கண் கட்டிய குதிரைகள்
நாங்கள், தேடுவதோ காசு
கரை கடந்து வந்தோம்
கனவுகள் சுமந்தோம்
அங்கே ஒருத்தி தனியாய்
காத்திருக்கிறாள் நிஜத்தில்..
ஒரு ஜான் மஞ்சள் கயிறு
தாலியாகி மனைவியானவள்
துள்ளி விளையாடின குழந்தைகள்
எங்கள் மனதில் தான்
நிஜமாய் துள்ளுவது
லீவு வாழ்க்கையில் தான்
எங்கள் வாழ்வும் வளமும்
ராணூவ வீரர்கள் போன்றது
தேசம் காக்கிறார்கள் அவர்கள்
குடும்பம் காக்கிறோம் நாங்கள்
(திரு நரசிம் அவர்கள் எழுதிய ஒரு பதிவு, இந்த கவிதை எழுத தூண்டியது.)
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago