பதிவர் சந்திப்பு ... அந்த கூட்டம் இல்லைங்க, இது வேற.
பீச் பக்கம் நான் போகலே. அந்த சந்திப்பு கொஞ்சம் கார சாரமாக இருக்கும் போல.
நான் சந்தித்தவர்கள் பதிவு போட்டுளார்கள்... என்ன ரவி மட்டும் ப்ளோக்கர் இல்லை. நாளை காலையில் நாகேஸ்வர ராவ் பார்க்கில் சந்திக்கிறோம்!
சென்னையில் பதிவர் சந்திப்பு
சென்னை மற்றும் கோவை
எனக்கு பிடித்த விஷயம், ப்லோக் பற்றி பேசாமல், உலக விஷயங்கள் பேசியது. நல்ல நண்பர்கள். குழந்தைகள் எல்லாம் கொஞ்சம் அடங்கி நடந்தார்கள்.
****
ரொம்ப நாளைக்கு பிறகு சென்னையில் ஒரு ப்ராஜெக்ட் முடிந்தது. திருப்தி. ஒருவர் கமன்ட் போட்டுள்ளார், எவ்வளவு கமிசன் வரும் என்று. அவர் சொல்றான், இவன் செய்யறான், பூவாக்கு எதோ கொஞ்சம் வருது.
நான் வெள்ளி காலை ப்ளைட்டில் சென்னை கிளம்பினேன்.
என் மனைவி மற்றும் குழந்தைகள், சாயந்திரம் ப்ளைட்டில் வந்தார்கள்.
நாளை சாயந்திரம் ட்ரெயின். இன்னும் கன்போர்ம் ஆகவில்லை. கிடைக்கும். மாமா வாங்கி கொடுப்பார்!
இது திடீரென்று ஏற்பட்ட ட்ரிப்.
தீபாவளி முடிந்து இரண்டு வாரங்களில்... குழந்தைகள் சந்தோசம்.
எனக்கும் சினிமா வேலை ஒன்று நாளை காலை மீட்டிங் இருக்கு. அரை மணி நேரத்தில் ஒரு கதை சொல்ல வேண்டும்!
மாமனார் இப்போது பீச் சென்று வரலாம் என்கிறார். டின்னெர் டிபன் பாக்ஸ் கூட வரும். இன்று நான் பழம் மட்டும் தான்... பெங்களூர் போல சொல்லிட்டு வரதில்லே இந்த மழை! ஒரே தூறல் தான் போங்க!
குழந்தைகளுக்கு திங்கள் அன்று ஹிந்தி பரீட்சை. கிளம்பும் அவசரத்தில் மறந்து விட்டார்கள். நல்ல வேலை அதே புத்தகம் இங்கு கிடைத்தது, மனைவி வாங்கி வந்துள்ளார். மனைவி டின்னெர் செய்ய, மாமியார் சொல்லிக்கொடுக்கிறார். நான் உலகின் முக்கிய வேலை ப்லோக் டைப் செய்யறேன். (எதோ இன்னொரு ப்ரோஜக்ட் டிடேயில்ஸ் என்று நினைக்கொண்டு இருக்கிறார்கள்!)
அப்புறம் கனி என்ற கடையில் மூன்று செட் சுடிதார் எடுத்துள்ளார் மனைவி. மகளுக்கும் ஒன்று. நாளை மதியம் தைத்து ரெடி ஆக இருக்கும். பெங்களூருக்கு பாதி விலை. மகன் அழுகிறான். ஒரு ரெடிமேட் எடுக்கணும். திவ்யா ஒரு டி.ஷர்ட் கொடுத்திருந்தார்... Vote for Obama!
ஒரு நண்பருக்கு கல்யாணம் ஆன பத்து வருடங்கள் பிறகு இப்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... பிரார்த்தனையாக, சென்று பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு பவுன் தங்கம் காசு கொடுத்து அனுப்புகிறார். இப்படியும் சிலர்!
நாளை மதியம் நண்பர் வீட்டில் விருந்து. திவ்யாவின் குடும்ப நண்பர்.
*******
நல்ல தமாசான படங்கள் போட்டேன். பின்னூட்டங்கள் வரும் என்று நம்புகிறேன்!
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
2 comments:
அப்புறம்..
Read this blog...
http://astrologyayurveda.blogspot.com/
Post a Comment