Saturday, September 6, 2008

கொல்கத்தாவும் கொல்கொதாவும்

கொல்கொதா என்பது கபாலஸ்தலம் என்று அர்த்தம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் - யூத ராஜாவால் .... ஒரு கதை இங்கே.

நிஜமாகவே
கொல்கத்தா என்பது பெயர் காரணம் இல்லாமல் வந்த ஊர், கிறித்துவ அமைப்பு மூலமாக இருக்கலாம், ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆரம்பித்த இடம் ஆயிற்றே.

கொல்கத்தா நான் பிறந்து ஊர். அப்போது கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.


இப்போதுள்ள கொல்கத்தா காளிகோவிலின் பயங்கரம், கம்யூனிஸ்ட் தீவிரம், திரிணமூல் காங்கிரஸ் சத்தம், ஹூக்லி பாதிப்பு, நாங்கள் இருந்த தென் கொல்கத்தாவில் நாலா என்ற வண்ணார் பகுதி. ஜாதி பார்த்து வீடுகொடுப்பார்கள் என்று கேள்விபடுகிறேன் இன்றும். மேல் ஜாதி என்றால் வாடகையும் குறைச்சல். அரசியல்வாதிகள் இருக்கும் ஏரியா, வளர்ந்து வருது. ௨000 ரூபாய்க்கு ஒரு சிங்கள் போர்டின் வீடு கிட்டும்.

சொந்த வீடு உள்ளது, அதில் வரும் வாடகை வருடம் ஒரு முறை குடும்பத்தோடுசென்று பார்த்து வரும் செலவிற்கு ஆகும். ஒரு ரூம் எங்கள்ளுக்காக, தயார்செய்து கொடுப்பார்கள். அக்கா குடும்பத்தினர் ஹோட்டலில் தான் தங்குவார்கள்.

அன்னை தெரேசாவை மறக்க முடியாது. வீதியில் மரணம் அடைபவர்கள்ளுக்காக தனியாய் ஒரு அமைதி இல்லம் ஏற்படுத்தி கொடுத்த மகான்.

மறந்து கொண்டு இருக்கிறேன்.... மெதுவாய்.

Friday, September 5, 2008

திருக்குறள் சொல்லும் பிச்சைக்காரர்கள்

“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று

இதற்கு பரிமேலழகர், “வறுமையுற்றிரப்பவர் இல்லையாயின், குளிர்ந்த இடத்தை உடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள், உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போலும்” என்றும், மு.வ அவர்கள், “இரப்பவர்கள் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்” என்றும் கூறுகின்றனர்.

அதாவது உலகின் இயக்கம், இரப்பவர்கள் இல்லையானால், செயற்கையானதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கும் என்பதாகப் பொருள் வருகின்றது. அப்படியானால் உலகம் தொடர்ந்து இயங்க பிச்சைக்காரர்கள் அவசியம் என்று வள்ளுவர் கருதுவதாக ஆகிவிடுகிறது.

அது தவறு. காக்கை இல்லாவிட்டால் எச்சம் என்று சொல்லப்படும் மீதமான உணவு யார் எடுப்பார்கள்? சுற்று சூழ்நிலை ஆதரித்து அவரவர் வாழ்கையில் ஆயிரம் மாற்றங்கள் வரும் என்று மக்கள் வாழ்கிறார்கள், என்பதாக கொள்ளலாம்.

பெண் கலவி எப்படி எப்போது

ஆண் பெண் உறவு கலவி உட்பட எப்படி எப்போது என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்கிறார்.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
கருணாநிதி :உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா :உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

ஆகா ஆணும் பெண்ணும் உடலும் உயிராகி வாழ வேண்டும்.

ஆனால் சில பெண்கள் நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்? தகாத உறவு கொண்டு, கட்டிய கணவன் மீதே போலிசு ஏவுகிறார்கள். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்டவர்கள், பெண்களை, கல்யாணம் செய்து கொண்டு, இந்தியாவில் விட்டு சென்று விடுகிறார்கள் (முக்கியமாக கல்ப் நாடுகளுக்கு). காம இச்சைக்கு ஆட்பட்டு பெண்கள் தகாத சகவாசம் கொள்கிறார்கள். கொல்லவும் செய்கிறார்கள்.

இங்கே படியுங்கள் தெரியும்.

வன் கொடுமை சட்டம் இது. தவறு இருவர் உடையது தான். அப்படி சம்பாரித்து என்ன கிடைக்க போகிறது? சினிமா பாடல் ஆசிரியர்கள் 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது' என்று எழுதி உசுப்புகிறார்கள்.

என் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் அக்கா ஒரு ஜோக் சொல்வார்கள், அமெரிக்காவில் புருஷன் குறட்டை விட்டாலோ, காற்று வெளியிட்டாலோ (குசு), தும்மினாலோ டிவோர்சே தான்!

உண்டி சுருங்குதல்

உண்டி சுருங்குதல்
பெண்டிற்கு அழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

பெருத்து பிருஷ்டமும்
இடை அழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

கச்சிதமான தாமரை மொட்டு
கொங்கழகு
என்று சொல்கிறார்கள்

உண்ணாமல் இருக்க முடியுமா?

பெண்ணுக்கு
உண்டும் என்ன பயன்?
உண்ணாமல் என்ன பயன்?
அளவோடு உண்டு வாழும் வாழ்க்கை
வாழ்கைதான்.


உண்ணாமல் இருக்க முடியுமா?

பதிவுகளின் போதை

எனக்கு பதிவுகள் மிகவும் போதை ஏற்றுகிறது. (இப்போது புரிகிறது)

இதுவரை 40 பதிவுகள் இட்டுளேன். 1500+ வாசகர்கள் அல்லது முறை பார்த்துள்ளர்கள். நன்றி.

நேற்று சில கவிதைகள் எழுதினேன். (எழுதி பார்த்தேன் என்றும் சொல்லலாம்).

மீண்டும் முயற்சிக்கிறேன்.

நிறைய அன்பர்கள் வந்து பார்க்கிறார்கள். கமெண்ட் இடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை!

தினமும் சில பதிவுகள் டைரி மாதிரி இடுகிறேன்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ( குறள் எண் : 616 )

மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
கருணாநிதி :முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா :முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Thursday, September 4, 2008

கனிகள்

வெட்டுகிறார்கள் மரத்தை
கனிகலில்லை
கிளைகள் தான்
விழுகின்றன
கனியாய்!

ஊனம்

ஊனம் எல்லாம் தூசு
மனதளவில் தான்
கைத்தடியோ சக்கர நாற்காலியோ உள்ளது
உதவிக்கு நண்பர்கள்
வீட்டிலே மனைவி
குழந்தைகள்

கீழ் ஜாதி என்ற ஊனம்
மிக கொடியது!

மகள் கேட்கிறாள்
அப்பா அம்மா மேல் ஜாதி என்று சொல்கிறாள்
அப்படியானால்
நீங்கள் என்ன தொடக்கூடாதவர்களா ?
புரியவில்லை
சமுகம் என்ன செய்துள்ளது மனிதர்களின் மனசை?

செருப்பாய் உழைத்து
செருப்புகள் தைத்து கொடுத்த குடும்பத்தில்
புத்திரர்களாக பிறந்தது
குற்றமா?

தலித் என்ற வார்த்தையால்
ஒளிந்து கிடக்கும்
பரிதாபம்
எங்கு போய் சொல்வது?
என் மனதில் ஊனம்.

விநாயகரும் வினையும்

விநாயகரும் வினையும்

விநாயகனே வினை தீர்ப்பவனே என்று படித்து உள்ளோம், ஆனால் ராஜஸ்தானில் நடந்தது வன் கொடுமை. (ஆனால் நிச்சயம் பஜ்ரங் டல் போன்றவர்கள் கிம்சுச்சா தாங்க முடியலே)

நண்பர் ..சேகர் ( தமிழ்நாடு எம்.எல்.. ) மற்றும் .ஜ்.மஹேந்திரன் செய்த சிறுவயது பள்ளி கூத்து போல உள்ளது.

எருமையும் மழையும்

அம்மா கத்துகிறார்கள்
சீக்கிரம் வீட்டினுள் வந்து தொலை!
ஏன்டா எருமை மாடு மாதிரி அப்படியே இருக்கே?
அம்மாவுக்கு தெரியுமா
எருமை குளிப்பது மழையில் மட்டும் தான்?

அம்மா கத்துகிறார்கள்
சீக்கிரம் நகர்ந்து தொலை!
ஏன்டா எருமை மாடு மாதிரி நிக்குறே ?
அம்மாவுக்கு தெரியுமா
எருமை
அப்படி நிற்பது உங்களுக்கு
பால் கறக்க உதவ தான்!

ஒலிம்பிக் வெற்றி

ஒலிம்பிக் வெற்றி

ஒரு வேளை கஞ்சியை
வயிற்றுக்கு ஜெயிக்க வேண்டும்
தீயை வெறியாக கொண்டிருக்கும்
விளையாடடு போட்டி
இளைஞனின் வெற்றி
அங்கு விளையாட
பயணம் சென்றாலே தான்!

மின்சாரம் ஒரு பதிவு

எப்படியெல்லாம் மின்சாரம் வாழ்கையை பாதிக்கிறது....

நண்பர் பரிசல்காரன் இங்கே எழுதுகிறார்....

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)

அது சரி, அரசாங்கத்திற்கு சொல்லும் யோசனைகள், உருப்படி ஆகுமா? இல்லைஅரசாங்க வேலைகாரர்கள் வேலை தான் செய்வார்கள?

அரசாங்க வேலை பற்றி - நான் கண்ட உண்மைகளை, ஒரு பதிவு போடுறேன். பதிமூன்றுவருடம் அரசாங்க வேலைக்காரன் ஆயிற்றே.


கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
( குறள் எண் : 774 )
மு.வ : கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
கருணாநிதி :கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
சாலமன் பாப்பையா :தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

Wednesday, September 3, 2008

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!


- ரமேஷ் டெண்டுல்கர் மற்றும் குடும்பத்தினர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
( குறள் எண் : 50 )
மு.வ : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
கருணாநிதி :தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா :மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Sunday, August 31, 2008

மரத்தான் மாணவர் மரணம்

மரத்தான் மாணவர் மரணம்

சென்னையை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பவர்) மரத்தான் முடித்தவுடன் மயக்கம் அடைந்தார். பிற்பாடு, கார்டியாக் அட்டாக் மூலம் இயற்கை எய்தினார். மருத்துவ வசதி எதிர்பார்த்தபடி கிடையாது.

மருத்துவ சான்றிதல் இல்லாமல் ஓடியது தவறு!

மரத்தான் நடத்தியவர்கள் தான் காரணம்! (பெரிய எடத்து பொல்லாப்பு)


இந்த இடத்திற்கு இந்த திருக்குறள் பொருந்தும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

திருவள்ளுவர், காலம் கருதி செல்லும் உதவி உயிரை காப்பற்றும் என்று கூறியுள்ளார். இவர்கள் விளையாடிவிட்டனர்.

பெருமாள் வழிபாடு

பெருமாள் வழிபாடு பற்றி எம்.எஸ். புர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய புஸ்தகம் கூகிள் மூலமாக படித்தேன். அற்புதமான வரலாற்று சித்திரம். பல நூற்றாண்டு விளக்கம். கிறித்துவம் வராமல் இருக்க என்னவெல்லாம் தடை என்பதை கூட பெரியவர்ஸ் ஆராய்ச்சி செய்துள்ளனர். எல்லாம் ஜாதி வெறி தான். ஜெயமோகன் படித்துள்ளாரா என்பது தெரியவில்லை. கேட்க வேண்டும்.

நிமிர்ந்து நிற்கும நெஞ்சத்தை சொல்வது நாமம்.

அதிலும் இப்போது பல பிரிவுகள். வடகலை மற்றும் தென்கலை. ஜாதி மதம் எப்படி தான் செல்கிறது பார்த்தீர்களா ? கடவுளுக்கும் காதி? சீ ஜாதி... (காந்தி பற்றி எழுதி பாதிப்பு)

என் மனைவி ஐயர் ஆனதால் எல்லாம் செல்லுபடி ஆகிறது , கடவுள் பெயர் சொல்லும் போது.
சங்கரா சங்கரா காப்பாற்று! ஓம் நமோ நாராயணா!

திருக்குறள் கடவுள் வாழ்த்து கூட பெருமாளை வணங்கி தான் எழுதினார் என்கிறார்கள். பெருமாளை ஆதி பகவன் என்றும் சொல்வார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

மீண்டும் கேட்கிறேன்

மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன தவறு செய்தேன் என் காதலி
உடனடியாக திருமணம் செய்ய கேட்கிறாய்?
நீ சொன்னாய்
உன் மகளோ மகனோ பிறந்த பின் தானா?
எனக்கு உரைக்கவில்லை
பிற்பாடு மெல்ல புரிந்தது!

(1991 அஹேமேடபத்தில் எனக்கும் என் காதல் மனைவிக்கும் நடந்த சம்பாசனையில், வந்த கவிதை பெருக்கு - பெங்காலியில்)