நான் அங்கேயே தான் இருக்கிறேன்
இன்று
நீ வந்தாய் என்னோடு
வார்த்தைகள் விளையாடடு
அன்று
விளையாடினோம் சுகமாய்
ஏழாண்டு காலம் நீ
என்னை
காத்திருக்க வைத்தாய்
காத்திருத்தலும் ஒரு சுகம்
கண்மணியே
என் வாழ்வில் நீ வந்தாய்
என் மவுனம் புரியவில்லை
உனக்கு
நீயே எனக்கென ஆனாய்
என்னை பற்றி நான்
உனக்கு சொல்லமாட்டேன்
நீயே இப்போது கண்டுபிடி
புரிந்த பின் பறக்கலாம்
காலத்தின்
கையை பிடித்து
இப்போது வாழ்கையை
அனுபவிக்கலாம்
ஒன்றோடு ஒன்றாய்!
(ஏழாண்டு காதலித்த பிறகு 1998 இல் என் மனைவியை கை பிடித்தேன்)
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment