ஞாயிற்றுகிழமை - சண்டே எப்பவுமே குஜால் தான். எந்த ஊரிலும்.
என் நண்பர் அஸ்லம் வந்துள்ளார் குடும்பத்தோடு , துபாயிலிருந்து. இடம் வாங்கினார் வெள்ளி அன்று. அஸ்லம் நாற்பது லட்சம் ருபாய் ஒரு இடத்தில் முதலீடு செய்தார். வாழ்த்துக்கள்.
அவர் பதினைந்து வருடங்கள் கழித்து எமிரட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டு விட்டு வேறு ஓர் கம்பெனிக்கு செல்கிறார். நல்ல நேரம் ஜோசியம் படி என்ன ஆகும் என்றுபேசிக்கொண்டு இருந்தோம்.
ஞாயிற்றுகிழமை என்றால் நவரத்ன தைலம் (கேஸ் தேல்) போன்றவைகள் தலைக்கு இட்டு, தேய்த்து விடுவார்கள். ஜில்லென்று இருக்கும். அப்போது அம்மா. இப்போது மனைவி. தலையில் முடி இன்னும் இருப்பது அதனால் தான். ஆலிவ் ஆயில் போடுவேன். தேங்காய் எண்ணெய் நிச்சயம். பத்து நிமிடம் வெயிலில் நிற்பேன். உடம்பில் கொழுப்பு தான் அதிகம்.
பொஹ (அவல்) டிபன் தான். எப்போதும். அம்மா அல்லது அக்கா குடும்பம் வந்தால் பூரி. இன்று அஸ்லம் இருப்பதால் பூரியும் கிடைத்தது. ஒரு பத்து பூரி விளாசினேன். அவர் மகன் முட்டை கேட்டார். முகம் சுழிக்காமல் என் மனைவி செய்து கொடுத்தார். நண்பரின் மகள் செரியால்ஸ் சாபிட்டுவிட்டு, விஜய் டிவியில் மாயஜாலம் பார்கிறார். நண்பர் சண்டே டைம்ஸ் நியூஸ் பேப்பர் உஞ்சலில் உட்கார்ந்து படிக்கிறார். நண்பரின் மனைவி மதியம் மீன் சமைக்கிறேன் என்றார். என் மனைவி சமைத்தவுடன் (வெஜிடரியன்) அவர் சமைப்பார். ரொம்ப நாள் பிறகு சாப்பிடுவேன். அவர்கள் வீட்டில் துபாயில் குடும்பத்தோடு ஒரு பத்து நாட்கள் இருந்தோம், நல்ல கவனிப்பு. மழையில் ஒரு ஏப்ரல்.
பக்கத்தில் தான் மீன் கடை, வஞ்சிரம் கிலோ ருபாய் இருநூற்றி நாற்பது. வாசம் இருக்காது! பிரை வேனும் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். வட சட்டி நான் ஸ்டிக் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் ஒரு பழைய கடாய் இதற்கு போட வேண்டும்.
மீன் என்றால் என் அப்பா நினைவுக்கு வருகிறார். அவர் தான் கல்கத்தா சென்ற பிறகு சாப்பிட பழகியவர். என் அம்மாவும் முகம் சுளிக்காமல் சமைத்து கொடுப்பார். இருபது வருடம் முன்னால் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை. எல்லாம் கடல் மீன்கள்.
வார வாரம் மதியம் உண்டவுடன் ஒரு புஸ்தகம் எடுத்து வைத்து படித்து அப்படியே தூங்குவேன். சாயந்திரம் எழுந்து எதாவது ஷாப்பிங். குழந்தைகளுக்கு கால் பரீட்சை. அதனால் நான் மட்டும் இன்று நண்பர் குடும்பத்துடன் ஷாப்பிங் செல்வேன். துணி எடுப்பார்கள். ரம்ஜானுக்கு. அவர் நாளை துபாய் கிளம்புகிறார். ரம்ஜானுக்கு இந்திய வருவார்கள். வருட லீவு பதினைந்து நாள் ரம்ஜான் சமயத்தில் எடுத்துகொள்வார்கள். மிச்சம் வறுக்கும் வெய்யில் காலம் - மே மாதம். இப்போது ஜூன் கூட. குளோபல் வார்மிங்.
ஆமாம் மீனுக்கும் செக்ஸ்சுக்கும் என்ன தொடர்பு? பூண்டுவிற்கு உள்ள தொடர்பு தான்.
நண்பருக்கு தெலுங்கு - உருது தாய் மொழி. தமிழ்நாட்டில் திருச்சியில் படித்தவர். (அவர் சொன்ன வேசி கதை ஒன்று வேறு ஒரு பதிவில் போடுகிறேன்). தமிழ் நன்றாக எழுதி படிப்பார்.
ஆஹா உலக புகழ் வாய்ந்த எழுத்து என்று என் சென்னை எழுத்தாள நண்பர் சொல்வது காதில் விழுகிறது. கிடக்கட்டும் கழுதை. பாதி நான் எழுதுவதை பார்த்து அதற்கு பதில் போடுவதே அவர் வேலை. அப்புறம் எங்கிருந்து கிடைக்கும் துட்டு. அவர் பீல்டு வர்க் என்று என் வீடு தேடி வந்த கதை, எழுத வேண்டும்.
ஆமாம் சில எழுத்தாளர்கள், செக்ஸ் சமாசாரம் எழுதிவிட்டு, பிச்சை கேட்பது போலே, பணம் தாருங்கள் என்று எழுதுகிறார்கள். மற்றவர்கள் செலவு செய்ய வைக்கிறார்கள். என்ன கொடுமை இது.
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
No comments:
Post a Comment