என் அமெரிக்க உறவு 1991 முதல் 1994 வரையும் (வாழ்ந்து சம்பாரித்த ஊர்), பிறகு 1996, 1998, 1999, 2001, 2004, 2006 (இரண்டு, நான்கு, ஆறு வாரங்கள்) என தொடர்கிறது..... என்று செப்டம்பர் பதினொன்று பதிவில் எழுதி இருந்தேன்.
நான் மேற்படிப்பு முடித்தவுடன், முதன் முதலில் அக்டோபர் 1991 இல் அமெரிக்க பயணம்.
நான் சென்னையில் வேலை செய்த காரணத்தினால், சென்னையில் இருந்தே புறப்பட்டேன். மேஇல் வேலைக்கு சேர்ந்தேன். ஆறு மாதத்தில் பயணம். விசா குறித்தும் (அமேரிக்கா) ஒரு பதிவுபோடுகிறேன். ஒரு கொடுமை, பயம் என்றால் என்ன என்று இருந்த என்னை பயமறிய செய்தது.
இரண்டு வருடம் முன் தான் அக்கா அங்கு சென்று மருத்துவ மேல் படிப்பு ஆரம்பித்து இருந்தார். அப்போதெல்லாம் விசாவிற்கு கேடுபுடி எல்லாம் கிடையாது. என் அக்கா கல்யாணம் இந்தியாவில் நடந்தது. டிசம்பர் 1991. சொந்த செலவில் ஒரு வாரும் லீவுக்கு இந்தியா வந்தேன். தினம் 60 டாலர் சம்பளத்தில் (பெர் டேயம் முக்கால் காசு, இந்தியா சம்பளம் தனி கால் காசு), ஐந்து வேலை நாட்களுக்கு கழிவு. பரவாயில்லை. வேலை நாட்களுக்கு மட்டும் டாட்டா எடுத்துகொன்டனர். டிசம்பர் இருபது இரவு கிளம்பி, கல்கத்தா இருபத்தி இரண்டு அதிகாலை வந்து இறங்கினேன். அக்கா கல்யாணம் டிசம்பர் 26 நடந்தது. இந்தியாவில் சரியாக எழு நாட்களுக்கு பிறகு நான் டிசம்பர் 29 சண்டே இரவு கிளம்பி டிசம்பர் முப்பது காலை நியூ யார்க்கில் போய் சேர்ந்தேன். இடையில் டிசம்பர் 24, மற்றும் 25 லீவு கிறிஸ்துமசுகாக. டிசம்பர் 31 கூட லீவு தான், நியூ இயர் உட்பட. நல்ல ரெஸ்ட்.
அக்காவும் மச்சானும் கோவில் விஷயங்கள் எல்லாம் முடித்த பிறகு, 1992 ஜனவரியில் சங்கராந்தி (பொங்கல்) முடித்து விட்டு அமெரிக்காவில் குடித்தனம் நடத்த ஆரம்பித்தனர். அக்டோபரில் அக்காவுக்கு நிதினா பிறந்திருந்தாள், அப்பா அம்மா அங்கிருந்தனர். இந்தியா சென்று வரும் போது வரும் போது அழைத்து வந்தேன். கிரீன் கார்டு ஒரு வருடத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள் அப்போது, மச்சான் ஸ்பொன்சர் மூலம். ஆரம்பித்தனர். கிடைத்தது.
டிசம்பர் முப்பத்தி ஒன்று வாழ்கையில் மறக்க முடியாத நாள். டைம்ஸ் சதுரத்தில் (முக்கோணம் அது, எதற்கு சதுரம் என்று சொல்கிறார்கள்?) நியூ யார்க்கில் உலக பிரசத்தி பெற்ற பந்து இறக்குதல், புத்தாண்டு வரவேற்ப்பு.
