காதல் அழகானது தான்
நிச்சயம் சுகமானது
உயிர் உள்ளவரை
உன்னோடு வாழும் வரை
இரவுக்கு நிலா அழகு
எனக்கு நீ அழகு
செடிக்கு பூ அழகு
பெண்மைக்கே நீ அழகு
காத்திருத்தல் மாயம் என்றாய்
காதலே மாயம் என்றேன்
பள்ளியில் கண்டேன் உன்னை
பள்ளியறை சேர்த்தேன்
வானத்தில் விடிவெள்ளி
வழித்துணைக்கு உதவுகின்றது
என் வாழ்க்கைக்கு உரமானாய்
ஈரமான நினைவுகள் ஆனாய்
முகம் நோக்கி பார்க்க
வெக்கமதை விட்டுவிடு
முடிவில்லா இன்பத்திலே
என் உடலில் சங்கமித்துவிடு
( இதை ஹிந்தியில் எழுதி பத்து வருடம் ஆச்சு)
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago
No comments:
Post a Comment