நாகூர் ரூமி வலைத்தளம் மிகவும் சிறப்பாக எழுதுகிறார். ஒருவன் எப்படி முழுமையான முஸ்லீம் ஆகிறான் என்பதை மிகவும் தெளிவாக கூறுகிறார்.
ஒரு முறை கோவை ந.ஹ.ரோடு முஸ்லீம் ஒருவரை , என் நண்பரின் தாத்தா, நான் சில காலம் கோவையில் பணியில் இருந்த போது ... பார்த்துள்ளேன்... பேசியுள்ளேன். பெயர் மறந்து விட்டது. அந்த காலத்தில் குதிரையில் செல்வாராம். போலீஸ் ஆள் என்று கேள்வி. காலை மாலை இரு வேலை இரண்டு சப்பாத்தி தான் உணவு.
குரான் பற்றி நிறைய விளக்கங்கள் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். ஆங்கிலத்தில் படித்தேன், முழுவதும். 'நீ முழு முஸ்லீம் ஆகிவிட்டாய்' என்றார். 'ஏன்' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார், எவனொருவன் ஆண்டவனின் முழு படைப்பையும் படிக்கிறானோ (குரான்) அவனே ஒரு முஸ்லீம்' என்று சொன்னார். மனதில் ஒரு இறை காவியம் படித்த மகிழ்ச்சி!
ஒன்று சொல்ல வேண்டும், சில விளக்கங்கள், மிகவும் அறிவுபூர்வமாக இருக்கின்றன (புரியும்படி). உதாரணம் சுமார் 700 பி.சி. யில் குழந்தை எப்படி உருவாகும் என்பதை எழுதி இருக்க முடியாது!
அந்த பெரியவர் சொன்ன இரு விஷயங்கள் நான் வாழ்கையில் மறக்க மாட்டேன். "வெள்ளை உணவு பொருட்களை மத்ய வயதில் இருந்து சாப்டாதே". யாரோ ஒரு சுபி பெரியவர் சொன்னதாம். (ரஜினிகாந்த் இதை தான் சொன்னார் சமீபமாக). மனிதனுக்கு நாவை அடக்குவது, இச்சை அடக்குவது, ஆட்கள் அடக்குவது சுலபம் ஆனால் இயற்கை உபாதை மட்டும் அடக்கவே முடியாது! அவ்வளவு உண்மை! இது மனோதிடம். தவம். இதற்கு தான் அவரவர்கள் இமயமலை சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், எல்லாவற்றையும் வாழ்கையில் கற்றுவிட வேண்டும், முடிந்த வரை என்கிறார் அவர். வாழும் காலம், சிறிது தானே? நான் சந்திக்கும் பொது அவருக்கு என்பது வயது இருக்கலாம்.
நான் தூத்துக்குடியில் சந்தித்த பெரியவர் ஒருவர் (அவர் மகள் திருப்பூர் காதர் நிட்டிங் குடும்பத்திற்கு கட்டி கொடுத்துள்ளார்) எனக்கு சொன்னது. "காசு கொடுப்பவன் வள்ளல் இல்லை, ஆனால் சோற்றுக்கு உப்பை கொடுக்கிறவன் தான் பெரும் வள்ளல்" என்கிறார். யோசித்து பாருங்கள்! "உப்பிலா பண்டம் குப்பையில் தானே?".
ரமதான் மாதம் மிகவும் கஷ்டமான காலம் - மழை இருக்கும் அரேபியாவில் - அதனால் ஒருவன் கடவுளை நேசிக்கிறான என்பதை 'விரதம்' மூலம் சோதித்து பார்க்க வேண்டும் - நல்ல உடல் நிலையில் இருக்கும் பொது. வேறு விளக்கங்கள் உள்ளன. அதை நாகூர் ரூமி எழுதுவார்.
ரம்ஜான் வாழ்த்துக்கள்!
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
1 comment:
அன்புள்ள ராம், என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நான் எப்படி நன்றி சொல்ல?
அன்புடன்
நாகூர் ரூமி
Post a Comment