நான் தலித் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மகார் இனத்தில் பிறந்தவன். ஒரு உயர்ந்த ஜாதி (தமிழ் ஐயர்) பெண்ணை மனம் செய்துள்ளேன் காதல் புரிந்து. அவரகள் வித்தியாசமான குடும்பம்.
எங்கள் குடும்பம் ஏன் தலித் ஆனது? ஆண்டு ஆண்டு காலமாய் எங்கள் குடும்பத்தினர், எங்கள் தாத்தா வரையில், மீனவ தொழில் செய்யாமல், பாலுக்கு எருமை வளர்ப்பு மற்றும், முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு மாமிசம் கிடைக்க மாடு வளர்த்தி கொடுத்தால், சில உயர் ஜாதி பிரிவினர் எங்களை தலித் (அதாவது கீழ் ஜாதி) என்று சொல்லி விட்டனர். சிலர் எங்கள் ஜாதியில் வீதி கலைஞர்கள் என்றும் சொல்வார்கள். கூத்தாடிகள் கூட்டம். எங்கள் ஜாதியில் பெருமை மிக்க எழுத்தாளர்களும், விளையாட்டுவீரர்களும் உள்ளனர். சில மத்ய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் உண்டு. பெல்காம் கர்நாடகாவில் சில குடும்பங்கள் உள்ளன. அடுத்த மகாராஷ்டிரா சீ.எம். எங்கள் ஜாதி தான். எங்கள் ஜாதியில் 90% வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.
எங்கள் தாத்தா கஷ்டப்பட்டு, எங்கள் அப்பாவை எஞ்சினீர் ஆக படிக்க வைத்து கொல்கட்டாவிற்கு அனுப்பி வைத்தார். என்னையும், என் அக்காவையும், முறையே, எஞ்சினீர் மற்றும் டாக்டர் ஆக படிக்க வைத்து பெருமை சேர்த்தார். என்னை போலவே என் அக்காவும் காதல் மனம் புரிந்தார், தனது இருபத்தி ஒன்பதாவது வயதில். மாபிள்ளை அவரகள் கெக்வாத் ராஜா வம்சத்தில் பிறந்தவர், அமெரிக்காவில் டாக்டர்! இரு பெண் பிள்ளைகள். சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் மாரிலாந்து மாநிலத்தில் பெரிய வீட்டில் வாழ்கிறார்கள். என் அம்மாவும், அப்பா சென்ற வருடம் மறைந்தார், அங்கு தான் உள்ளார்.
ஆனால் ஒரு சிறு கிராமம் தான் எங்கள் இனத்தவரின் ஊர். கோலாபூர். செருப்பு விற்பதில் பெரிய பெயர் பெற்றது. உலக சிறப்பு வாய்ந்தது. ஹிந்து முஸ்லீம் ஒருமைப்பாடு இங்கு அதிகம். விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் செலவு செய்வது முஸ்லிம்கள் தான். அது ஒரு மரபு.
என் சித்தப்பா ஒரு முஸ்லீம் பெண்ணை மனம் செய்தார். அவரகள் ஒருபிள்ளைக்கு ஹிந்து பெர்யரும், ஒரு பிள்ளைக்கு முஸ்லீம் பெயரும் இட்டனர். வளர்ந்த விதத்தில் அவரகள் இருவரும், அமெரிக்காவில் வாழ்கின்றனர், ஹிந்துகளை மணம் செய்து. அவரகள் இருவரும் மணம் முடித்து, திரினிடட்மற்றும் டோபாகோ தீவு நாட்டை சேர்ந்தவர்களை. அவரகள் கோலாபூர் வந்தால் ஹெலிகோப்டேரில் தான் வருவார்கள், மும்பையிலிருந்து.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment