Friday, September 26, 2008

பக்தி மார்க்கம் தியானம்

பக்தி மார்க்கம் எல்லாம் இறைவனை அடைய ஒரு பாதை தான்.

எல்லோரும் ஒரு வகையில் ஒரு குரு தேடுகிறார்கள்.

அமெரிக்காவில் மற்றும் பல வெளி நாடுகளில் ஒரு துணை தேடுவதை போல. டேட்டிங் கல்சர். மனம் சற்றும் அமைதி கொள்ளாது. தேடுதல் என்பது தினம் ஒரு சுமை ஆகும்.

உங்கள் கவலை மறக்க இறைவனை நோக்கி மனதை ஒரு நிலை படுத்துவது, தியானம்.

கடவுளை நம்பாவிட்டாலும், அது பற்றி கட்டாயமாக நினைப்பது என்பது ஒருவகையில் தியானம் தான். எல்லாம் நேரம் என்று சொல்லும் பல கருப்பு சட்டை ஆசாமிகள் நான் பார்த்திருக்கிறேன்.

வாழ்கையில் எதுவும் சுலபமாக கிடைக்காது. கஷ்டப்பட்டால், சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நன்றாக முன்னேறலாம். அப்பொழுதும் தியானத்தை விட்டு விடாதீர்கள். அது உங்களை ஒரு நிலை படுத்தும்.

கடவுள் மீது பாரம் போடுபவர்கள் முட்டாள்கள். விதி என்று சொல்லி வீட்டில் உட்கார்பவர்கள் சோம்பேறிகள்.

கஷ்டப்படு. உழைக்க முயற்சி செய். வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.

2 comments:

DIVYA said...

Well said!

Blogger said...

Very Good Post..
n a Nice Blog Too..