பேச்சு மொழியும் வழக்கமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
ஆனால் ஒரு துறை சார்ந்த பேச்சு, அதை சுற்றியே இருக்கும்.
இலக்கியத்தில், இந்த விளையாடடு எல்லாம் இருக்காது. நேரடி தாக்குதல் சிலசமயம், உவமை ஆட்டம் தான் எப்போதும். எனக்கு பிடித்த ஷேக்ஸ்பியர் எடிபஸ் காம்ப்ளெக்ஸ் பற்றி ஹம்லேடில் (உயர்வாக சொல்லவில்லை, அம்மா மீது அளவற்ற காதல் கொள்வது)... இலை மறைவு காயாக சொல்லியுள்ளார். அதாவது அன்பு கிடைக்காது என்று ஏங்குபவர்கள் இந்த நிலைமைக்கு (அம்மா மீது அளவற்ற பாசம் ) - அரிச்டோடிலும் இதை தான் துயரத்தின் காதல் என்று சொல்கிறார்.
தமிழ் சினிமாவில் இதை ஆனந்தத்தில் காட்டுகிறார்கள், மரத்தை சுற்றி ஆடும் கதைநாயகி. பெங்காலி படத்தை பாருங்கள்... சோகம் என்றால் காதலனும் காதலியும் கட்டி பிடிப்பார்கள்... பார்பவர்கள் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். பாடல்கள் குறைவு. பங்கிம் சந்திரர் (சாடேர்ஜி) எழுதுகிறார், தேவதாஸில்... சிறு வயதில் பாருவிற்கும் தேவதாஸிர்கும் நடக்கும் களியாட்டம், வயதான பின் அந்த மாதிரி இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத வண்ணம். பாரு மாற்றானை கட்டிய பிறகு, உடல் காதல் இல்லாமல் தான் இருந்திருக்கும் என்று சொல்வது போல இருந்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக, அளவற்ற காதல் அங்கே வேறு விதமாக காட்டப்படுகிறது. இந்த விசயத்தில் பரிணீதா என்ற ஹிந்தி படம் கை ஆள்கிறது, வித்யா பாலன் முதலில் நடித்த படம், பெங்காலியிலும் வந்தது. காதலித்தவனையே கல்யாணம் செய்து கொள்வது, நண்பனை நண்பனாக பார்ப்பது. தத்துவம்...வன்மம்.
ஒன்று இல்லாது இருந்தாலும் இருப்பதாய் அங்கிகரிக்கும் வழக்கம், இல்லை இங்கே என்று சொல்வதும், வித விதமாக இலக்கியத்தில் தான் ஒரு வரலாற்று சாதனை ஆக புரிந்து எடுக்கலாம்.
"எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லே", என்று அடிக்கடி என் டவாலி சொல்லுவார். அதாவது அவருக்கு தெரியுமாம், ஆனால் தெரியாதாம். சொல்ல விருப்பம் இல்லாமல் இருக்கும்...வடிவேலு சினிமா டயலாக் "இருக்குது ... ஆனா இப்போ இல்லே".
சில சமயம் தோன்றும், இலக்கியம் பேசுபவர்கள், மூடிக்கொண்டு தங்கள் செய்யும் தொழிலை கவனிப்பது நன்று என்று. அவர்களுக்கும் குஸ்ஸ (எரிச்சல்) மற்றவர்களுக்கும் குஸ்ஸ (எரிச்சல்). புரிகிற விதத்தில் எழுதி தொலைங்கய்யா என்று சொல்ல தோன்றும். அப்புறம் எப்படி கிடைக்கும் வார்த்தை வர்ணனை? "யு நீட டு டிகான்ச்டிரக்ட் யூர் மெண்டல் எமொசன்ஸ்!"
இருந்தும் இல்லாமல் இருந்திருக்கலாம், வாழ்க்கை நடைமுறையிலும் பார்க்கலாம். கமல்ஹாசன் ஒரு உதாரணம் டெரிடாவின் டிகான்சிடிரக்சன் பேச்சு மொழிக்கு. தனது துணைவி கௌதமி பற்றி தேவையில்லாமல் பதில் சொல்ல மாட்டார்.
"இன்னாமே, வேணும்னா வாங்கிக்கோ, துட்டு இல்லேனா, வூட்டாண்ட கிளம்பு"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment