பின் நவினத்துவம் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ஜெயமோகன் தான். எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் கொஞ்சம் பரவாயில்லை ஆகா என்றுஇருக்கும். ஜெயகாந்தன் தான் தமிழில் இதற்கு தந்தை. ஒரு மெஸ்ஸையா. வழி நடத்தியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மூலம் அருமையாக முயற்சி செய்து, அறிமுகம் செய்தார். கமலஹாசன் ஒரு பின் நவினத்துவம் எழுத்தாளர் தான். அவருடைய தாயம் ஒரு உதாரணம். (இருவர் பார்வையில்)
பின் நவினத்துவம் என்றால் எழுத்துக்கள் புரிந்த மாதிரி இருக்க வேண்டும். ஒரு உள் அர்த்தம், பல வகையில் ( காகத்தை வைத்து விசுவரூபம்....) சில சமயம் புரியாமல் இருக்க வேண்டும். மண்டையை உடைத்து கொள்ள வைக்க வேண்டும்.
பின் நவினாதுவம் என்றால் நேர் வழியில் சொல்லாமல், ஒரு விசயத்தை மற்றோண்டோடு தொடர்பு படுத்தி எழுத வேண்டும்.
பின் நவினத்துவம் என்றால் பதிவுபோதை போல, ஒரு தலைப்பில் எழுதும் போது, அதற்கு சம்மந்தம் பட்ட எழுத்துக்கள், நினைவுகள் தொடர்பு படுத்தி எழுத் வேண்டும்.
பின் நவினத்துவம் என்றால் தொடர்கதை அல்ல.
பின் நவினத்துவம் என்றால் சிறுகதைகளின் தொகுப்பும் அல்ல.
பின் நவினத்துவம் ஒரு நெடுங்கதையை எப்படி வேண்டுமானாலும்படிக்கலாம்.
பின் நவினத்துவம் என்பது ஒரு வியாபார நோக்கோடு எழுதுவது அல்ல.
பின் நவினத்துவம் என்பது ஓஷோவின் வார்த்தைகள் மாதிரி இருக்கவேண்டும்.
பின் நவினத்துவம் என்றால் போஸ்ட் மாடர்னிசம் .
ஆமாங்க அது எதுக்குங்க ஜீன்ஸ் பேண்ட்டு? அது தாங்க ஒரு தலைப்பு கவர்ச்சி! இல்லேனா யார் படிப்பா? ஆனா அதுக்குள்ளே ஒரு தத்துவம் இருக்கு... டெண்டுக்கு தைத்த ஜீன்ஸ் துணை கால் சரி சென்சார்கள் லெவிஸ் கம்பெனி... தங்கம் தேடினார்கள் கலிபோர்னியாவில் 1800 களில் .. தி கிரேட் வெஸ்டர்ன் ஹுன்ட் என்றும் சொல்வார்கள். ஐமாக்சிலே ஒரு படம் சிகாகோவுக்கு போன போது பார்த்தேன். மீண்டும் ஜெர்சி சிட்டியில். தி வெஸ்டர்ன் மைக்ரேசன் என்று பெயர். கண் முன் நிறுத்தினார்கள். வில்பர் ஸ்மித்தும் எழுதியிருக்கிறார். மிசோரி நதியை தாண்டுவது, கிராண்ட் கான்யன் தாண்டுவது ... அப்பப்பா அருமை.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment