Saturday, August 30, 2008

சீரியசான போட்டி.. எதாவது செய்யணும் பாஸ்!

சீரியசான போட்டி..

எதாவது செய்யணும் பாஸ்!

படித்த போது மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.

உருப்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை என்று தோன்றுகிறது. (இதற்கும் தீட்சை பெற்றவன்)

இயற்கையே, பிகாரிலும் , வடக்கு பெங்களூரிலும் தண்ணீரால் கொடுமை செய்கிறது. குளத்தை அழித்து மனிதர்கள் வீடு கட்டுகிறார்கள். குகைகளுக்குசென்று விடலாமா? பரிவர்டன் போல கட்சி ஆரம்பித்து ஒரு கை பார்கலாமா? எனக்கு தெரிந்த வரை விஜயகாந்தும், இப்போது சிரஞ்சீவியும் தன் உருப்படியாக பேசுகிறார்கள். அரசியல் மாற்றம் வேண்டும். ஜாதி ஒழியனும். அனைவருக்கும் உணவு கிட்டனும். ப்லாகர் சமுதாயம் குடிப்பதை நிறுத்தி (போதை குடிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளுங்கள்), குறைந்த பட்சம் ஒருவருக்கு தினமும் உதவி செய்யணும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யணும். (இந்திய பாஸ்ப்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு - அமெரிக்காவில் அல்லது வேறு வெளி நாடுகளில் கிரீன் கார்டு மற்றும் சிடிசன்கள் ஆக இருப்பவர்கள் மன்னிக்கவும் . என்னிடம் ஜோதிடம் கேட்டு, மில்லியன் டாலர் ஆக இருந்த வீடு இப்போது பாதி விலை ஆகிவிட்ட சோகம் குறைய பரிகார முயற்சி செய்யுங்கள்! வருடம் ஒரு முறை இந்தியா வந்து செல்லுங்கள் குடும்பத்தோடு!).

நிச்சயம் எதாவது செய்யணும். இபோதெல்லாம் நான் ப்லோகர்ஸ் எழுதுவதை பார்த்தால் ஒரு சமுதாய சிந்தனை உள்ள போல தெரிகிறது!
நன்றிகள்.

உலகின் சிறிய கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார், "ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி ." என்பது தான் உலகின் சிறிய கதை என்று.

எனக்கு தெரிந்த வரை எழுத்தாளர் சுஜாதா எழுதியது (எங்கோ இருந்து சுட்டது) "உலகம் அழிந்தது. அவன் மட்டும் தனியே. அப்போது கதவு தட்டப்பட்டது." (World demolished, alone, he heard the door knock!)

நன்றி திரு விஜயஷங்கர் அவர்கள்.


World's Shortest Story

நான் தலித்

நான் தலித் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மகார் இனத்தில் பிறந்தவன். ஒரு உயர்ந்த ஜாதி (தமிழ் ஐயர்) பெண்ணை மனம் செய்துள்ளேன் காதல் புரிந்து. அவரகள் வித்தியாசமான குடும்பம்.

எங்கள் குடும்பம் ஏன் தலித் ஆனது? ஆண்டு ஆண்டு காலமாய் எங்கள் குடும்பத்தினர், எங்கள் தாத்தா வரையில், மீனவ தொழில் செய்யாமல், பாலுக்கு எருமை வளர்ப்பு மற்றும், முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு மாமிசம் கிடைக்க மாடு வளர்த்தி கொடுத்தால், சில உயர் ஜாதி பிரிவினர் எங்களை தலித் (அதாவது கீழ் ஜாதி) என்று சொல்லி விட்டனர். சிலர் எங்கள் ஜாதியில் வீதி கலைஞர்கள் என்றும் சொல்வார்கள். கூத்தாடிகள் கூட்டம். எங்கள் ஜாதியில் பெருமை மிக்க எழுத்தாளர்களும், விளையாட்டுவீரர்களும் உள்ளனர். சில மத்ய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் உண்டு. பெல்காம் கர்நாடகாவில் சில குடும்பங்கள் உள்ளன. அடுத்த மகாராஷ்டிரா சீ.எம். எங்கள் ஜாதி தான். எங்கள் ஜாதியில் 90% வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.

