1.வீண் விவாதங்கள், புலம்பல்கள்,கோள் சொல்லுதல்களுக்கு நோ. இரண்டே குழந்தைகள் தானே, அதுவும் பெண்கள், பேசியே கொள்வார்கள்.
2.வீடு சுத்தமாக இருப்பதைவிட மனசு சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தாலும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அது மனசை சுத்தம் செய்ய வைக்கும்.
3.அவரவர் வேலையை அவரவரே செய்யவேண்டும். ஒபாமா இரண்டு வேலை செய்தவர். லேயர் மற்றும் சமூக சேவகர். பணம் இல்லாமல் போனதால் சிகாகோ யுனிவர்சிடியில் பாடம் நடத்தினார்.
4.இரவு எட்டரை மணி குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரம். வெள்ளி, சனி பரவாயில்லை. ஞாயிறு முதல் வியாழன் வரை அப்படி இருக்க வேண்டும். ஒபமாவும் குழந்தைகள் தூங்கப்போகும் முன் பார்ப்பதில்லை. வருவதற்கு லேட்.
5.அலாரம் இல்லாமலே சரியான நேரத்தில் எழுந்திருப்பது போல் மனதை தயார் செய்யவேண்டும். இருந்தாலும் சில சமயம் அலாரம் வைத்துக்கொல்லேலாம்.
6.குழந்தைகள் வீட்டு வேலை செய்தால் வாரத்துக்கு ஒரு டாலர் பரிசு. சில சமயம் காசு இல்லாவிட்டால் கொடுக்கமாட்டார். இப்போது நிறைய கிப்த்ஸ் தானாக வரும்.
7.குறைவாக சாப்பிட்டு நிறைவாக இருக்க வேண்டும். சில சமயம் காப்பி மட்டும் தான் உணவு!
8. வீட்டில் செல்ல பிராணி எதுவும் வளர்த்த கூடாது. யாரவது கேட்டால்... அலர்ஜி என்று சொல்ல வேண்டும்.
*********
ஒபாமாவிற்கு பிடித்த வார்த்தைகள்... மாற்றம், நம்மால் முடியும்.
Change and Yes We Can!
No comments:
Post a Comment