Showing posts with label தூங்காதே தம்பி தூங்காதே. Show all posts
Showing posts with label தூங்காதே தம்பி தூங்காதே. Show all posts

Wednesday, September 24, 2008

தூங்காதே தம்பி தூங்காதே

தூக்கம் ஓட்ட வேண்டும். வேலை இருக்குது. டைம் பாஸ் என்ன செய்ய.

பிசுனஸ் எல்லாம் இப்போ கம்மி. எதோ ஓடிக்கொண்டு இருக்கு.

அதுக்காக சும்மா தூங்க முடியுமா?

இதோ அதுக்காக ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு... (பாடி பாருங்க)

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு
அதிஸ்டமில்லையென்று அலட்டிக்கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்
இங்கு குரட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

ஒரு படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
ஒரு கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் கொள்கையிழந்தான்
சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சந் தர மறுத்திடுமா
எனக்காக ஒன்று உனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவரும் இல்லையென்பார்
மடிநிறையப் பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எனக்காக ஒன்று உனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே.