இன்று எதோ ஒரு மூடில், என் வகுப்பு தோழி திவ்யா அமெரிக்காவில் இருந்து வருகிறாள் என்பதால், கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமா? காலை ஒன்பது மணிக்கு முடி வெட்ட சென்றேன். அஹாமதாபாத்தில் பல்லி மாதிரி இருந்தாள்... இப்போ டினோசராகிவிட்டாள்.. (நாகூர் ரூமி சொல்லியதை போல).. என் மனைவியும் வகுப்பு தோழி தான்...கோவைக்காரி. நடிகர் சத்யராஜுக்கு சொந்தம். அவர் மகன் சிபிராஜ் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். திவ்யா வெள்ளைக்காரி மாதிரி இருப்பாள். இப்போது ஒரு வெள்ளைக்காரனை கட்டி இருக்கிறாள். மாப்பிள்ளை வரவில்லை.
அப்பவே எனக்கு தெரியும் அவள் அமெரிக்காவில் தான் கட்டுவாள் என்று. தி ஜாய் ஒப் செக்ஸ் என்ற புஸ்தகம் பற்றி வெகுவாக சிலாகித்து பேசுவாள். இது தாங்க ஒரு செக்ஸ்பாடம்.... காம ஸுத்ரா எல்லாம் கப்சா என்பாள். அவள் பற்றி ஒரு தனி கதை எழுதுகிறேன். (முழு பெயர் எழுதமாட்டேன், கவலை படாதே கண்ணா!).
மாசோஸ் ஒரு உனிசெக்ஸ் அழகு நிலையம். வேலை செய்பவர்கள் சப்பை மூஞ்சி அழகிகள் (அது தாங்க நம் நாட்டு சைனீஸ் முகங்கள்.... நோர்த் ஈஸ்ட் ஸ்டேட்... மரியாதைகளுடன்... பெங்களூரில் அவர்கள் ரொம்ப ஜாஸ்தி). குஜராத்திலும் இதே கதை தான். பி.ஜே.பி. ஆட்சி.
முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும் சேர்ந்தே போவது போல... இன்று ஒருஆஃப்ராம். எல்லோருக்கும் கிடையாது. ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும். ஐந்நூறு ரூபாய்க்கு, முடி வெட்டி, நகம் வெட்டி, சுளுக்கு எடுத்து, அக்குள் முடி சுத்தம் செய்து (பன்னமாட்டார்கள் என்று இருந்தேன்) தலைக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்தனர்... (ரிம் பிரஸ்) அது மட்டுமா பவுடர் மசாஜ் என்று ஜட்டியோடு படுக்க வைத்து உடம்பெல்லாம் பவுடர் கொட்டி அழுத்தி அழுத்தி பிரிச்சு மேய்ந்துவிட்டனர் இரண்டு பேர். (மர்ம ஸ்தானத்து பக்கம் வராமல் செய்கிறார்கள்...)
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. எனக்கு பெண்களை கண்டால் கொஞ்சம் கூச்சம் ஜாஸ்தி!
அங்கேயே லைட்டாக ஒரு ஸவர் பாத் செய்து கொண்டு டோவெல் சுற்றி உடை மாற்றும் ரூமுக்கு வந்தால், உடை மாற்றி கொண்டு இருந்தாள் ஒரு இளம்பெண். நான் வந்ததை கவனித்தவுடன், "சாரி, பக்கத்து ரூம் எங்ககேஜ்டு.இந்த ரூம் தான் கதவு ஓபன் ஆகியிருந்தது" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்! உனிசெக்ஸ் இடங்கள் என்றாலே பேஜார் தான். கதவுகளை மறக்காமல் சாத்த வேண்டும், தாழ் போட்டு!
இப்போது... ட்ய்ணிங் டேபிள் மேலே புளியோதரையும், வெங்காய பச்சிடியும்... ஒரு பிடிபிடித்து விட்டு, உட்கார்ந்துள்ளேன்.. தூக்கம் கண்ணை சுழற்றுகிறது.
எனக்கு இன்னைக்கு நிச்சயம் டோஸ் உண்டு. (மனைவியும் இதை படிப்பார்கள்... அவரும் அந்த கடைக்கு தான் செல்கிறார்)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
When I am in Bangalore next time I will go there. hm...
Post a Comment