எங்கள் தாத்தா கஷ்டப்பட்டு, எங்கள் அப்பாவை எஞ்சினீர் ஆக படிக்க வைத்து கொல்கட்டாவிற்கு அனுப்பி வைத்தார். என்னையும், என் அக்காவையும், முறையே, எஞ்சினீர் மற்றும் டாக்டர் ஆக படிக்க வைத்து பெருமை சேர்த்தார். என்னை போலவே என் அக்காவும் காதல் மனம் புரிந்தார், தனது இருபத்தி ஒன்பதாவது வயதில். மாபிள்ளை அவரகள் கெக்வாத் ராஜா வம்சத்தில் பிறந்தவர், அமெரிக்காவில் டாக்டர்! இரு பெண் பிள்ளைகள். சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் மாரிலாந்து மாநிலத்தில் பெரிய வீட்டில் வாழ்கிறார்கள். என் அம்மாவும், அப்பா சென்ற வருடம் மறைந்தார், அங்கு தான் உள்ளார்.

ஆனால் ஒரு சிறு கிராமம் தான் எங்கள் இனத்தவரின் ஊர். கோலாபூர். செருப்பு விற்பதில் பெரிய பெயர் பெற்றது. உலக சிறப்பு வாய்ந்தது. ஹிந்து முஸ்லீம் ஒருமைப்பாடு இங்கு அதிகம். விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செலவு செய்வது முஸ்லிம்கள் தான். அது ஒரு மரபு.

என் சித்தப்பா ஒரு முஸ்லீம் பெண்ணை மனம் செய்தார். அவரகள் ஒருபிள்ளைக்கு ஹிந்து பெர்யரும், ஒரு பிள்ளைக்கு முஸ்லீம் பெயரும் இட்டனர். வளர்ந்த விதத்தில் அவரகள் இருவரும், அமெரிக்காவில் வாழ்கின்றனர், ஹிந்துகளை மணம் செய்து. அவரகள் இருவரும் மணம் முடித்து, திரினிடட்மற்றும் டோபாகோ தீவு நாட்டை சேர்ந்தவர்களை.
அவரகள் கோலாபூர் வந்தால் ஹெலிகோப்டேரில் தான் வருவார்கள், மும்பையிலிருந்து.

புணர்ச்சி இன்பம் திருக்குறள்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் முகர்ந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு. (அதாவது வயதிற்கு வந்த பிறகு)

திருக்குறள் மிக அழகாக சொல்கிறது, பெண்ணை முன் வைத்து. ஆனால் பெண்ணால் தான் எல்லா சுகமும் என்று சொல்வதில். சாமியார்களும் பெண் சமைத்து கொடுத்த உணவை தன் உண்பார்கள் என்பது மரபு. என் தாத்தா சொல்லியுள்ளார், என்னிடம் சங்கர மட பீடத்தில் அமர்பவர்கள் மலத்தை வாழை இலையில் தான் கழித்து, பெண்களால் எடுத்து புதைக்கப்பட வேண்டுமாம்! எங்கள் குடும்பம் தலித்தாக இருப்பினும், சங்கர மட விசுவாசிகள் காலம் காலமாய். மது மற்றும் மாமிசம் தொடமாடோம். (நான் கடவுள் விதிவிலக்கு, என்னில் நான் கடவுள் கண்டதால். அம்மா அம்ரிடானண்ட மாயி அவர்களிடம் தீட்சை பெற்றுள்ளேன்.) . ஆதி சங்கரர் சொல்லியுள்ளார் ஒரு நாள் தீட்சை பெற்ற மன வாழ்க்கை மைந்தர் சங்கர மடத்தை வழி நடத்துவார் என்று.

இதை சொன்னதில் எனக்கு பெண்கள் மீது கோபம் என்று சொல்ல வைக்காதீர்கள். பெண்ணிலிருந்து தான் ஆண் வ்ந்திருகிறான்.

Friday, August 29, 2008

காந்தியும் செக்சும் மற்றும் எனிமா

நண்பர் பத்ரி தன் வலைத்தளத்தில் எழுதியுள்ளார் இப்படி ..

காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்

முதலில் காந்தியின் சுய சரிதை படிக்க எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான்இருந்தது, வீணாக, தேவையில்லாமல், தன் மீது கஷ்டம் வரவழைத்து கொள்கிறார் என்று. அவ்ருக்கு இருந்த திறமையில், இந்தியாவை எங்கோ கொண்டு சென்று இருக்க முடியும்.


இயற்கை மருத்துவ முறையில் எனிமா செய்து கொள்வது நல்லது. "இனிமைதரும் எனிமா" என்ற புஸ்தகம், சென்னையில் புக் எக்ஜிபிசொனில் வாங்கினேன். பிறகு காதி பவனில், எனிமா டம்ளர் கிடைத்தது. கலை கடன் முடித்த பிறகு, ௨00 மில்லிதண்ணீரில், எனிமா எடுத்து கொண்டால், நாள் முழுதும் உற்சாகம் தொடர்கிறது. என்ன, டைம் தான் தேவை படும், சுமார் ௨0 நிமிடம், தண்ணீர் ஆசன வாயில் வழியாக செலுத்திய பிறகு, நிற்க வேண்டும். தினமும் ஒரு முறை வெளிக்கி சென்றால் போதுமானதாக உள்ளது. ( வைரமுத்து கோபித்து கொள்வார், அவர் இரண்டு முறை ஏவுகணை அனுப்புபவர், நல்லது என்று சொல்பவர் ).

எனக்கு காய்ச்சல் வந்த பொது, இளம் சுடு நீரில் எலுமிச்சை சாறு கலந்து, எனிமாகொடுத்தேன். மருந்தில்லாமல் காய்ச்சல் நின்றது. என் குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன். பெண்கள் கொஞ்சம் கூச்சம் படுகிறார்கள்.
மாத விடாய் முடிந்த பிறகு, சுத்தம் செய்ய உதவும்.

உங்கள் மலக்குடல் உங்கள் உயரம் இருக்கும் பதினெட்டு வயதில். அமிதாபுக்கு இரண்டு அடி வெட்டி விட்டார்கள், கண்ட சாப்பாடு சாப்பிட்டு. காப்பற்றுங்கள் அதை கஷ்டப்பட்டு.

கமல் கருப்பு காவி

கமல் இரட்டை வேடும் போடும் கருப்பு சட்டை அனிந்த காவி ஆள் என்று நன்றாகசொல்லியுள்ளார் வேலு பிரபாகரன். பேட்டி அருமை.

இட்லி வடையில் படியுங்கள் ஸ்கான் செய்ததை.

கமல் கருப்பு காவி

என்னை பொறுத்த வரையில் கமல் அதீச்ட் இல்லை அக்னோச்ட்.

(தசாவதாரம், "கடவுள் இருந்திருந்தா நல்ல இருக்கும்")

எஸ்.பொன்னுத்துரை ஈழம்

எஸ்.பொன்னுத்துரை ஒரு ஈழ எழுத்தாளர்.

இணையத்தில் படித்து கொண்டு இருக்கும் பொது, அவர் பெயர் சொல்லப்பட்டது.

தேடினேன். கிடைத்தது. இங்கே எழுத்தாளர் ஜெயமோகனின் (எனக்கு புரியாத தமிழில்). இரண்டு முறை படித்தேன், ஓரள்வு புரிந்தது.

எனக்கும் ஈழத்திற்கும் ஒரு சிறிய சம்பந்தம் தமிழ் மூலமாக. மனைவிக்கு, அவருடைய பாட்டனார் சீலோனில் கொழும்புவில் இந்தியா தூதரக அதிகாரியாக இருந்திருக்கிறார் பதினைந்து வருடம் (இந்தியா சம்பளம் மட்டும் தானாம்!).

பைபிள்

சிறு வயதில் கொல்குட்டாவில் படித்த பொது, தினமும் ஸ்கூல் ஆரம்பிக்கும் போது பைபிள் வாசிக்கப்படும். சனி ஞாயிறு அப்பா வசிக்கும் கீதை மட்டும் காலையில் சத்தமாக.

எம்மதம் ஆனலும் மாரல் சயேன்ஸ் படிக்கும் பொது கிறிஸ்துவ கதைகள் தான் வரும். (நான் தலித் ஆகையால் கிருச்டியன்ஸ் ஜாதி பார்க்க மாட்டார்கள் என்பது மகிழ்ச்சி தந்தது.)

பின்வரும் பிலாகில் எழுதியுள்ள செய்தி மனசுக்கு வருத்தம் அளிக்கிறது. மறைவு தாக்கு.

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_9682.html

Thursday, August 28, 2008

தோனிக்கு கேல் ரத்னா விருது

தோனிக்கு கேல் ரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது.

அவருடைய அப்பா வாங்குகிறார்.

என்ன அன்பு! என் மனம் குளிர்ந்தது.

நிச்சயம் இது திருவள்ளுவருக்கு பிடித்திருக்கும்.

சான்றோன் என்ற குறள், படிப்புக்கு பதில் விளையாட்டு என்று வாசிக்கவும். தாய்க்கு பதில், தந்தை.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
( குறள் எண் : 69 )
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

ரஜினிக்கு அரசியல் வேண்டாமா?

ரஜினிக்கு அரசியல் வேண்டாமா?

விடை இங்கே.

நன்றாக தான் செய்துள்ளார், போல்லிங்.

இட்லிவடை - அவருடைய பெயர் ஒரு சீக்ரட்.

ஆக மொத்தம் ரசிகர்கள் கையில் தான் உள்ளது. (சிரஞ்சீவி செய்த மாதிரி)

Tuesday, August 26, 2008

சிரஞ்சீவி கட்சி பிரஜா ராஜ்யம்

சிரஞ்சீவி கட்சி பிரஜா ராஜ்யம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஆந்தர லோக்கல் பார்ட்டி இப்போது.

நல்ல பெயர்.

அர்த்தம் - மக்கள் ஜனநாயகம் அல்லது மக்கள் அரசாங்கம்.

சூப்பர்.

வாழ்க.

பகவத் கீதை உண்மை


பகவத் கீதை அல்லது பாகவதம் ஒரு சிறப்பான காவியம். உண்மை வாழ்க்கைக்கு. எம் மதத்திற்கும்.
கண்ணனின் அவதாரம், கடவுள் ஒரு மிகைபடுத்தப்பட்ட மனிதராக வருவது சினிமா போல உள்ளது. கருத்துகள் ஆழம். இது ஒரு அவதாரம் கதை.
லீலை புரிபவன் கண்ணன். வாழ்கையும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
குழந்தைகள் எப்படி தொந்தரவு செய்வார்கள் என்பதை, நன்றாக சொல்வது கண்ணன் கதை.
எங்கள் குல தெய்வமும் கண்ணன் தான். ஆனால் என் தாத்தா மற்றும் முபாடனர், செருப்பு தொழில் தான் செய்தனர். சங்கரனை வழி படுபவர்கள். (ஒரு பிரிவினர், மேல் ஜாதி, சங்கரன் - சிவன், சுடுகாடு வாசச்தன் என்று சொல்லி, நரகத்திற்கு குடும்பத்தோடு போவீர்கள் என்பார்கள். டுபாக்கூர்.)

எங்கெல்லாம் ஜாதி விளையாடுதோ அங்கெல்லாம் வெள்ளம் வருது - பீகார் பாருங்கள்... கோசி...


ஜெயமோகன் எப்படி
எழுதுகிறார்!

'எங்குயோகத்திலமர்ந்த
கிருஷ்ணனும்வில்லேந்திய
பார்த்தனும்இணைகிறார்களோ
அங்குமங்கலங்களும்வெற்றியும்
வளமும்நிலைபெறு
நீதியும்என்றுமிருக்கும்என்று
உறுதி கூறுகிறேன்.’

முடிவு கவிதை நன்றாக தான் உள்ளது!


புகழ்

தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

திருக்குறளில் வள்ளுவர் என்ன சொல்கிரார் புகழ் பற்றி?

புகழோடு, அதாவது புகழை நோக்கி ( குறைந்த பட்சம் குடும்பத்திற்குள் ) புகழ், பெருமை, பெயர், நாமகராணம், பெற்று வாழ்வது தான் மனிதருக்கு நல்லது.

என் நண்பர்கள் சொல்வது போல பிறந்தால் காந்தி குடும்பத்தில் பிறக்கணும், அவ்வளவு பெருமை உலகில் அவருக்கு. நான் அரசியல் சொல்லவில்லை. அஹிம்சா பற்றி சொல்கிறேன்.

தீமை கூடாது. வாழ்க்கை அடிப்படை.