ஆண் பெண் உறவு கலவி உட்பட எப்படி எப்போது என்பது பற்றி திருவள்ளுவர் அழகாக சொல்கிறார்.
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )
மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
கருணாநிதி :உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா :உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
ஆகா ஆணும் பெண்ணும் உடலும் உயிராகி வாழ வேண்டும்.
ஆனால் சில பெண்கள் நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்? தகாத உறவு கொண்டு, கட்டிய கணவன் மீதே போலிசு ஏவுகிறார்கள். பொருள் ஈட்டும் நோக்கம் கொண்டவர்கள், பெண்களை, கல்யாணம் செய்து கொண்டு, இந்தியாவில் விட்டு சென்று விடுகிறார்கள் (முக்கியமாக கல்ப் நாடுகளுக்கு). காம இச்சைக்கு ஆட்பட்டு பெண்கள் தகாத சகவாசம் கொள்கிறார்கள். கொல்லவும் செய்கிறார்கள்.
இங்கே படியுங்கள் தெரியும்.
வன் கொடுமை சட்டம் இது. தவறு இருவர் உடையது தான். அப்படி சம்பாரித்து என்ன கிடைக்க போகிறது? சினிமா பாடல் ஆசிரியர்கள் 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது' என்று எழுதி உசுப்புகிறார்கள்.
என் அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் அக்கா ஒரு ஜோக் சொல்வார்கள், அமெரிக்காவில் புருஷன் குறட்டை விட்டாலோ, காற்று வெளியிட்டாலோ (குசு), தும்மினாலோ டிவோர்சே தான்!
ஐந்து முகங்கள் – கடிதம்
1 day ago
No comments:
Post a Comment