Thursday, September 25, 2008

கவலை

என்னங்க சாந்தி ஜெயக்குமார் கதையின் தலைப்பும், பிலாக் பேரும் ஒன்னாகுங்களா? திவ்யானு உங்க நண்பி மட்டும் தான பேர் வைப்பாங்களா?

இன்னும் ஒரு கோவை அம்மணி, கேட்டாருங்க "இது என்னோட கதையா?"னு .

ஏனுங்க அம்மணி, எனக்கு ஊரில் இருக்கிற எல்லோர் கதையும் போட முடியாதுங்கோ. என்னாலே முடிஞ்ச அளவு போடறேன். ரொம்ப டயர்ட் ஆகுதுங்கோ!

அடிச்சு சொல்றாங்க, இது ரமேஷ் ஆர்யா ரத்தன் டெண்டுல்கர் தோழி திவ்யா தான்!

அதுவும் இந்த பலான காதல் விஷயம் எழுதும் போது... ரொம்ப அடக்கி வாசிக்கிறேன். திவ்யா புருசனுக்கு தமிழ் தெரியாது!

என் புது தமிழ் வாத்தியார், ஸ்பெல்லிங் மிச்டேக் கரெக்ட் பண்ண சொன்னார். நன்றிகள் ஐயா.

ஆமாங்க வந்த மெயில் எல்லாம் (புது ப்லோக் நண்பர்கள்?) பொண்ணுங்ககிட்டே இருந்து. என்னங்க ஆகுது இங்கே? அப்புறம் பழைய ப்லோக் எல்லாம் படிச்சுட்டு ஒரு கடுதாசி போடுங்க.

எப்பவும் போல பிலாக் படிக்கும் பிரபல எழுத்தாளர்கள், உடனே மெயில் போட்டாங்க, யாருங்க இந்த திவ்யானு. அவங்க போட்டோ போடலை? வேண்டாங்க விபரிதம். என்னோட ப்ரோபைல் போட்டோவே, வைன்ல சொதப்பிட்டாங்க. எடுத்திட்டேன்.

*****

கீரையும், ரசமும். சாப்பாடு வைத்து சாப்ட்டோம், நானும் திவ்யாவும் (மீல்ஸ்னு சொல்லவே பயமா இருக்குது). கையிலே சாப்பிடறதே சுகம். அமெரிக்காவிலே இங்கிலீஷ் பட்லர். மண்ஹட்டன்ல ட்ரும்ப் கோல்ட் டவேர்ல வீடு. சென்ட்ரல் பார்க் பார்த்த மாதிரி இருக்கும். இன்று இரவு நாடு நிசியில் தான் விமானம். நிறைய நேரம் இருக்குது பேச. ஒரு அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கிபோட சொலலனும். மனைவி ஆபிஸ் போயிருக்கிறார், அர்ஜன்ட் வேலை. தலைமை மனித வள பொறுப்பு. குழந்தைகளும் நாலு மணிக்கு வந்து விடுவார்கள். நிலகிரிஸ் கிரீம் பன் வாங்கி வைக்கணும். எனக்கு வேலை இன்னைக்கு இல்லை. ரியல் எஸ்டேட் ரொம்ப டல்லுங்க. என்ன பண்றது? எப்படியோ வயத்தை கழுவிட்டு இருகோம்.

அவளுக்கு (திவ்யா) அங்கே அமெரிக்காவில் வேலை இருக்குமா என்பது தான் கவலை. லேஹ்மான் பிரதர்ஸ் தான் திவால் ஆயிற்றே (பத்து நாள் அக்கபோர் என்கிறாள்). கோல்ட்மன் சச் கூப்பிடார்களாம். எல்லாம் நல்லதாக நடக்க வாழ்த்துக்கள்! மைன்ட் ட்ரீ சாப்ட்வேர் கம்பெனிலே மூணு பர்சன்ட் வச்சிருக்காங்க, ஒன்பது வருசமா.
அவுங்க போட்டது நாலு. இன்னைக்கு அதன் மதிப்பு முப்பத்தி ஆறு கோடி. என்னை அதுல எப்படியாவது சேத்து விட சொல்லணும்! (நான் நல்லா டயிப் அடிப்பேன்).

அடுத்த முறை அவுங்க குடும்பத்தோட (ஜோ) வர போறாங்க. அவங்க லியர் ஜெட் வச்சிருக்காங்க. ஓசிலே ஒரு சின்ன ரவுண்ட் போகலாம். அடுத்த சம்மர்லே, ஐரோபா போகும் போது, அவங்களும் பாரிஸ் வரலாம்.

இப்போ ஒரு எம்.எப்.ஹுசைன் பிரிண்ட் சின்னது கொடுத்தா. (லேப்டுல பாருங்க) பிரமே போட்டு வச்சுட்டாங்க. இதுவே பல லட்சம் இருக்கும். பத்திரமா பாத்துக்கணும்.
இன்சூரன்ஸ் இருக்கா தெரியல.

அதனோடஒரிஜினல் பல கோடிகளுக்கு விக்கிறதா நியூஸ்.



*****

திவ்யாவும் கதையை படித்தாள். மணிஸ் ஸ்கூல் உடல் பயிற்சி வகுப்பு கசமுசா பற்றி சொல்லவில்லை என்றாள். "யாருன்னு சொல்லமாட்டேன். ஆனா அவரு பயன் இப்போ அமேரிக்காவிலே ஒரு டாக்டர்." அடப்பாவி!

அப்புறம் கோவை டைம்ல அவ கூட படிச்ச பிஎஸ்ஜி ஆர்ட்ஸ் வானதி பற்றி சொன்னாள். அவ வெங்கின்கிற பையனோட போட்ட லூட்டி பத்தி எழுதனும். நாளைக்கு கதை போடுகிறேன். உடான்சா உண்மையா தெரியாது! ஆனா ப்லாகர் சமுதாயத்திற்கு கண்டிப்பா எழுதனும். என் பயன் ப்லோக் செய்து கிடப்பதே.

*****

இந்த கோவை கொங்க தமிழ் திவ்யாகிட்டே இருந்து பலமா தொத்திகிச்சு. எதற்கெடுத்தாலும் இங்கோ போடறது. என்னங்க பண்றது.

எனக்கும் இப்போ இந்த பீல்டு வொர்க் ஜாஸ்தி ஆகிடுச்சு. ஷாபிங் போகணும் கொஞ்ச நேரத்திலே...


3 comments:

DIVYA said...

Ramesh,

Wow! You type so fast!

I will give you an outline of Vanathi and also tell about one Shanthi a neighbor of mine.

Luv
Divya
:-)

Ramesh said...

Divy, why dont you blog as well?

Anonymous said...

Rameshji

Your flow of writing is very good.

- Shanthi Jaikumar