என் ஆஸ்தான கவிஞர் ஆங்கிலத்தில் லோர்ட் பயர்ன் (Lord Byron) லார்டு லபுக்குதாஸ் இல்லீங்க! பய்ரன் என்று சொன்னால், அவர்கள் கோமாளிகள்! வில்லியம் வோர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர் அப்புறம் இவர் தான்.
******
நீ என்னை விட்டு போனாய்
கண்ணீரும் கம்பலையுமாய்
பாதி இதயம் ஒடிந்து இருந்தேன்
வருடங்கள் ஓடின
என் கன்னங்களும் முத்தங்களும்
குளிர்ந்தன கருத்தன
அந்த நினைவுகள் உண்மை என்று
அதிகாலை பணியும் கருத்தன
என் புருவத்தில்
இப்போது புரிகின்றது
அது எனக்கொரு அபாயமணி!
வார்த்தைகள் தவறிவிட்டாய்
ஒளிகளும் எரிந்தனவே!
அவை என் பெயரை சொல்கின்றன
அவமானத்தால் தலைகுனிகின்றன!
சந்தித்தோம் ரகசியமாய்...
இப்போது சத்தமில்லாமல் துயர்கின்றேன்!
என் இதயத்தால் மறக்கமுடியவில்லை...
ஆத்மாவை ஏமாற்றி!
பல வருடங்கள் கழித்து
உன்னை நான் சந்தித்தால்...
எப்படி அழைப்பேன் என் கண்மணி?
கண்ணீரும் கம்பலையுமாய்!
* கம்பலை - சோகத்தின் நடுக்கம் (மௌனம்)
******
அவர் கவிதைகள் எல்லாம் தமிழ் சினிமா பெயர்கள் போல தான் இருக்கும்!
தாகம், தமிழாக்கம், நம்ம ஸ்டைல்... எப்படீங்கண்ணா? (இப்போதெல்லாம் நிறைய விஜய் (தமிழ் நடிகர்) படங்கள் பார்க்கிறேன்).
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
2 comments:
Nalla Thamizhakkam!
- விஜயஷங்கர்
நன்றி திரு.விஜயஷங்கர்!
Post a Comment