசிக்கொண்டே ப்லோக் டைபிங்.
மதியம் ஷாப்பிங் செல்கிறோம், எட்டிமடை தோட்டம், ஈஷா மையம் என்று பிளான். சாயந்திரம் சினிமா செல்லெலாம். நாளை கோவில் செல்லவேண்டும்.
திவ்யாவின் தங்கை குழந்தைகளுடன் மஞ்சுவும், ராஜாவும் ஒன்றிவிட்டார்கள். வீடியோ கேம், பாட்டில் ஆப் டூம் என்று விளையாடுகிறார்கள்.
கோவை பெங்களூரை விட அருமையாக இருக்கிறது. பச்சை பசேலென்று...
ஒக்கே. நாளை இரவு தான் பதிவு.
தொடர்புடைய பதிவு... மைகேல் ஜேக்சன் மதம் மாறினார்
ஐந்து முகங்கள் – கடிதம்
12 hours ago
1 comment:
Interesting post.
Post a Comment