skip to main |
skip to sidebar
பக்தி மார்க்கம் எல்லாம் இறைவனை அடைய ஒரு பாதை தான்.
எல்லோரும் ஒரு வகையில் ஒரு குரு தேடுகிறார்கள்.
அமெரிக்காவில் மற்றும் பல வெளி நாடுகளில் ஒரு துணை தேடுவதை போல. டேட்டிங் கல்சர். மனம் சற்றும் அமைதி கொள்ளாது. தேடுதல் என்பது தினம் ஒரு சுமை ஆகும்.
உங்கள் கவலை மறக்க இறைவனை நோக்கி மனதை ஒரு நிலை படுத்துவது, தியானம்.
கடவுளை நம்பாவிட்டாலும், அது பற்றி கட்டாயமாக நினைப்பது என்பது ஒருவகையில் தியானம் தான். எல்லாம் நேரம் என்று சொல்லும் பல கருப்பு சட்டை ஆசாமிகள் நான் பார்த்திருக்கிறேன்.
வாழ்கையில் எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்டப்பட்டால், சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நன்றாக முன்னேறலாம். அப்பொழுதும் தியானத்தை விட்டு விடாதீர்கள். அது உங்களை ஒரு நிலை படுத்தும்.
கடவுள் மீது பாரம் போடுபவர்கள் முட்டாள்கள். விதி என்று சொல்லி வீட்டில் உட்கார்பவர்கள் சோம்பேறிகள்.
கஷ்டப்படு. உழைக்க முயற்சி செய். வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.
கலீல் கிப்ரான் (ஸல்) சொல்லுகிறார்
உனது வாழ்க்கையே
உனது மதம்!
நீ கடவுளை பார்த்தால் அவர்
உன் வாழ்க்கை முடிச்சுகளை
அவிழ்கமாட்டார்!
உன்னையே நீ நோக்கினால்
உன் குழந்தைகளோடு விளையாடும்
அருள் தருவார்!
உன்னுடைய அபிலாசைகளின்
ஆழத்தில்
அமைதியில் இருக்கின்றன
உன் அறிவாற்றல்
அந்த அமைதியின் ஆழத்தில்
நீ பாடு
மலையின் உச்சிக்கு சென்று
ஆடு
பூமி உனது கைகால்களை
கொணர்ந்த பின்னால்
அது களியாட்டம்!
நீ உன்னை குறை
கூறுவது
உன் குறைவுகளால்
காலத்தின் கண்போழுதுகளின்
மாற்றங்களின்
காரணமல்ல!
கட்வுளின் அழகால்
வாழ்க்கை ஓட்டங்களின் விளிம்பில்
நிற்கின்றேன் நான்
கைதி ஆகியுள்ளேன்
மனிதர்கள்
இயற்றிய சட்டங்களால்!
பெருமாள் வழிபாடு பற்றி எம்.எஸ். புர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதிய புஸ்தகம் கூகிள் மூலமாக படித்தேன். அற்புதமான வரலாற்று சித்திரம். பல நூற்றாண்டு விளக்கம். கிறித்துவம் வராமல் இருக்க என்னவெல்லாம் தடை என்பதை கூட பெரியவர்ஸ் ஆராய்ச்சி செய்துள்ளனர். எல்லாம் ஜாதி வெறி தான். ஜெயமோகன் படித்துள்ளாரா என்பது தெரியவில்லை. கேட்க வேண்டும்.
நிமிர்ந்து நிற்கும நெஞ்சத்தை சொல்வது நாமம்.
அதிலும் இப்போது பல பிரிவுகள். வடகலை மற்றும் தென்கலை. ஜாதி மதம் எப்படி தான் செல்கிறது பார்த்தீர்களா ? கடவுளுக்கும் காதி? சீ ஜாதி... (காந்தி பற்றி எழுதி பாதிப்பு)
என் மனைவி ஐயர் ஆனதால் எல்லாம் செல்லுபடி ஆகிறது , கடவுள் பெயர் சொல்லும் போது. சங்கரா சங்கரா காப்பாற்று! ஓம் நமோ நாராயணா!
திருக்குறள் கடவுள் வாழ்த்து கூட பெருமாளை வணங்கி தான் எழுதினார் என்கிறார்கள். பெருமாளை ஆதி பகவன் என்றும் சொல்வார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.