மேலும் மேலும் அதிகரிக்கும் என்று விலை ஏற்றம் செய்யும் தொழில் ரியல்எஸ்டேட். நானும் கடந்த ஒன்றரை வருடங்கள் அதில் உள்ளேன். ஆனால், ஐந்துகோடி போன்ற மினிமம் விலையில் தான், தொழில்யாதிபர்களுக்கு.
புதிய ஏர்போர்ட் இருக்கும் இடம் தேவனஹள்ளி. ஒரு குக்கிராமம். தரை மட்டம். பெங்களூரில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரம். அருகில் சுமார் பத்துகிலோமீட்டர் அளவு தூரத்தில் நந்தி மலைகள். கிராமங்கள் எல்லாம் காலிஆகிவிட்டன. பதினாறு சென்ட் நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு மையின் ரோடில் நண்பர் வாங்கினார். பத்து வருடம் முன்பு மொத்தம் ஒரு லட்சம் தான்ஆகியிருக்கும். இபோதெல்லாம், பெங்களூரில் இருந்து எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தான் இடம் ஒரு கிரவன்டு பத்து லட்சத்திற்கு கிடைக்கும். ஹோசூர் பரவாயில்லை 10 லட்சத்திற்கு இரண்டு கிரவன்டு வாங்கினேன் ரயில் நிலையம் அருகில்.
நான் வாழும் பெங்களூர் பன்னேருகட்டா ரோட்டில் இருந்து புதிய ஏர்போர்ட் செல்ல அதி காலையில் ஒன்றரை மணி நேரம், பீக் ட்ரபிகில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகிறது. எலேக்ட்ரோனிக்சிட்டியில் இருந்து மூன்று மணி நேரம், குறைந்த பட்சம். அங்கிருந்து (எலேக்ட்ரோனிக்சிட்டி) பத்து நிமிட தூரத்தில் ஹெலிகாப்டர் வசதி உள்ளது. ஐந்தாயிரம் ஒருவருக்கு. என்ன செய்வது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கொதிக்கிறார். கிரண் மஜும்டர் ஷாவும் அழுகிறார்.
சென்னை செல்வதற்கு நாங்கள் ட்ரைன் தான். காலை ட்ரைன் ஆறு மணி சதாப்தி பதினோரு மணிக்கு சென்ட்ரல் செல்லும். ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால் போதும் கன்டோன்மன்ட் நிலையத்துக்கு ஆறு பத்துக்கு தான் வரும். செலவு சுமார் ஆயிரம்.
காலி ஐந்து மணிக்கு எழுந்து குளித்து ஐந்தரைக்கு கிளம்பி டாக்ஸி எடுத்து எழுமணிக்கு ஏர்போர்ட் சென்று, எட்டு மணி விமானம் எடுத்தால், அதுவும் சரியான சமயத்தில் டேக் ஆப் செய்தால், சென்னை மௌன்ட் ரோடுக்கு போக பதினோரு முதல் பன்னிரண்டு மணி ஆகும். செலவு ஐந்தாயிரம்.
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment