கருணாநிதி தமிழ்நாடு ஏழைகளுக்கு ஒரு ருபாய் அரிசி மாதம் இருபது கிலோ கொடுக்க போகிறார் என்று அறிவிப்பு செய்துள்ளார், செப்டம்பர் பதினைந்து முதல். நல்ல திட்டம். வரவேற்கிறேன். ஒரு நாள் வேலை செய்தால் ஒரு மாத உணவு. நல்லது. ஏசி ரூமில் உட்கார்ந்த நாம் கும்மியடிப்போம், தவறென்று சொல்லி.
ஆனால் விவசாயி நிலைமை? (இதற்கும் ஆர்காடாருக்கும் என்ன சம்பந்தம்)
அதனால் நான் ஒரு திட்டம் போடுகிறேன். நண்பர்களும் செர்ந்துகொள்ளேலாம்.
ஒரு கோடி ரூபாய்க்கு எவ்வள்வு ஏக்கர் நிலம் கிடைக்கும், அரிசி சாகுபடி செய்ய?
எவ்வளவு போகம் எடுக்கலாம்?
எவ்வளவு வருமானம் வரும்?
என் அருமை நண்பர் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு சேலம் ராசிபுரம் பகுதியில் நல்ல அரிசி சுமார் பதிமூன்று முதல் பதினைந்து வரை கிலோவிற்கு எடுக்கிறார். பணம் வாங்கியவுடன் கந்து வட்டிகாரர்கள் வந்து பணம் பிடுங்கும் கட்சி மிகவும் கொடியது என்கிறார்.
அவரும் நானும் ஒரு கோடி முதலீடு செய்து (ரிஸ்க் காபிடல்), அரிசி சாகுபடி செய்து, வருமானம் பார்க்கலாம் என்று இருக்கிறோம். விவரம் தெரிந்த நீங்கள் சொல்லுங்கள்.
டெக்கான் கோபிநாத் மற்றும் சிலர் அரிசி சாகுபடி செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே அவர் நோர்மல் விட ஏழு பங்கு அதிகம் லாபம் நிலத்தில் பார்த்தவர், இயற்கை உரம் மூலமாக. நான் அரசாங்கத்தில் வேலை பார்த்த பொது விவசாயிகள் சொன்னது, பீயை எவனாவது போட்டு அரிசி வளப்பானா என்று. திருந்தாத ஜென்மங்கள். இப்போ சாண்ட கிளராவில் (கலிபோர்னியா) மீதேன் வாயு எடுக்கிறார்கள் மலத்தில் இருந்து. அதை வைத்து ஜெனரடோர் ஒட்டி கரண்ட் கொடுக்குறார்கள்.
சுமார் ஆயிரம் கோடி ருபாய் மாணியம் வழங்கும் அரசு, வியேட்நாம் போலே ஏன் செய்யவில்லை?
(அரசே விவசாயம் ஒரு நிறுவனம் மூலம் செய்வது, லாபத்தின் குறிகொளோடு).
கையுட்டு. லஞ்சம்.
தொடர்புடைய பதிவுகள்...
ஜோதிபாரதி, சிங்கப்பூர்
ஜ்யோவ்ராம் சுந்தர், சென்னை
ஐந்து முகங்கள் – கடிதம்
12 hours ago