ஐடி கார்டுலே பிளட் குரூப் மற்றும் அவசர உதவி விவரம் இருக்கும். ஹெல்மெட் போடாம டூ வீலர் காரங்க விழும் அடிபடும் போது உதவும்.
எனக்கு அமெரிக்காவிலே வேலை பாத்த போது பெல்டுலே மாட்டர மாதிரி ஒரு கார்டு. ரப்பர் மாதிரி நீளமா வரும் கயிறு. உள்ளே பொய் வெளியே வர சைசை'னு வரும். அப்பப்போ முதுகு சொரிஞ்சுக்க உதவும். மக்னெடிக் கார்டு ஒன்னும், போடோ கார்டு ஒன்னும் இருக்கும். நடுவிலே ஒரு இருபது டாலர் நோட்டு ஒன்னு எப்பவும் வைத்திருப்பேன், அவசர உதவிக்காம். அடிபட்டு விழுந்து கிடந்தா, காசு பார்த்தாவது, இன்பார்மேசன் சொல்வாங்கன்னு தான். அப்புறம், நியூ யார்கிலே மக்கிங்க்னு (ரோட்டிலே வழிபறி நடக்கும் - பர்சை பறிச்சிட்டு போவான்கள், துப்பாக்கியை காட்டி) பயம், பணம் ஒளிச்சு வச்சுக்க தான்.
அப்புறம் இந்தியாவிலே வெட்டி பந்தா தான், நான் பார்த்த வரைக்கும். செயின் மாதிரி ஆடிட்டு போட்டு இருப்பாங்க. அதுவும் இந்த சென்னை ட்ய்டல் பார்கிலே, பல்லிலே கடிச்சிட்டு பெண்கள் நடக்கிறது.... (அது பத்தி ஒரு பெரிய பதிவு ஒன்னு... காத்திருங்க...)
அரசாங்க வேலைலே, எனக்கு டப்பா கார்டு இருந்துச்சு. குறுக்காலே பச்ச இங்க கையெழுத்து போட்டு. பதிமூணு வருஷம் வச்சிருந்து, வேலையை விடும் போடு திருப்பி கொடுத்தேன். என்ன மூஞ்சி தான் ஊதி இருந்திச்சு, போட்டோ கூட மாத்தலே. பெட்ரோல் டீசல் போடும் போது, காட்டினா, தேபர்த்மேன்ட்டுக்கு பில் அனுப்புவாங்க, என் கையெழுத்து இருக்கனும். அமெரிக்காவிலே என்ன மாதிரி அரசாங்கத்திலே ஒரு கவுரமான ஆபிசர்கள் ஸ்டார் பேட்ஜு வச்சிருப்பாங்க!
ஒரு தடவை சென்னை அண்ணா சாலையிலே சிடிபான்க் போனேன். மத்தியானம் மூணு மணி. என்னோட யேடியம் கார்டு தொலஞ்சிருச்சு. நேருலே போய் தான் பணம் எடுக்கணும். அவசரம். யாருமே இல்லே. சாப்பிட போயிட்டாங்க போல. இருந்த் ஒன்னு ரெண்டு பேர் யேடியம் பக்கம். பணம் கொடுக்கிறே மிசின். பார்க்க எரிச்சல வந்துச்சு. இந்த நேரம் போய்...
அப்போ ஒரு அம்மா வந்தார். ஐடி கார்டு கழுத்திலே பெருசா போட்டிருந்தார். சிடிபான்க்'னு இருந்துச்சு.
கேட்டிறலாம்னு கேட்டேன் "அவசரமா கொஞ்சம் பெரிய தொகை எடுக்க வேணும்".
"சாரி சார் நான் மார்க்கெட்டிங் தேபர்த்மேன்ட்" சொல்லிட்டு போய்ட்டார்.
முகத்திலே ஈ ஆடவில்லை. கல்லாவிலே ஆள் வந்தப்புறம் வேலை முடிச்சுட்டு கிளம்பினேன்.
அந்தே அம்மா அவர் நண்பர் கிட்டே சொன்னது கேட்டது. "ஐடி கார்டு பாக்குற சாக்கிலே சைஸ் பார்க்கிறான் படிச்ச மாதிரி இருக்கிறே பன்னாடே" என்று. ஆங்... அந்த பொண்ணு பேரு ஞாபகம இருக்கு - ஜெயலஷ்மி. எக்ஸ்டெர்னல் அபைர்ஸ் தேபர்மேண்டுக்கு ஒரு தடவை வந்திருந்தாங்க. வெளி நாடிலே செட்டில் ஆகிறதுக்கு, பிறப்பு சான்றிதழுக்கு எமொயீ கையெழுத்து வாங்கினார். அப்பாவும் அந்த ஐடி கார்டு கழுத்திலே போட்டு.... ஆடிட்டு இருந்திச்சு.
எங்கேயும் எப்பவும் அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சி.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
1 comment:
//அப்பப்போ முதுகு சொரிஞ்சுக்க உதவும்.//
கரெக்ட் ஆ சொன்னிங்க!
எங்க ஆபீஸ் ல எல்லாம் அச்செஸ் கார்டை பேக் பாக்கெட் ல திணித்து அதன் வாலை (அதாங்க எஸ்டிராப் !) மட்டும் வெளிய தொங்க விட்டிருப்போம்.
அவனவன் அனுமார் மாதிரி அலைவாங்க. (பசங்க மட்டும்தான்!)
Post a Comment