இந்த கதையை படித்து விட்டு என்னை அடிக்க வராதீர்கள். மூலக்கதை திவ்யா. இது உண்மை என்று சொல்கிறார். இல்லாவிட்டால் கதை என்று எடுத்துக்கொள்ளுங்கள், நான் யாரையும் மனம் புண் படுத்தவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
*****
கோவையின் பிரபல கல்லூரி. ஒரு பரபரப்பான சம்பவம். வானதியின் காதல் கதை.
திவ்யாவின் தோழி வானதி, சிறு வயது முதல் பழக்கம். அவளுடைய தங்கை கௌரி. ரேஸ் கோர்ஸ் பகுதியில் வீடு.
நன்றாக படிப்பவள். ஆனால் விளையாட்டுக்கு வரமாட்டாள். பெண்கள் ஆடும் விளையாடடு எல்லாம் ஆடமாட்டள். பயன்கள் ஆடும் ஆட்டம் தான் ஆடுவாள். அவர்கள் வீடல் ஆம்பிள்ளை பயன் இல்லாத வீடு அப்படி வளர்த்துவிட்டோம் என்று சொல்வார்கள்.
திவ்யாவும் இவளும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரே வகுப்பில் படித்து காலேஜுக்கு மட்டும் இடம் மாறினர். மத போதகர் காலேஜில் எஞ்சினீரிங் - திவ்யா. பிஎச்ஜியில் பயோ செமிச்ட்ரி - வானதி.
பதினெட்டு வயதில் வானதி படு அழகு. வாரம் ஒரு முறை மூஞ்சி வாக்சிங் மட்டும் தவறாமல் செய்து கொள்வாள். அவள் பட்ட பெயரே சவரம் செய்த பிகர். சிலருக்கு அப்படித்தான். அவளுக்கு குரல் கொஞ்சம் கணீர் என்று இருக்கும். கௌரி அவளுக்கு நேர் எதிர். பெண்மை என்றாள் ஒரு நடிகையின் அழகு.
எல்லோரோடும் அன்பாக தான் பழகுவாள் வானதி. வானதி பாத்ரூம் போவதற்கு மட்டும் தயங்குவாள். ஓபன் சீட் (டோர் இல்லாத) பெண்கள் ஓய்வறையில் உட்கார மாட்டாள். கதவு வைத்த இடத்தில் தான் செல்வாள். ஒரு முறை டூர் சென்ற போது கூட கஷ்டப்பட்டு மரத்தின் மறைவில் சென்றாள். திவ்யாவிற்கு ஆச்சிரியம். ரொம்ப தான் தயங்குகிறாள் என்று. பெண்கள் முன்னிலையில் பெண்கள் ஒருவரும் சங்கோஜப்பட மாட்டார்களே?
ஒரு முறை புல் தரையில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்த போது, வானதி உட்கார்ந்து எழும் போது திவ்யாவின் கை பட்டு விட்டது, 'அந்த' இடத்தில். என்னடி கட்டி வந்திருக்கா அங்கே? ஆமாம் என்று சொல்லிவிட்டாள். டாக்டர் கிட்டே காட்டனும். பெரிய விஷயம் எதுவும் பண்ணிடாதே இதைன்னு சொல்லிட்டாள். அன்றிலிருந்து திவ்யாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு.
எல்லோரை போல அவள் வயசுக்கு வரவில்லை காலேஜ் செல்லும் வரையில். அதன் பிறகு மஞ்சள் நீராட்டு நடந்தத என்று கூட தெரியாது. எங்கள் ஜாதியில் வெளியே சொல்ல மாடோம் என்று சொல்லிவிட்டாள். சானிடரி பேட் கூட ஷேர் செய்ததில்லை, திவ்யாவிடம். எமெர்ஜென்சி? ஊஉம்ம்ம்.
வானதிக்கும் இளமை ஊஞ்சல் ஆடியது. செந்திலோடு காதல் அரும்பியது. சைவக் காதல். தினமும் பேசாமல் இருக்க மாட்டார்கள். மூன்று ஆண்டுகள் இது தொடர்ந்தது. டிபன் கூட சாப்பிடவில்லை. அவனுடைய இரட்டை சகோதரன் கூட கூசாமல் கேட்டு விட்டான். எதாவது செஞ்சியாடா? நோ. இவனது காதல் தெய்வீகமானது. சிலர் அப்படித்தான்.
*****
வானதியின் அப்பா ஒரு ஜாதி வெறியன். சங்கம் அது இது என்று போராட்டம் நடத்துபவன்.
செந்தில் ஒரு நாள் நேரடியாக வானதி வீடு சென்று பெண் கேட்டு விட்டான். நான் நல்லா வெச்சு காப்பத்துவேனுங்க.
அவர் துப்பாக்கி எடுத்து சுட வந்து விட்டார். செந்தில் செய்வது அறியாது ஓடி வந்துவிட்டான்.
வானதி வீட்டில் பூட்டி வைத்து விட்டார்களாம். பணக்காரர் ஆனதால் விஷயம் வெளியில் கசிந்தது. ஒரு பிரபல வார இதழ் ஒரு ஆய்வு நடத்தி அதை பற்றி எழுதியது. "ஜாதி வெறியன் வீட்டில் பூட்டி வைத்த பைங்கிளி". அமைச்சர் பலம் இருந்த காரணத்தால் விஷயம் அமுங்கியது. ஆள் துணையுடன் வந்து பரீட்சை எழுதி பாஸ் செய்தாள் வானதி. செந்திலை ஒரு தடவை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. யாரோடும் பேசவில்லை. ஒரே சோகம் தான்.
விஷயம் பெரிதாகியது. செந்தில் விடுவதாயில்லை.
பேரூர் கோவிலில் வானதியின் அம்மாவை ஒரு நாள் பார்த்தான்.
"செந்தில் நீ வேற பொண்ணு ஒருத்தியே கட்டிக்கோ" அவர் அழுதுகொண்டு சொன்னார் - "அவ முழு பொண்ணு இல்லேடா! கல்யாணம் பண்ணறது வேண்டாம்னு கட்டி காப்பத்துனோம். இப்படி ஆகியிருச்சு.". இவனுக்கு புரியவில்லை. புரிய நேரம் ஆயிற்று.
******
வானதி ஒரு திருநங்கை. (இதே மாதிரி சாந்தி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஓட்டபந்தய வீராங்கனை. கலைஞர் உதவி செய்தார். இப்போது அவர் ஒரு கோச்.). திவ்யாவோடு பிறந்ததும் ஒரு பெண் என்பதால், அவளுக்கு ஆண்கள் பற்றி சரியாக விவரம் இல்லை. மேலும் பாதி பெண்களுக்கு கல்யாணம் ஆகும் வரை நெஞ்சு கொஞ்சம் தட்டை தான் என்று விட்டு விட்டாள்.
*****
செந்தில் திவ்யாவிடம் சொன்னான். திவ்யாவிற்கு தெரியவில்லை ஆண்கள் காதல் பற்றி. என்ன இருந்தாலும் பரவாயில்லை. செந்தில் சொன்னான் அவள் தான் எனக்கு எல்லாம், இல்லையென்றால் செத்து விடுவேன் என்று. செந்திலின் பெற்றோருக்கு இது வேண்டாதே வேலை என்றே தோன்றியது.
பிற்பாடு திவ்யா கோபம் வந்த நண்பர்களுடன், அவருடைய அப்பா மற்றும் சிலரோடு அவர்கள் வீட்டில் சென்று பார்த்தார்கள், ஒரு முடிவு கட்டும் நோக்கோடு.
எதற்கு அவ்வளவு முட்டாள்தனமாக செய்தீர்கள் என்று அவளுடைய அப்பாவிடம் கேட்டேன். "புறககும் போதே, இரண்டும் இருந்தது. பெண் தான், ஆனா ஆண் உறுப்பும் இருந்தது. டாக்டர் கிட்டே காட்டினோம். பொண்ணா வளர்த்திடுங்கன்னு சொன்னார். பத்து வயசுக்கு மேல ஒரு ஆபரேசன் பண்ணி முழு பொம்பளயான்னு செஞ்சிடடலம் சொன்னார்! குழந்தை தான் பெத்துக்க முடியாது. கருப்பை வளர்ச்சி இருக்காது. தத்து எடுத்துக்கலாம். ஆனா விதி பாருங்க, அவளுக்கு பெல்விக் போனே சரியாக வளர வில்லை அதனாலே டிலே ஆகிருச்சு. இந்த காதல் பிரச்னை வந்திருச்சு."
*****
செந்தில் ஒற்றை காலில் நின்றான். காதல் வாழ்ந்தது. வெற்றி பெற்றது.
வானதி அரசாங்க ரெகார்ட் படி பெண். அதனால் கல்யாணம் சிம்பிளாக மருதமலையில். யாரையும் அழைக்கவில்லை, திவ்யா உட்பட. திவ்யாவிற்கு ரொம்ப கோபம்.
*****
ஒரு வருடம் ஆனது. செந்தில் அமெரிக்கா படிக்க சென்றான். வானதி அப்பா வீட்டில்.
கோவையில் அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை.
வானதிக்கு ஆபரேசன் தாய்லாந்தில் செய்தார்கள். இரண்டு வருடம் ஹார்மோன் சிகிச்சை செய்து, இப்போது பெண்மை மிளிரிதாம்.
*****
வானதி இப்போது பிலேதேல்பியாவில் வாழ்ந்து வருகிறாள். அழகாக வாழ்கிறார்கள். தம்பி குழந்தை ஒன்றை தத்து எடுத்தார்களாம். அவள் துணைவன் இப்போது ஒரு பல்கலைகழகத்தில் ஆசிரியர். பி.எச்.டி. படித்தவன்.
திவ்யா இது வரையில் வானதியோடு பேசவில்லை.
நான் அவர்களை இது வரையில் பார்த்ததில்லை!
ஐந்து முகங்கள் – கடிதம்
13 hours ago
4 comments:
அட்டகாசமா எழுதுறீங்க. கோவை பாசை வேறே உங்களுக்கு வருது. வாழ்த்துக்கள்!
நல்லாருக்கு கதை. உண்மையிலே நடந்திருந்தாலும் பாராட்ட வேண்டியதுதான். குறிப்பாக செந்தில். எல்லாரும் வாழ்க. நலமுடன் வாழ்க.
அட்டகாசம்! நல்லாருக்கு கதை. வாழ்த்துக்கள்!
செந்தில், உங்களுக்கு வாழ்த்துக்கள்!
செந்தில் பாராட்டுக்குரியவர். அந்தப் பெண் வானதி கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
Post a Comment