மச்சான் வீட்டில் (அப்போது பால்டிமோர்) தங்குவேன், இரண்டு வாரம் ஒரு முறை. நியூ யார்க் பெண் ரயில் நிலையத்தில் இருந்து அம்டிராக் உண்டு. இருபது டாலர் ஒன் வே. பிலேதேல்பியாகு ஒரு மணி நேரம். அங்கிருந்து இரண்டு மணி நேரம். சுகமான பயணம். அரை நாவல் படிக்கலாம். வெள்ளி இரவு எழு மணிக்கு கிளம்புவேன், சண்டே இரவு சுமார் பத்து மணிக்கு திரும்புவேன். நல்ல உணவு, அக்கா குழந்தை. சொந்தம். பேச்சு. சினிமா. நியூ யார்க்கில் நான் இருந்த இடம் எண்பத்தி நான்காம் குறுக்கு தெரு, சல்மான் ருஸ்டி வீடு அருகில் தான் - மண்ஹட்டன். டாக்சியில் ஐந்து டாலர்.
இரண்டாயிரம் டாலர் வாடகையில் , இரண்டு ரூம் வீட்டில், நான்கு பேர் ஒன்றாக இருந்தோம், இரண்டு பெண்கள் உட்பட, ஒரே (!)கம்பெனி. நியூ யார்க்கில் மனிதன் இந்தியா உணவு சாப்பிட மாட்டான். அதனால், நாங்கள் நியூ ஜெர்சிக்கு போவோம். மொகல் என்று ஒரு இடம். ஒக் ட்ரீ ரோடு. போக வர டாக்சியில் .... மொத்தம் செலவு ஆளுக்கு பத்து டாலர் மட்டும் ஆகும். சமையல் சாமானமும் வாங்கி வருவோம். விருந்தினர் வந்தால், ஹாலில் நானும் என் நண்பனும், ரூமில் அக்கா குடும்பத்தினர் அல்லது பிற நண்பர்கள்.
அப்போது தான், நியூ யார்க் அகாடமி ஒப் ஆர்ட் வழங்கிய திரைப்பட கல்வி பயின்றேன். மறக்க முடியாத நினைவுகள்.
இதை பற்றி விரிவாக ஒரு பதிவு அல்லது கதை சீக்கிரம். மறக்க முடியாத நினைவுகள். ஒரு தடவை கையில் பாஸ்போர்ட் இல்லாமல் நியூ யார்க் ஸ்டேட் போர்டேரில் கனடாவில் நுழைந்த அனுபவம், குறுக்கு வழியில் அமெரிக்க நுழைந்தது.... அமெரிக்க வாழ்க்கை சில சமயம் ஜெயில் போன்ற வாழ்க்கை அது என்றும தோன்றியுள்ளது.
பிறகு 1994 வரை இரண்டு முறை இந்தியா பயணம். ஒரு முறை 1993 சிவில் செர்விசெஸ் எக்ஸாம் எழுத. 1994 இல் திரும்பினேன், வேலையை விட்டு விட்டு. கையில் நான் சம்பாரித்த கொஞ்சம் பணம். மனதில் தயிரியம். மையின் எக்ஸாம் எழுதினேன். அரசாங்க வேலை. நாட்டுக்காக. சில மாதங்களில் முசொரியில் படிப்பு. தமிழர்கள் யாரும் இல்லை. பீகார் மற்றும் ஆந்தரா ஜாஸ்தி. எனக்கு தமிழ்நாடு வேலை.
நான் சுற்றி பார்த்த இடங்கள் பற்றி ஒரு கதை போடுகிறேன்.
1996 இல் நாங்க வாரம், சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ், வாஷிங்டன் அருகில் வீடு. இந்தியாவில் அரசாங்க வேலை, மன நிம்மதி.
1998 எனக்கு மனைவியாக வரபோகிறவள் (காதலி) அங்கு சில காலம் பிலெதேல்பியா அருகில் வேலை. சென்று பார்த்தேன். கல்யாணம். சம்மதம். பெற்றோர் அங்கே இருந்ததனால், ஈஸி. பித்த்ஸ்பர்க் கோவிலில் திருமணம். அவளுடைய பெற்றோரும் அங்கு இருந்தனர். இந்தியா திரும்பினேன். மனைவி அங்கே. நான் இங்கே, தனிமை சுகம். பிரிவு சுகம். அவளும் சில மாதங்களில் திரும்பி வந்தாள். அந்த காதல் கதை பற்றி ஒரு அல்லது பல பதிவுகள் உண்டு, சீக்கிரம். இந்தியாவில் வாழ்க்கை ஆரம்பித்தோம், சென்னையில். பிறகு அமெரிக்கா செல்ல இரண்டு வருடங்களுக்கு மேல் ஆயிற்று.
௨001 ஒன்றில் சென்றது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அக்கா வீட்டில் ஒரு விசேஷம், அதற்கு. செப்டம்பர் பதினொன்று....
2001 இக்கு பிறகு, அங்கு செல்வதா வேண்டாமா என்று ஒரு மன நிலை. 2002 இல் ராஜா பிறந்தான். அதனால் 2004 ஏப்ரல் தான் பயணம். ஜூலை கடைசியில் திரும்பினோம். சேர்த்து வைத்த அரசாங்க விடுப்பு நிறைய இருந்தது. மூன்று மாதம் பிளான். மாரிலாந்து மற்றும் ஜார்ஜுடவுன் பல்கலைகழகத்திலும், மல்டிமீடியா இன்பர்மடிக்ஸ் பாடம் பயின்றேன். பிராஜக்ட் மேலாண்மை குறித்து பயின்று அறிவு வளர்த்தினேன். ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஒரு நண்பர் பயின்று வந்தார். பார்க்க சென்றோம். பல பாடங்கள்நடக்கும் வகுப்பில் (மேலாண்மை) சிறப்பு மாணவர் ஆக கலந்து கொண்டேன். அரசியல் புகழ் சுப்பிரமணிய சுவாமியும் இன்டர்நேஷனல் எகோநோமிக்ஸ் எடுத்தார். சூப்பர்!
அங்கு நன்றாக சுற்றி பார்த்தோம். நினைவில் இன்னும் இருக்கிறது. அங்கே ஒரு இந்தியர் இன்னொர்வரை பார்த்தால் கேட்டுக்கொள்ளும் விஷயம், சாப்ட்வேர்ஆ அல்லது கிரீன் கார்டு வாங்கியாச்சா, டெலிபோன் கம்பெனி (சீப்கால்ஸ் ), இந்தியா உணவு மற்றும் சினிமா பற்றி தான். நடிகர்களை அழைத்து அங்கு கும்மாளம் போடுவது ஒரு பேசன். அங்கே இந்தியர்களுகுள்ளும் ஜாதி மதம் அல்லது குறைந்த பட்சம் மொழியாவது பார்பார்கள். அமெரிக்க இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து சோறிடுவது ஒரு கலை. அதை பற்றி ஒரு தனி பதிவு போடுகிறேன்.
சென்னையில் குழந்தை மஞ்சுக்கு எல்.கே.ஜி. அட்மிச்சொன் கிடைத்துவிட்டிருந்தது . ஒரு மாதம் முதலிலேயே விடுப்பு எடுத்தவள் ஆனாள். பிரீ.கே.ஜி. யில் படித்த காரணத்தால் இந்த சலுகை. இரண்டு வய்து மகன் ராஜா பேச கற்றுக்கொண்டு இருந்தான். அமெரிக்க ஆங்கிலம் நன்றாக ஒட்டிகொண்டது. வீட்டில் தமிழ் சிறிது , அமெரிக்கன் அச்சனட் ஆங்கிலம் அதிகம் அவனுக்கு. இப்போதும் நண்பர்கள் அவன் அமெரிக்காவில் பிறந்தவனா என்று கேட்கிறார்கள். உருவாகியிருக்கலாம்! அவன் எனது அக்கா குழந்தைகளிடம் பேசும் விதம், டோட்டல் அமெரிக்க பாசை தான்.
என்னுடைய குடும்பத்தில் என்னை தவிர யாரும் மராட்டி பேசுவதில்லை. மனைவி ஹிந்தி மாதிரி நினைத்து பேசுகிறாள். சமஸ்கிருத ஒற்றுமை. உறவினர்கள் எல்லோரும் ஹிந்தி மாதிரி தான் பேசுகிறார்கள். தப்பித்தோம்!
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
1 comment:
nice
Post a Comment