செப்டம்பர் பதினொன்று இரண்டாயரத்தி ஒன்று, ஒரு மறக்க முடியாத நாள். நான் அப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் எனது அக்கா வீட்டில் இருக்கிறேன். இரண்டு வாரம் பயணம், ஒரு வீட்டு விசேஷம் அங்கே. அப்போது என் மகள் மஞ்சு மட்டும் தான். ஒரு வயது. என் அமெரிக்க உறவு 1991 முதல் 1994 வரையும் (வாழ்ந்து சம்பாரித்த ஊர்), பிறகு 1996, 1998, 1999, 2001, 2004, 2006 (இரண்டு, நான்கு, ஆறு வாரங்கள்) என தொடர்கிறது.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் பிடிக்காமல், பின் லாடேன் படை, திவிரவாதம் என்ற பெயரால் நியூ யார்க்கின் புகழ் பெற்ற உலக வர்தக மைய்யத்தை விமானம் கொண்டு தகர்க்கிறார்கள். இரட்டை கோபுரம் என்றும் சொல்வார்கள். தெனாவெட்டு அடக்கப்பட்டது என்றார் என் தமிழ் நண்பர் ஒருவர்.
சுமார் நான்காயிரம் பேர் மரணம் அடைந்தனர். அவர்களை இந்நேரம் நினைவு கூறுவோம்.
எதற்க்காக என்பது எதுவாக இருந்தாலும், ஒரு கொள்கைக்காக அப்பாவிகளை கொல்வது, கஷ்டமாக உள்ளது. இது இராக் மீது படை எடுக்க உதவியது. சதாம் ஹுசைனும் கொல்லபட்டார். பெட்ரோல், டீசல் இப்போது இராக்கிலிருந்துஅமெரிக்காவிற்கு பறக்கிறது. இதற்காகவா?
என் அக்கா குடும்பம், இந்தியா திரும்பி விடுவது நல்லதா என்று யோசிக்க தொடங்கினார்கள். இன்னும் அங்கு தான் உள்ளார்கள், தினம் தினம் உஷார் தான். அக்கா மருத்துவ மேல் படிப்பு படிக்க ௧௯௮௯ இல் அங்கு சென்றார்.
என் அக்கா வீட்டருகில் ஒரு நினைவு அஞ்சலி கூட்டம் காலை பத்து மணிக்கு, செப்டம்பர் பதினைந்து. அன்று நாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். விமானங்கள் சர்வீஸ் மீண்டும் தொடங்கிய நாள். முதன் முதலில் ஒரு கூட்டம் கண் கலங்கி (அவர்கள் குடும்பம் சம்பந்தம் இல்லாமல்) நிற்பதை பார்த்தேன். முதல் முறையாக தேம்பி தேம்பி அழுதேன், பப்ளிக்காக. ஏன் என்று தெரியவில்லை. என் அப்பா அம்மாவும் அங்கு இருந்தனர். அவர்கள் மனம் கஷ்டப்பட்டது. அவர்கள் வருடம் ஆறு மாதங்கள் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அங்கே தான் இருப்பார்கள். இது நிறைய வருடங்கள் தொடர்ந்தது. என் கல்யாணத்திற்கு மட்டும் கொஞ்சம் முன்னாக வந்தார்கள். அப்பா சென்ற வருடம் காலமான பிறகு (அப்போது கூட நான் சரியாக அழவில்லை), அம்மா அங்கேயே தான் இருகிறார்கள். உடல் நலம் அம்மாவுக்கு சுமாராக உள்ளது. சென்ற மாதம் கிட்னி அபொரசொன் செய்தார்கள். கிரீன் கார்டு இருப்பதால், கட்டாயம் இரண்டு வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு வருடம் (366 நாட்களாவது) இருக்க வேண்டும். அப்பாவிற்கு 1250 டாலர்கள் உதவிதொகையும், இப்போது அம்மாவிற்கும் தொடர்கிறது. 65 வயதிற்கு மேல் கட்டாயம் தொடர்கிறது. அதை அவர்கள் அங்கேயே உதவி செய்து மனம் த்ருப்தி அடைகிறார்கள்.
செப்டம்பர் பதினைந்து இரவு எட்டு மணிக்கு பிராங்க்பர்ட் வழியாக, சென்னைக்கு. இரண்டு மணி நேரம் முன்பாக புறப்பட இருந்ததை சோதனைக்காக இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்பினோம். அமெரிக்க தலை நகர் வாஷிங்டன் டி.சி. இரண்டு ஏர்போர்ட் கொண்டது. அறை மணியில் வீட்டிலிருந்து செல்லலாம். நான்கு மணிக்கே கிளம்பி விட்டோம். நல்ல வேலையாக பிரச்சனை இல்லாமல் விமானம் ஏறினோம். பிராங்க்பர்ட் தான் கஷ்டம் கொத்து. அங்கும் மீண்டும் பற சோதனை. என் குழந்தை த்ரொலெயை ஸ்க்ரெவ் டிரைவர் போட்டு திறந்து பார்த்தனர். கொடுமை அது. ஒரு ஊனமுற்றவர் அணிந்திருந்த காலை, எக்ஸ்ரே மூலம் ச்செக் செய்து கொண்டே இருந்தனர்.
அதன் பிறகு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அங்கு குடும்பத்தோடு சென்று வருகிறோம். குழந்தைகள் பள்ளி செல்வதால் ஏப்ரல் மற்றும் மே ஆறு வாரம் அங்கு தான். அங்கு செல்லாத போது இந்தியா சுற்றுப்பயணம். அக்காவும் குடும்பத்தோடு அதே மாதிரி நான்கு வாரம் வந்து செல்கிறார்கள் நவம்பர் டிசம்பரில், தீபாவளியை பொறுத்து மற்றும் அவர்கள் குழந்தைகள் பள்ளி விடுமுறை கணக்கில் வைத்து (நவம்பர் மூன்றாவது வாரம் முதல் ஜனவரி முதல் வரை). இந்த வருடம் அம்மாவை அழைத்து செல்ல வந்த மாதிரி ரெகுலராக இனி மேல் ஜூலை ஆகஸ்டில் வரலாம், அங்கு முழு ஆண்டு பள்ளி விடுமுறை அப்போது தான். இந்த வருடம் முதல் அக்காள் மகள் நிதினா காலேஜு செல்கிறாள். எப்படியும் சுமார் ஒரு வருட இடைவெளியில் நேரில் பார்த்து விடுகிறோம். பிறகு தினமும் ஒரு பத்து நிமிடம் இரவு (அங்கு காலை) வீடியோசாட் செய்கிறோம்.
இந்தியாவா அமெரிக்காவா என்பது அங்கு வாழும் இந்தியர்களுக்கு இன்னும் குழப்பம். குழந்தைகள் அங்கு பழகி விட்டால், இந்தியா திரும்ப வருவது அவர்களுக்கு கஷ்டம். (என் குழந்தைகளுக்குஅங்கு கிடைக்கும் பர்கர் மற்றும் பிரெஞ்சு பிரய்ஸ் ரொம்ப பிடிக்கிறது - வெஜீடரியான் தான்)
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment