Friday, September 12, 2008

அமேரிக்கா கல்வி முறை

அமெரிக்க கல்வி முறை ஒரு மாறுபட்ட வடிவம். இந்தியாவில் இருப்பதைபோன்று பன்னிரெண்டாம் வகுப்பு, மூன்று அல்லது நான்கு (ஹோனோர்ஸ்) படிப்பு, பிறகு மேல் படிப்பு (மேலாண்மை, மருத்துவம் வகையாரா)... டாக்டர் படித்து காசு சம்பாரிப்பது இருபத்தி எட்டு வயது ஆகிவிடும். ரெசிடென்சி பண்ணும் போது மூன்று வருடம் மூவாயிரம் டாலர் கொடுப்பார்கள் டாக்ஸ் இல்லாமல் . சேருவதற்கு மிகவும் கஷ்டமான கோர்சு மருத்துவம். அமெரிகாவில் இடம் இல்லாவிட்டால் ஜாமைக்கா அல்லது அங்குள்ள தீவு நாடுகளில் நிச்சயம் உண்டு. மணிபால் உனிவேர்சிடியும் உண்டு.

போன பதிவில் என் அக்கா மகள் நிதினா காலேஜு செல்வதாக எழுதி இருந்தேன். பதினாறு வயதில் சாட் (SAT) எனப்படும் நுழைவு தேர்வு எழுதி 1600 இக்கு 1600 வாங்கினாள். ஆங்கிலத்தில் நன்றாக கதை கட்டுரை எழுதுகிறாள். ஆறு வயதில் ஒன்றாவது முடித்துவிட்டாள். அமெரிக்கர்கள் அப்போதுதன் ஆரம்பிப்பார்கள். ஆறாவது படித்து முடித்தவுடன், மேல் நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தாள். அறிவு. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதுஅதிகமாக கோர்சுகள் மேற்படிப்பு லெவலில் எடுத்தாள். வீட்டருகிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். மாரிலாந்து உனிவேர்சிட்டி. கோட் செய்கிறாள். வெப் வடிவமைக்கிறாள். இப்போதே உனிகோட் தமிழ் வடிவம் பற்றி பேசுகிறாள்.

இந்தியாவில் இருந்து படிக்க வந்த தமிழர்களுடன் நல்ல உறவு உள்ளது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகிறாள். தாய்மொழி மராத்தி, தந்தை மொழி குஜராத்தி (பரோடா கேக்வாத் ராஜா வம்சம் எனலாம்). நான்கு வருடம் படிப்பை மூன்றில் முடித்து விடுவாள். மேற்படிப்பு 2011 இல் இந்தியா வந்து நான் படித்த அஹமேடபாத்தில் மேலாண்மை கல்வி சேருவாள் என்கிறாள்.
வாழ்த்துக்கள்! என் மனைவி, இப்போதே, அங்கே ராஸ், மிசிகனில் எம்பியே படிக்கும் கசின் பாரத்தை, கட்டி வைக்கலாம் என்கிறாள். ஆறு வயது தானே வித்தியாசம்? இதற்கும் சென்னையில் பேமண்ட் சீட்டில் படித்தவன். பாடாவதி காலேஜ். மதவாதிகள் நடத்தியது. ஜிமாட் எழுதி,எலுநூட்ரி பத்து வாங்கி, நல்ல ரெகோ (ஐயா தயவு கூர்ந்து இவனுக்கு இடம் கொடுக்கவும்...அடியேன் உட்பட) கொடுத்து, சேர்ந்துள்ளான்.

இந்த
டேட்டிங் கலாச்சாரம், ஒரு கொடுமை அங்கே! பதினாறு வயதில் செக்ஸ் விசயத்தில் அக்டிவ் ஆகிறார்கள், அங்கே.
நான் பார்த்த பால்டிமோர் பள்ளியில் (மேல்நிலை) காண்டம் வெண்டிங் மெசின் உள்ளது. இப்போது அமேரிக்கா குடியரசு ரைட் விங் கட்சி பாலின் மகள் பதினேழு வயதில் ஐந்து மாதம் கருவுற்றிகிறாள். நாடு அப்படி. (அதாங்க காரணம் ஆகாரம், சீசு, பர்கர், பீட்சா வகையரா மற்றும் அவர்கள் அணியும் அரைகுறை ஆடை என்கிறாள் மனைவி).

என்ன அமெரிக்காவில்
பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பு செலவு கிடையாது... உனிபார்ம் இல்லை... பிற்பாடு காலேஜில் கஷ்டம் தான். வருடம் இருபதாயிரம் டாலர்கள் ஆகும். வீட்டிலிருந்தே படித்தால், பாதி மிச்சம். என்ன கடைசி வருடம் கண்டிப்பாக ஹோஷ்டல்.

லீவு நாளில் கார் வாஷ் செய்கிறார்கள், பத்து டாலர் ஒன்றுக்கு. மெக்டோனல்ட்ஸ் வேலை. கேமார்ட், வால்மார்ட், ஜியன்ட் போன்ற கடைகள், பூட்டி பார்லேர்ஸ்.... போடோயர்ஸ்... எட்டு டாலர் ஒரு மணி கூலி. ஆனால் கோட் செய்தால் முப்பது டாலர் கிட்டும் மணிக்கு. (என் நண்பர்கள் ஐ.ஐ.டி. படித்த பின், டெக்சாசில் கக்கூஸ் கழுவி மேல்படிப்பு படித்தார்கள்!)

உங்களுக்கு தெரியுமா, சுத்தமான ஐயர் பையன் ஒருவன், என் நண்பன் நாராயணன், பண்ணி/மாடு ஸ்டேக் என்றால் ஒரு வெட்டு வெட்டுகிறான். வெஜிடரியன் என்றால் காசு ஜாஸ்தி! இப்போது அவன் ஒரு அமெரிக்க பெண்ணை கட்டி, பத்து வருடம் நிறைவு. பெரிய விஷயம் அது. அழகு.

ஒரு புல் அமெரிக்கன் மீல் ட்ரிங்க்ஸ் உட்பட பத்து டாலர். ஒரு மசாலா தோசை (வர வர) பத்து டாலர். எது பெட்டெர்?

No comments: