Wednesday, May 7, 2008

ஐந்து கவிதைகள்

(1)

என் ஈழத்து நண்பர் இப்போது அங்கில்லை

இந்தியாவில் இருக்கிறார் நான் சந்திப்பதில்லை

மெயிலும் செய்வதில்லை சாட்டுக்கு ஒரு "நோ"

நண்பனை இழக்கும் வரலாறு

இது போல்தான் மௌனமாய்

கற்களில் செதுக்கபடுகின்றனவா?

(2)

சிதைக்கப்பட்ட உடல்கள்

கொடுர படுகொலைகள்

தேவையற்ற திடீர் தாக்குதல்கள்

இப்படி தான் வரலாறு ஈழத்தை காட்டுமா?

(3)

எழுபத்தி மூன்று முதல் குருதிப்புனல்

கண்ணீர்த்துளியாக இறங்கி வற்றிவிட்டது

குடிக்கும் தேநீரும் குருதியாக கரிக்கின்றது

மரணம் என்ற போதையை பதிவிடுகிறது

இப்படி தான் நிஜ போதையை

வரலாறு காட்டுமா?

(4)

தன்னலமற்று கொலைகாரர்கள்

இறுதி வெற்றியை பெற்று

சாத்தான்கள் ஆகின்றனர்

தேவதைகளுக்கு பேச்சு வரவில்லை

வரலாறும் இப்படி தான் கொலைக்களத்தை எழுதுமா?

(5)

ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலங்கள்

ஈழம் பிரச்சனை வோட்டுகளை நிரப்புமா?

வரலாறும் இப்படித்தான்

மயானங்கள் அகதி முகாம்களாக்குகின்றனவா?