எனக்கு ஒரு ஞாபகம்.... தோசை சாப்பிட்டது சிறு வயதில் நாங்கள் கல்கத்தாவில்இருந்து மும்பை வழியாக ஷிர்டி சென்ற போது, சாப்பிட ஞாபகம். காமத்து ஹோட்டல் பண்ட்ரவில். என் அத்தை அங்கு இருக்கிறார். ஆஷா போன்ஸ்லே வீடு அருகில். இப்பொது ஒரு ப்ல்ய் ஓவர் கட்டுகிறார்கள். அது ஒரு கன்ற்றவர்சிஆனது. ரோடில் எல்லாம் சோர் பஜார் அருகே, சுட்டு விற்றார்கள் மலையாள நண்பர்கள்.
தோசைக்கு தேங்காய் சட்னி, மற்றும் சாம்பார் அதுக்கு சூப்பர் கம்பினசொன். என் மனைவி மிளகாய் போடி (சட்னி பொடி) வைத்து தான் சாப்பிடுகிறார்.
ரைஸ் ரொட்டி போலே உள்ளது என்றேன். ஒரு ஆறு வயது இருக்கும். என்அக்காவிற்கு ஒரு மசால் தோசை சாப்பிட முடியவில்லை. "தம்பி இந்த ஆலு எடுத்துகொள்" என்று கட்டாயபடுத்தியது (காஸ் என்று கிண்டல் செய்வேன்) மறக்கவில்லை. ட்ரைனில் காஸ் பட்டாசு விட்டு அசிங்கபட்டது ஞாபகம் மறக்கவில்லை. என்ன செய்வது எல்லாம் கிழங்கு மாயம்.
சென்னை வேலைக்கு சென்ற போது, சரவணா பவனில் (அதிகம் காசு வாங்கினார்கள் அப்போதே) சாப்டேன். ஐந்து வகை சட்னி. எங்கள் ஊர் புளி ஊறுகாய்யை , தமிழ்நாட்டில் சட்னி என்று கொடுக்கிறார்கள். நம் ஊரு போலவருமா? ஆனால் ட்ரை புருட் ரவா தோசை அருமை. ஒரு முறை சுஜாதா வோடு சாப்பிட்டேன், பிடேர்ஸ் ரோடு கிளையில்.
கீதா பவன், பாண்டி பஜார் ஒரு நல்ல இடம், தோசை மற்றும் பணியாரம் சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாது. கே.பி.சிஸ்டம் ஜோசியர் சுப்பிரமணியம் அங்கு அறிமுகம் ஆனார். மயிலாப்பூர் அடையாறு ஆனந்த் பவன் (குளம் எதிரில்) ஒரு அருமையான அடை கிடைக்கும். அவியல் கூட்டு சூப்பர்.
இங்கு பெங்களூரில் தோசை எல்லா கடைகளிலும் சூப்பர். இங்கே ஹோட்டல் பெயர்கள் சாகர் என்று இருக்கும் (முடியும்). இப்போது ஒரு தோசா பாயிண்ட் என்று ஜெயா நகரில் இருக்கிறது. இருபது வகை தோசை உள்ளதாம். ஒரு முறை, என் குடும்பம் பதினோரு வகை தோசை ஆர்டர் செய்து ஷேர் செய்தோம். டின்னெர் ஓவர். காபியோடு நானூறு ருபாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment