எனதருமை வாசகிகளே! நான் இப்போ எழுதப்போறதை பார்த்தால் என் பொண்டாட்டி என்னை திட்டி தீர்து விடுவாள்.
திவ்யாவை பற்றி எழுதினாலும் எழுதினேன் வாசகர்களோடு ஒரு தொடர்பு கிடைச்சுருச்சு...
நிறைய வாசகர்கள்... அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம். என்னவெல்லாம் சொல்கிறார்கள். தெரியாத்தனமாக ஒரு வாசகி கெஞ்சி கேட்டாள் என்பதற்காக என்னோட அலைபேசி எண் கொடுத்துவிட்டேன். கொல்கிறாள் அவள் ஒருத்தி. இன்னும் புதுசு போடலையா... போடலயானு....
அப்புறம் இன்னொருத்தி. இப்போது அவள் இருப்பது அமெரிக்காவிலே. எனக்கு இந்த ஜோசியம் கொஞ்சம் தெரியுமா, கல்யாணம் எப்போன்னு பார்த்து சொல் சொல்கிறாள். போட்டோ வேறே அனுப்பினா..... பொண்டாட்டி கொல்ல போரா...
(தயவு செஞ்சு வயசு, பேர் மட்டும் கேட்கவேண்டாம்...)
பல பேர் என் குடும்ப அங்கமாகி விட்டார்களாம். ஒருத்தி என் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்ததை அவளுக்கு வாங்கி கொடுக்கணுமாம். லாலிபாப் வேற ஒருத்திக்கு வேணுமாம்!
நிலகிரிஸ் பன் வேண்டுமாம் அவளுக்கும்.. எங்கே பொய் முட்டிகொள்வதோ?
சின்ன வயுசல பண்றதே எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ திருமபவும் ரிப்பிட்டு பண்ண முடியாது!
கவிதைகள் பல எழுத சொல்றாங்க. வயசாயிடுசுங்க... அவ்வளவு சீக்கிரம் எழுத வராது.
சரி அதை பற்றி ஒரு ப்லோக் போஸ்ட் போடலாம்னு தான் தோனுது.
இளமையில் கல் என்பது கள் ஆகிவிட்டது. இப்படி பதிவுகளின் மேல போதையா?
தொழில் விட்டு விட்டு, என்ன பண்றாங்க? ப்லோக் படிக்கிறாங்க. ஐடி வேலை எல்லாம் கொல்லுதுங்க இப்போ. வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருகிறார்கள். புதுச்புதுசா படியுங்க. எக்ஸ்ட்ராவா வேலை செய்யுங்க! போதனை தான் குடுக்கவேணும். அது வேணா எழுதறேன்.
அட படிச்சா முட்டாளுங்களா... என் பழைய போஸ்ட்ஸ் எல்லாம் படியுங்க, என் தொழிலே வேற. தினம் ஒன்னு ரெண்டு போடறேன். மெயிலுக்கு பதில் போடறேன். கமண்டுகள் கேனத்தனமாக போட வேண்டாம்... ப்ளீஸ்.
கருமம் கருமம் அறிவாளிகளின் முட்டாள்தனமான ஆசை என்பது இது தான். இன்டலெக்சுவல் இன்பாச்சுவேசன்.
நான் பெரிய எழுத்தாளர் இல்லேங்க. எதோ என்னால முடிஞ்ச வரை தமிழ் கற்றுக் கொள்கிறேன்.
தொழிலா எழுதுறவங்க புக்கை காசு கொடுத்து வாங்கி படியுங்க. இண்டேர்நெட்டுல படிக்க வேண்டாம். உங்களுக்கும் டைம் வேஸ்டு. மெயில் வேற பண்ணி தொலைப்பீங்க. போன் கால் வேற செய்வீங்க. அவங்களுக்கும் பாவம் தேவையில்லா ரத்தக்கொதிப்பு. ஆஸ்பத்திரினு அலைய வேண்டியது தான். மிருக சுழற்சி!
நான் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. இதை தான் அளவுக்கதிகமான படைப்பு ஆவல் என்று இலக்கிய வல்லுனர்கள் சொல்வார்கள். எக்சச்சிவ் க்ரெயெடிவிட்டி!
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
4 hours ago
3 comments:
Looks like you are cleaning comments?
There was an email id, which I published by mistake. Now with moderation, I am rejecting in the beginning itself.
Post a Comment